Monday, March 27, 2006

தமிழ் நடிகர்களின் சாஃப்ட்வேர் கம்பெனி - 6

கொஞ்ச நாட்களுக்கு முன்பு எழுதியது.. இப்போது தொடர்கிறேன்.

முந்தைய பாகங்கள் : ஒன்று , இரண்டு , மூன்று , நான்கு, ஐந்து
======================

டெனிஸில் காபி குடித்து விட்டு ஆபீஸுக்குள் நுழையும் போது மாலை 5 மணி ஆகியிருந்தது.

கவுண்டமணியும் செந்திலும் ராமராஜனிடம் குழைந்து குழைந்து பேசிக் கொண்டிருந்தார்கள்."என்னமோ போப்பா.. எப்பிடித் தான் இப்பிடியெல்லாம் டிசைன் பன்னறியோ.. அதுலயும் இன்னிக்கு மீட்டிங்ல போட்டியே ஒரு ஸ்லைடு அடடடடா..ஸ்லைடுன்னா அது ஸ்லைடு...சும்மா மஞ்சக் கலர்ல ஜிகு ஜிகுன்னு...ஹும்.. மத்த பயலுகளும் வெச்சிருக்கானுகளே ஸ்லைடுன்னு.. செத்தவங் கையில வெத்தலைய குடுத்த மாதிரி..." என்ற படி செந்தில் பக்கம் திரும்பி

" என்றா சொல்ற மண்டையா..?" எனக் கேட்க"அக்காம்ணே .. அண்ணன் ஸ்லைடு மாதிரி வருமா.." என செந்திலும் ஒத்து ஊதினார்..

" உங்குளுக்கு புரியுது.. புரிய வேண்டியவங்களுக்கு புரியலையே... அது சரீ... என்ன என்னைக்குமில்லாத திருநாளா ரெண்டு பேரும் ஜோடியா வந்து ஒரேடியா ஐஸ் வைக்கறீங்க... என்ன விஷயம்..." ராமராஜன்"

அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா... இந்த மண்டையன் என் சைக்கில ஓசி வாங்கீட்டுப் போயி முல்லுமேல உட்டு பஞ்சர் பண்ணீட்டு வந்துட்டான் ...அதான் இன்னைக்கு ஒரு நாளைக்கு வீட்டுல ட்ராப் பண்ணீட்டேன்னா உனக்கு புண்ணியமாப் போகும்.." கவுண்டமணி முடிக்க

"அக்காம்ணே.." அன அனத்தினார் செந்தில்கவுண்டமணி செந்தில் பக்கம் திரும்பி .." என்ன ஒக்காம்ணே... பண்றதயும் பண்ணீ போட்டு.. அக்காம்ணே ... அக்காம்ணே ன்னு முக்கீட்டு இருக்கே... உன்னால நான் பாரு எப்பிடிக் கெஞ்சீட்டிருக்கேன்னு.."

ராமராஜன் " சரி சரி உடுங்க .. மானஸ்தனத் திட்டாதீங்க....அப்புறம்...வக்கிப்புல்லு விக்கற வெலைக்கு வீட்டுக்கெல்லாம் வந்து உடமுடியாது... போற வழில எங்காவது இறக்கிவிடுறேன்.. அப்பிடியே நடந்து போய்க்கங்க.."

கவுண்டமணி மனதிற்குள் "எப்பிடியும் இன்னமும் கொஞ்சம் ஐஸ் வச்சு வீட்டு வரைக்கும் போயிடலாம்" என நினைத்து "நீங்க எப்பிடி சொன்னாலும் ஓகே தானுங் தம்பி" என்று கூறி அங்கிருந்து கிளம்பினார்கள்.

எதிரே சுந்தர்ராஜனும் சத்யராஜும் வர சுந்தர்ராஜனை ஓரக்கன்ணால் பார்த்துவிட்டு சத்யராஜை நோக்கி " ஏங்க பிரதர்... எங்களயெல்லாம் காபி குடிக்க கூப்புட மாட்டீங்குளா... தண்ணியடிச்சுட்டு சைதைத் தமிழரசிக்காக ஊர்கடையெல்லாம் ஒரு வழி பண்றதுக்குனா மட்டும் நாங்க வேணும்... இதுக்கெல்லாம் மீட்டிங்ல கவுந்தடிச்சுட்டு தூங்குற ஆளத் தான் கூப்புட்டுட்டு போவீங்களா.."

சுந்தர்ராஜன் முறைத்துக்கொண்டே அங்கிருந்து நகர " அப்பிடியெல்லாம் இல்ல பிரதர் .. சுகன்யா டீச்சர் இந்த ஆளு வீட்டுக்கு பக்கத்து வீடு.. அதுகட்ட ஜாவா கத்துக்க ஒரு அறிமுகம் வேணும்ன்னு தான்.."

'அடங் கொண்ணியா .. ஜாவா கத்துக்கிற மூஞ்சியப் பாரு... நீ என்ன கத்துக்கப்போறீயோ இல்லியோ.. அது இப்ப கராத்தே கத்து வெச்சிருக்குது தெரிஞ்சுக்கோ.."

அதற்குள் ராமராஜன் கையில் சாட்டையும் பால்கேனுமாய் வந்து கவுண்ட்ஸின் கையில் திணித்து " ஃபாலோ மீ" என சொல்லி விட்டு வேகமாக முன்னே நடக்க...

கவுண்ட்ஸ் ஸ்லோ மோஷனில் செந்தில் பக்கம் திரும்பி முறைக்க, செந்தில் புரிந்து கொண்டு பவ்யமாக அந்த பால்கேனை வாங்கிக் கொண்டு முன்னால் நடந்தார்.

கவுண்ட்ஸும் " வர்றெம் பா" என சத்யராஜிடம் டாடா காட்டிவிட்டு பின்னாலேயே போனார்.

பார்க்கிங்லாட்டில் ராமராஜனின் வண்டியில் கோவை சரளா அமர்ந்திருந்தது கொஞ்ச தூரத்திலேயே தெரிந்தது...செந்தில் " யக்கா.." என ஓட முயல கவுண்டமணி செந்தில் சட்டையைக் கொத்தாகப் பற்றி "அடடா.. பாசப்பறவைக தாம்போ... கொஞ்சம் அடங்கு" என்று சொல்லி ராமராஜனுக்கு ஐஸ் வைப்பதற்காக

" ஹோய் ..தம்பியோட புது வண்டில எதுக்கு உக்கார்ந்து அழுக்கு பண்ணுற..ஓடிப்போ" எனக் கத்த

"உக்கும் .. ஒசில சவாரிக்கு வந்துட்டு பேசற பேச்சப் பாரு.. நான் எதுக்கு உக்கார்ந்துட்டிருக்கேன்னு அவரயே கேளு" என ராமராஜனைக் காட்டிவிட்டு கழுத்தை ஒடித்துத் திருப்பிக்கொள்ள

" ஏண்ணே.. வாயக்குடுத்து வாங்கிக்கட்டிக்கிறீங்க.. நாங்க சித்திரகனிக்கு கரகாட்டம் ஆட பெர்க்ளி ஸ்டூடண்ஸ்க்கு ட்ரெயினிங் குடுக்கத் தான் சேர்ந்து போறோம்" ராமராஜன்


"இல்லப்பா .. இந்த வண்டி மண்டையன் அந்த அம்முணி நீயு நான்.. இந்தக் காம்பினேஷன் பிரச்சனையாவே இருக்குமேன்னு யோசிக்கறேன்.."

'அதெல்லாமொன்னுமுல்ல கம்முனு வாங்க ' என வண்டியை ஸ்டார்ட்! செய்து ' இந்தாடி கப்பக் கெழங்கே..' பாட்டை சத்தமாக வைத்து ஓட்ட ஆரம்பித்தார்... ' ஐத்தலக்கா ஐத்தலக்கா ஐத்தலக்கா ஐ' என குஷியாய் கூடவே பாடிக்கொண்டி வந்தவர்கள்

" என்னண்ணே ..ரோட்டுல டயர் ஒண்ணு ஓடீட்டிருக்கு" என செந்திலின் அலறல் கேட்டு என்னவென்று பார்ப்பதற்குள் வண்டி குடை சாய்ந்தது..

"நான் அப்பவே சொன்னேனேப்பா.. " எனக் கதறிக் கொண்டே கீழேவிழுந்தார் கவுண்ட்ஸ்.

சில நாட்களுக்குப் பிறகு...தன் க்யூபில் அமர்ந்து மும்மரமாக வேலை செய்து கொண்டிருந்தார் கவுண்டமணி.

செந்தில் அந்தப்பக்கம் வர " டே தம்பி ..இங்க வாப்பா.." என அழைக்க .."என்ன இன்னைக்கு ஒரே கொஞ்சலா இருக்கு" என நினைத்துக் கொண்டே " என்னண்ணே.. " எனக் கேட்டுக்கொண்டே வர..

"அட .. ஒண்ணுமில்லப்பா ... இந்தா இங்க இருக்கற புது சிஸ்டமெல்லாம் கொண்டு போயி லேப் ல வெச்சுட்டு வந்துடு ..செரியா..' எனக் கொஞ்ச செந்திலும் உள்ளே இருந்த ஸிஸ்டத்தை தாவிக் கொண்டு க்யூபை விட்டு நகர்ந்தார்..

செந்தில் வெளியே சிறிது தூரம் போயிருந்த நிலையில் க்யூபை விட்டு எட்டிப் பார்த்து.." தம்பீ .. அப்பிடியே அந்த லேப்ல தேவையில்லாம எதாவது லைட் எரிஞ்சாலும் ஆஃப் பண்ணீட்டு வந்துடும்மா.. கரண்ட் பில் கட்டியே இந்த க்வாட்டர் போனஸ் போயிடும்பா.." என பவ்யமாகக் கூற..

"சேரிண்ணே.." என நல்ல பையனாக லேப்க்கு விரைந்தார்.கொஞ்ச நேரம் போனது.

அஜித் மாட்யூலும் விஜய் மாட்யூல்லயும் யெப்பவும் ப்ரச்சினைதான்.. ரெண்டும் இண்டகரேட்டே ஆகமாடீங்குதே ..என தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தார் கவுண்டமணி.

தப தப என ஆட்கள் ஓடி வரும் சத்தம் கேட்க .. க்யூபிற்கு வெளியே வந்து எட்டிப் பார்த்தார். செந்திலை, வடிவேலுவும் இன்னும் சிலரும் அடிப்பதற்கு துரத்திக் கொண்டு வந்தனர். டக்கென க்யூபை விட்டு எழுந்து அவர்களைத் தடுத்து

"அட கொழந்தப் பயனப் போட்டு ஏம்பா இப்பிடி தொரத்தீட்டு வர்ரீங்க" என அடைக்கலம் கொடுக்க..

வடிவேலு.. " என்னது .. இவனா கொழந்தப் பயன் .. இவனேனே... " என அடிக்க முயல லாவகமாக விலக்கினார் கவுண்ட்ஸ்.

"ஏய் .. இங்க நான் இருக்கும் போது அவனை அடிக்க மத்தவங்கள விடுவனா.." என முறைக்க செந்தில் " என்ன இது டபுள் மீனிங்ல பேசறாரு" என திருதிருவென முழித்தார்.

ஒருவழியாக வடிவேலுவை அனுப்பி வைத்துவிட்டு " என்றா பன்னுன... அவனே ஒரு டென்ஸன் பார்ட்டி அவன்கிட்ட போயி என்னத்தடா பண்னினே.."

"இல்லண்ணே .. நீங்க லேப்ல சிஸ்டத்தை வெக்க சொன்னீங்களா... " என இழுக்க

"கீழ கீது போட்டு ஒடச்சிட்டையா .." என அலற

'இல்லண்ணே ... பத்திரமாத் தான் வெச்சேன்... அப்புறமென்ன சொன்னீங்க" செந்தில்

"என்றா சொன்னேன்" கவுண்ட்ஸ்

"சும்மா எரியற லைட்டெல்லாம் ஆஃப் பண்ண சொன்னீங்கல்ல.."

'ஆமா .. அதிலென்னடா பிரச்சினை... "

"நானும் எல்லா ட்யூப் லைட்டையும் ஆஃப் பண்ணினேன்... கெளம்பலாம்ன்னு பார்த்தா.. லேப் முழுக்க சின்ன சின்ன டிஸ்கோ லைட்ட போட்டு வெச்சிருந்தாங்க ... அது எதுக்கு தண்டத்துக்குன்னு அதையும் ஆஃப் பண்ணீட்டு வந்தா ... வெளிய வரும் போது பார்த்த கைப்புள்ள அடிக்க வந்துட்டான்..."

" டே .. இரு இரு ...லேப் ல எதுக்குடா டிஸ்கோ லைட்டு போட்டு வெச்சிருந்தான் அவன்... அவன் ரவுசு தாங்கலடா... "

" ஆமாண்ணே ... அதுலயும் பாருங்க ... அழகா நம்மூருல கயிறு மாதிரி இருக்குமில்லனே... இந்தப் பய பாருங்க ..டப்பா டப்பா வா வாங்கி வெச்சிருக்கான் ... அதுல வேற ஏதோ சிஸ்கோ , இண்டெல் ன்னு எழுதியிருக்கு .. ஹீ ஹீ ஹீ" என சிரிக்க

கவுண்ட்ஸ்க்கு ஒரு நிமிஷம் மயக்கமே வந்துவிட்டது ...நா தழுதழுக்க ' டே மண்டையா .... உனக்கு என்ன பாவம்டா பண்ணினேன்...ஏண்டா இப்பிடி சோதிக்கற.... ரவுட்டர் சர்வர்லாம் உனக்கு டிஸ்கோ லைட்டாடா... " என அருகிலிருந்த மவுஸை எடுத்து அடிக்க முயலநழுவி

" நீங்க தானே .. எரியர லைட்டயெல்லாம் அணைக்கச் சொன்னீங்க" என கத்திக் கொண்டே தப்பியோட

கவுண்ட்ஸ் எரிந்த மவுஸ் மிகச் சரியாக அந்த நடந்து போய்க் கொண்டிருந்த அஜித் தலையில் லேண்ட் ஆனது..

இதைப்பார்த்த கவுண்ட்ஸ் ஒரு க்யூபில் மறைவாக பதுங்க..

அஜித் ஸ்லோமோஷனில் திரும்ப

அங்கே தூரத்தில் சிரித்த படி விஜய் கையில் கீபோர்டுடன் வந்து கொண்டிருந்தார்.

பக்கத்தில் வந்ததும் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டு அஜித் விஜையை ஒரு கேள்வி கேக்க ... ஆடியன்ஸோடு கவுண்ட்ஸ் டென்சனாகிவிட்டார்...

என்ன கேள்வி என சிறப்பாக கெஸ் பண்ணுபவர்களுக்கு பரிசு :)

14 comments:

பொன்ஸ்~~Poorna said...

சுப்ப்பர்ங்க.. கொன்னுட்டீங்க போங்க.. எல்லா பாகமும் சுப்பர். தொடர்ந்து எழுதுங்க..

Suka said...

நன்றி பொன்ஸ் :)

Karthik Jayanth said...

// சுகன்யா டீச்சர் இந்த ஆளு வீட்டுக்கு பக்கத்து வீடு.. அதுகட்ட ஜாவா கத்துக்க ஒரு அறிமுகம் வேணும்ன்னு தான்.." //

இது பழசு. இப்ப சினேகா டீச்சர் பல்சர் 3.0 ந்னு ஒரு கோர்ஸ் எடுக்குறாங்க. அதுதான் டாப். நான்னெல்லாம் அத படிச்சதுனாலதான் இங்க வரமுடிச்சது

// சித்திரகனிக்கு கரகாட்டம் ஆட பெர்க்ளி ஸ்டூடண்ஸ்க்கு ட்ரெயினிங் குடுக்கத் தான் சேர்ந்து போறோம்"

:-))))))))))

// கரண்ட் பில் கட்டியே இந்த க்வாட்டர் போனஸ் போயிடும்பா.."

Reality strikes

// அஜித் மாட்யூலும் விஜய் மாட்யூல்லயும் யெப்பவும் ப்ரச்சினைதான்.. ரெண்டும் இண்டகரேட்டே ஆகமாடீங்குதே ..

2 பேரும் எழுதுறது கமென்ட்ஸ்தான்(பன்ச் டயலாக்). இதுல என்ன பிரச்சனை :-)

// லேப் முழுக்க சின்ன சின்ன டிஸ்கோ லைட்ட போட்டு வெச்சிருந்தாங்க ... அது எதுக்கு தண்டத்துக்குன்னு அதையும் ஆஃப் பண்ணீட்டு வந்தா //

இது ஹைலைட் :-))))))))))))))

// அஜித் ஸ்லோமோஷனில் திரும்ப

அங்கே தூரத்தில் சிரித்த படி விஜய் கையில் கீபோர்டுடன் வந்து கொண்டிருந்தார். //

மறுபடியும் டமாசு :-))))

Suka said...

நன்றி கார்த்திக் :)))

ஒரு சின்ன சவால்...


தொடர்ச்சி....

பக்கத்தில் வந்ததும் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டு அஜித் விஜையை ஒரு கேள்வி கேக்க ... ஆடியன்ஸோடு கவுண்ட்ஸ் டென்சனாகிவிட்டார்...

என்ன கேள்வி என சிறப்பாக கெஸ் பண்ணுபவர்களுக்கு பரிசு :)

ட்ரை பண்ணறீங்களா

Suka said...

ஒரு சின்ன சவால்...


தொடர்ச்சி....

பக்கத்தில் வந்ததும் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டு அஜித் விஜையை ஒரு கேள்வி கேக்க ... ஆடியன்ஸோடு கவுண்ட்ஸ் டென்சனாகிவிட்டார்...

என்ன கேள்வி என சிறப்பாக கெஸ் பண்ணுபவர்களுக்கு பரிசு :)

ட்ரை பண்ணறீங்களா

Siva said...

எல்லா பாகத்தயும் இப்ப தான் படிச்சேன். ரொம்ப நல்லா இருக்குங்க !!..

வாழ்த்துக்கள் !!!

Suka said...

நன்றி சிவா...

தெரியுங்களா ..எங்க ஊரை (சிங்காநல்லூர்) கூட சிங்கை ன்னு தான் சொல்லுவாங்க :)

சுகா

பொன்ஸ்~~Poorna said...

என்னாங்க? தலையைத் தடவிகிட்டே "தல போல வருமா"ன்னு பாட ஆரம்பிச்சிட்டாரா?

Suka said...

அடடா..பொன்ஸ் ..அவரு பாடர மூடுல இல்ல பஞ்ச் டயலாக் மூடுல இருந்துட்டாரு.. :)

அதையும் பதிவிட்டுட்டேன் ..பாருங்க

G.Ragavan said...

நல்லாருக்கு சுகா. நட்சத்திர வாரத்துல சிரிக்க வெச்சுட்டீங்க. பிரமாதம்.

Suka said...

வாங்க ராகவன்..

நன்றி..

பொன்ஸ்~~Poorna said...

சுகா, இத்தனை பின்னூட்டம் வந்துவிட்டது.. இப்போவாவது தொடர்ந்து எழுதுங்கள்...

Suka said...

கண்டிப்பாக பொன்ஸ்.. இன்னைக்கு கொஞ்சம் யோசித்து ..தொடர்ந்திடரேன் :)

சுகா

Anonymous said...

யப்பா பின்றீங்க

கண்டினியூ பண்ணுங்க சார்