Tuesday, March 28, 2006

சென்னைத் தொலைக்காட்சி நிலையம்

கொஞ்ச நாள் முன்பு என் நண்பர் ஒருவர் வீட்டிற்கு போயிருந்தபோது HDTV யில் இரண்டு வெவ்வேறு சேனல்கள் ஒடிக்கொண்டிருந்தது... கொஞ்சநேரம் ரசித்துவிட்டு ..பின் வீட்டுக்கு வரும் போது யோசித்துக் கொண்டே வந்தேன்.. அந்தகாலத்துல (!) முதல் தடவையா டீவி வாங்கியது நியாபகம் வந்தது.. . அப்புறம் என்ன..மலரும் நினைவுகள் தான்..

சின்ன வயதில் சேட்டிலைட் டீ.வி இல்லாமல் போனது தான் எவ்வளவு சந்தோசம் என இப்போ நினைக்க முடிகிறது.. மாநில மொழித்திரைப்படங்களின் வரிசையில் பல மாதங்களுக்கொரு முறை தமிழ்ப் படம் .. அதற்கிருக்கும் வரவேற்பே தனிதான்..

நாங்கள் டீவி வாங்கியபோது சென்னைத்தொலைக்காட்சி நிலையம் ஆரம்பித்த புதிது.. டீவி வந்த முதல் நாளே ..'முதல் மரியாதை' (மாநில மொழி வரிசையில்)..'சாது மிரண்டால்' என இரண்டு படங்கள்.. செம லக்கி.. எங்க முதல் டீவி பேரு என்ஃபீல்ட்.. அது புல்லட் சைஸ்லதான் இருக்கும் .. நல்ல டீவி..என்ன..அப்பப்ப கொஞ்ச்சம் உதைக்க வேண்டி இருக்கும் ..

சித்ரமாலா ன்னு ஒரு ப்ரோகிராம்ல வர்ர ஒரு தமிழ் பாட்டுக்காக அத்தனை மொழிப் பாட்டையும் பொறுமையா பார்க்க வேண்டி இருந்தது.. இப்ப 5 செகண்ட் எதும் நல்லா இல்லைன்னா .. இருக்கவே இருக்கு ரிமோட்...

ஒலியும் ஒளியும் போடர டைம்ல வீட்டுல நடக்க இடம் இருக்காது..ஊர் பொடுசுக வீட்டுக்குள்ள நிறைஞ்சிருக்கும்.. இப்ப ம்யூசிக்குக்கு தனி சேனலே இருக்கு.. அதுல வேற "டெடிக்கேஸ்னே டெடிக்க்கேஸன் " தான்..

" ஹலோ ... நான் கருமத்தம்பட்டீலிருந்து ராமசாமி பேசுறேன் ... ஒரு பாட்டு டெடிகேட்டு பண்ணனும்... யாருக்கா? ....என் பையன் ..மெட்ராஸ்ல வேலைல இருக்கான்..அவனுக்கு தான்..... இந்த "ஏன் பிறந்தாய் மகனே" பாட்டு போடுங்க.. அவனுக்கு ரெம்ப பிடிக்கும் "

இதைக் கேட்ட பின் தான் பையனுக்கு அனுப்ப மறந்த மணியார்டர் நியாபகம் வரும்..

மணியார்டரை அனுப்புன பிறகு 'கேட்டதும் கொடுப்பவனே..கிருஷ்ணா கிருஷ்ணா.." என டெடிகேட் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை..

காம்பயர்கள் வேறு சில சமயம் என்ன பேசுவது எனத் தெரியாமல் எதயாவது கேட்டுவிட்டு பாவமாக சமாளிப்பார்கள்..

"ஹலோ .. இப்ப பேசுறது யாரு ?"

"சித்ரா"

"இதுக்கு முன்னால பேசுனது ...யாரு?"

"எங்க அண்ணி.."

" அப்புறம் ..சொல்லுங்க சித்ரா.. நீங்க வீட்டுல ஒரே பொண்ணா..?"

"அதிருக்கட்டும் ... நீங்க தான் இப்ப ஸ்டேஸன்ல இருக்கற ஒரே லூஸா ? எங்க அண்ணி கூட பேசீட்டு ஒரே பொண்ணான்னு கேக்குறீங்கே..அண்ணன் இல்லாம அண்ணி யெப்படி.. ஹிஹீ.. "

"ஹீ ஹீ .. அது வந்து .." ( மனதிற்குள் .."யாருப்பா அங்கே..கால கட் பண்ணு.ப்ளீஸ்.")

"நேயர்களே .. அந்தத கால் கட்டானதினால .. அவங்களுக்கு பிடிச்ச பாட்டு உங்களுக்காக"

அப்புறம் கைப்புள்ள மாதிரி புலம்புவார்கள் என நினைக்கிறேன் "எத்தனை .. நேரந்தான் போரடிக்காத மாதிரியே மூஞ்சிய வெச்சிக்கிறது... கொஞ்சம் பேசி முடிஞ்சதும் பாட்டை கேட்குறானே ...வெச்சிடுவான்னு நெனச்சேன் .. அவன் என்னடான்னா .. பக்கத்துல இருந்த அண்ணன் கிட்ட கொடுக்க .. பதனஞ்சு நிமிஷம் ..அறு அறு ன்னு அறுத்தான் ... அறுத்துட்டுப் போங்கடான்னு விட்டுட்டேன்.."

டைரக்டர் " என்னது விட்டுட்டியா.."

"ஊஊம் .. ஆமாம் .. அறுக்கும் போது ஒருத்தன் சொன்னான் .. எவ்வளவு அறுத்தாலும் போரடிக்காதமாதிரி ..சிரிச்சுட்டே இருக்கா .. இவ ரெம்ப நல்லவவவவவ...ன்னு சொன்னான்"


இன்னொரு விஷயம்.. யாராவது தேசியத் தலைவர்கள் மறைந்து விட்டால் ஊரே சோகத்திலிருக்கும்.. அதிலும் அவர் மறைந்தது வெள்ளி சனி யென்றால் அளவு கடந்த சோகம் தான்.. சென்னைத் மூன்று நாள் துக்கம் அனுசரிப்பதால் கூடுதம் துக்கம்.. வயலின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என நினைக்கிறேன்.. 24 மணி நேரமிம் மூன்று நாட்களுக்கு அதேதான்..

சென்னைத் தொலைக்காட்சி நிறுவனத்தின் நாடகங்கள்.. கண்டிப்பாக இப்பத்தைய மெகாசீரியல்களுக்கு பரவாயில்லை... என்ன .. ஒரே செட் .. ஒவ்வொரு ஆயுத பூஜைக்கும் லைட்டாக டச்சப் செய்வார்கள் ..மற்றபடி பரவாயில்லை தான்.

இப்போது உள்ள மெகாசீரியல்கள் போல் "அந்நிநியாத்துக்கு அப்பாவி, எதையும் தாங்கும் இதையம், சகுனி கத்துக்கொள்ள வேண்டிய அளவிற்கு சூழ்ச்சி செய்யும் வில்லி/வில்லன்" என்ற பாத்திரங்களை மட்டும் கொண்டதில்லையே.. என்ன நன்மை இருக்கிறதோ இல்லையோ கிளிசரின் ஃபேக்ட்ரிக்கு மட்டும் கொண்டாட்டம் தான்..

பரமார்த்த குரு கதைகள், சிலந்தி வலை, லேடீஸ் ஹாஸ்டல், ஜீபூம்பா என பல நல்ல நாடகங்களுமிருந்தது. பாலச்சந்தரின் நாடகம் "இந்த வீணைக்குத் தெரியாது .. அதை செய்தவன் யாரென்று" என்று டைட்டில் பாடல் கூட வரும்.. பெயர் மறந்துவிட்டது .. அதுவும் நல்ல நாடகம் தான்..

வயலும் வாழ்வும், மனைமாட்சி, கொஞ்சம் நில்லுங்கள் ..உழைப்பவர் உலகம் ..இதில் முன்னோட்டத்தில் அடுத்தவார திரைப்படப் பேரைச் சொல்லுவார்களெனப் பார்த்தால் ..அதற்கு முந்தைய வாரம் எதோ "ஹாலிவுட் படம்" போட்டது போல "அடுத்த வாரம் ஞாயிறு 5 மணிக்கு தமிழ் திரைப்படம்" என்று முடிப்பர்.. வெட்டியாக போய்விடும்..

பின் கேவிள் டீவி வந்தது.. தினம் ஒரு தமிழ் பட கேசட் போட்டு குஷிப்படுத்தினார்கள்.. பின் மாலையில் மட்டும் "சன் டீவியின் தமிழ் மாலை" வந்தது..

மெல்ல மெல்ல வளந்து இப்பொது விஸ்வரூபமெடுத்து வாழ்க்கையில் பெரும்பங்காகிவிட்டது..

49 comments:

கைப்புள்ள said...

ஆஹா! சென்னை தொலைக்காட்சின்னு பதிவு போட்டு மலரும் நினைவுகளை ஆரம்பிச்சு வச்சிட்டீங்களே! அந்த காலம் இப்ப திரும்பிடாதோனு இருக்கு...ஒரே ஒரு சேனல்னாலும் அப்ப எல்லாவிதமான நிகழ்ச்சிகளையும் பேலன்சா பாக்க முடிஞ்சுது...இப்ப அதுக்கான அதிகாரம் நம்ம ரிமோட்ல இருந்தாலும்...அந்நேரம் ரிமோட் யார் கையில இருக்கோ அவங்க விருப்பத்தைப் பொறுத்து தான் மத்தவங்களும் பாக்கணும். வீட்டுல இந்த கதின்னா ஹாஸ்டல் மத்த பொது இடங்கள் இங்கெல்லாம் கேக்கவே வேணாம். பரமார்த்த குருவும் சீடர்களும், காட்டுல மழை, தினேஷ்-கணேஷ் போன்ற காமெடி சீரியல்களும், மிக்கி மவுஸ், ஜெயண்ட் ரோபோ போன்ற தில்லி நிகழ்ச்சிகளும் இப்ப நினைவுக்கு வருது.

//"இந்த வீணைக்குத் தெரியாது .. அதை செய்தவன் யாரென்று" என்று டைட்டில் பாடல் கூட வரும்.. பெயர் மறந்துவிட்டது .. அதுவும் நல்ல நாடகம் தான்..//
இந்த நாடகத்தின் பெயர் ரயில் சிநேகம்.

சரி...சென்னை தொலைக்காட்சியை மையமாக வைத்தே ஒரு தமிழ் திரைப்பட பாடல் இருக்கிறது. உங்களுக்கு நினைவில் இருக்கிறதா?

Suka said...

வாங்க கைப்புள்ள..

ஹும் .. சென்னைத் தொலைக்காட்சிக்கும் டில்லிக்கும் .. ஏண்டனா திருப்பி திருப்பியே, கையெல்லாம் தேஞ்சு போச்சு ஒரு டைம்ல.

ஆ 'ரயில் சிநேகம்' ..நன்றி ..

ரேவதி ,கண் தெரியாத பாத்திரத்தில் நடித்துக் கூட ஒரு நாடகம் இருந்தது... அதன் பெயரும் மறந்து விட்டது...

சென்னைத் தொலைக்காட்சிப் பாடலா!! தெரியவில்லையே :)

சுகா

G.Ragavan said...

சென்னைத் தொலைக்காட்சி நிலையம். சிறுவயதுகளில் மிகவும் பழக்கமான ஒன்று.

எத்தன நாடகங்கள் பாத்திருக்கோம். அடடா! அந்த நாடகங்கள்ளாம் நல்லா இருக்கும். வில்லன்கள் இல்லாமல் கதையோட போக்கே வில்லனா இருக்கும். ம்ம்ம்ம்....

தினேஷ் கணேஷ் பயங்கர காமெடி நாடகம். சுலக்ஷணா, டெல்லி கணேஷ் எல்லாம் நடிச்சு ரொம்ப ரசிச்சுப் பாத்த நாடகம்.

fairy tale theatre எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

கார்த்திகேயன் said...

'இரயில் ஸ்நேகம்' வந்தபோது நான் ரொம்ப சிறுவன்...அதை இரசிக்கிற பொறுமை அப்பொழுது இல்லையென்றாலும் இப்பொழுது மறு ஒளிபரப்பு செய்யமாட்டார்களா என்றுதான் இருக்கிறது...அந்த 'இந்த வீணைக்கு தெரியாதா?' வை மறக்கமுடியாது...

அப்பொழுதெல்லாம் இந்தி டிடி-யில் (இந்தி வித்துவான் கணக்காய்), ' மால்குடி டேஸ்' லாம் பார்த்தது ஞாபகம் வருகிறது...

செவ்வாய் நாடகங்களை பொறுமையின்றி பார்த்ததும், 'சாந்தா சக்குபாய்' போன்ற அரதப்பழசு படங்களை பார்த்ததும் இன்னும் பசுமையாய் இருக்கிறது...

என்னதான் இருந்தாலும், ஒரு அன்னையின் அக்கறையோடு நிகழ்ச்சிகளை தருவதில் இவர்களுக்கு நிகர் யாரும் இல்லை...(ஒரு தம்/தண்ணி விளம்பரம், முறையற்ற உறவுகளைச் சொல்லும் மெகா தொடர்கள்- இங்கே பார்த்திருப்போமா?)

முதன்முதலில் 'விழுதுகளை' வளரவிட்டு மெகா தொடர் என்ற விஷயத்தை ஆரம்பித்துவைத்த பெருமை(???) டிடியையே சேரும்.

இப்பொழுதும் சன்மியூசிக் போன்ற பொழுதுபோக்கு சேனல்கள் இருந்தாலும், 'புதுயுகத்தகவல்' ஆகிய நிகழ்ச்சிகள் இன்றும் பொதிகையில் நன்றாக தரமாக உள்ளது...

Suka said...

ராகவன்,

உண்மைதான்..செவ்வாய்க் கிழமை நாடகத்தில் வில்லன்கள் என்று யாருமில்லாமல் வரும் பிரச்சனைகள் யதார்த்தமாக இருந்தது...

இப்போதைய மெகாசீரியல் வில்லர்களில் 20 சதவீதமாவது யாரவது நிஜ வாழ்க்கையில் இருப்பார்களா என்ன..?

நன்றி

Suka said...

அ.கா !? :),

உண்மைதான்... அனைத்து வயதினருக்கும் ஏற்ற சேனலாக இருந்தது செ.தொ.கா... என்ன..

அவ்வப்போது "தடங்கலுக்கு வருந்துகிறோம்" என ஒரு அட்டை தெரியும் :) அப்போதிருந்த தொழில்நுட்பத்தில் அதுவே பெரிதுதான்.. விளம்பர இடைவேளை மாதிரி..

ஹிந்தியில் ஒரு காலேஜ் ஸிரியல் 9 மணிக்கு வரும்..அதை பார்த்திருக்கிறேன் ...

அவ்வப்போது சமூக நல கார்டூன்கள் போடுவர்.. புரளி எப்படி பரவுகிறது என்பதை பலூன் வெடிப்பது துப்பாக்கிச் சூடாக கதைகட்டப் படுவது .. சிறிது நேரமென்றாலும் ரசிக்க சிந்திக்க வைத்தது

மகேஸ் said...

எங்கள் வீட்டில் எல்லாம் இரண்டு ஆண்டனாக்கள் இருந்தன. ஒன்று கொடைக்கானலுக்கு, மற்றொன்று இலங்கை ரூபவாகினிக்கு.
ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணிக்கு பொன் மாலைப் பொழுது என்று புதிய தழிழ்ப் பாடல்களை ஒளிபரப்புவார்கள். தொலைக்காட்டியில் புள்ளியடிதாலும் கண்ணை இடுக்கிக் கொண்டு பார்ப்போம். அது முடிந்ததும் 4 மணியளவில் spider man cartoon ஒளிபரப்புவார்க்கள். ஊரே திரண்டு வந்து திரைப்படம் பார்க்கும்.
ஞயிற்றுக் கிழமை தினமலரில் ராமாயணம் வசனத்தைப் பார்த்துக் கொண்டே ராமாயணம் பார்த்தது, போன்ற மறக்க முடியாத அனுபவங்கள்.
அடுத்த 10 வருடங்களில் பேசினாலே புரிந்து கொண்டு அதை எழுத்தாக மாற்றும் சாப்ட்வேர் அனைவராலும் உபயோகப்படுத்தப் படும். அப்போது இதேபோல் தட்டச்சு செய்ததை நினைத்து ப்லொகில் படித்துக் கொண்டும் பேசிக் கொண்டும்(??) இருப்போம்.

Maya said...

/சரி...சென்னை தொலைக்காட்சியை மையமாக வைத்தே ஒரு தமிழ் திரைப்பட பாடல் இருக்கிறது. உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? /

கல்யாண அகதிகள் என்ற திரைப்படத்திலிருந்த்து..'மனதிற்குள் உட்கார்ந்து மணியடித்தாய்' என்ற பாடல் தொலைக்காட்சியை மையமாக வைத்தே ...

அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்

Suka said...

மகேஸ் ..
உண்மை தான் .. எப்படா ஒளிபரப்பு ஆரம்பமாகுமென .. கொஞ்ச நேரம் புள்ளியைப் பார்த்து .. அப்புறம் "ங்கூஉ.." என கூவும் ஒரு ஸ்கீரினைப் பார்த்து .. பின் தூரதர்ஸனின் "டேண்ட டடடைன்.." என்ற மியூசிக்கோடு உலகம் சுழல்வது கண்கொள்ளாக் காட்சி.. :-))

ராமாயணம் ..ஆமாம் :) ஹீமேன் ன்னு அப்புறம் வரும் .. ஹீமேன் பார்க்க விடாமல் தலையில் எண்ணை வைத்து குளிக்கச் சொல்லும் போது எரிச்சலாக வேறு இருக்கும்..

உண்மையில் இப்போது எவ்வளவோ வசதிகள் வந்திவிட்டன .. இருந்தாலும் பழசை நினைத்துப் பார்க்கும் nostalgia வும் தனி சுகமே :)

நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி மகேஸ்..

gayathri said...

Nice article. When compared to today's channels DD Tamil is giving much better and useful programs. In my childhood we eagerly wait the whole week to see the 10min spiderman and S.V.Sekar's vanna kolangal.

Suka said...

யா .. வண்ணக் கோலங்கள் !! ஆஹா.. DD நினைவுகள் அள்ள அள்ள குறையாது போல ..

மனோரமா பூபதியின் "காட்டுபட்டி சத்திரத்திலே.."
விவேக்கின் "மேல்மாடி காலி ... "
கோவை அனுராதவில் சில நாடகங்கள் ..பெயர் நினைவில் இல்லை ..

நிறைய நகைச்சுவை நாடகங்களுமிருந்தன.. விஷேஷ நாட்களில் நள்ளிரவு 12 மணிக்கு ஔவையார்.. சம்பூர்ண ராமாயனம்..லவ குசா என பக்தி படம் வேறு இருக்கும் :)

நன்றி காயத்ரி

Anonymous said...

சென்னை தொலைக்காட்சிய வச்சு வந்த பாட்டு அழகன் படத்துல வரும் இங்கைக்கு இரவு அன்கஎ இரவா இல்லே பகலா பாட்டு

Suka said...

ஓஓ.. ஓகே.. ஓகே..

கரெக்ட் தான் ..

நீங்க..யார் பெத்த புள்ளயோ .. கைப்புள்ள கேள்விக்கு பதில யோசிச்சு தலைய வெடிக்க வெக்காம காப்பாத்தினதுக்கு நன்றி ..

சிறில் அலெக்ஸ் said...

'சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா' - அழகன் படப்பாடல், 'வீணைக்குத் தெரியாது' பாடலும் இந்தப்பாடலும் ஒரே ராகத்தில் அமைந்த பாடல்கள்.

மரகதமணி இசை.

இயல்பான நகைச்சுவையோடு அழகாய் தமிழ் எழுதுறீங்க வாழ்த்துக்கள்.

மகேஸ் said...

பிளைட் நம்பர் 172 நாடகத்தை மறந்துட்டமே..

Suka said...

..ஆமாம்.. மகேஸ்

அப்புறம்..தனித் தமிழ அறிமுகப்படுத்துன .. மதிய நேர மொழிபெயர்ப்பு நாடகங்கள் வேற கொஞ்ச நாள் ஆதிக்கம் செய்ததே..

சொல்றீங்க என்ன இதப் பத்தி ? இருக்கலாம் கொஞ்சன் கஷ்டமா இதப் படிக்க.. ஆனா இது தானே ஜுனூன் தமிழ்..
:)
சுகா

துளசி கோபால் said...

கொசுவர்த்தி வேணுமா கொசுவர்த்தி? நல்ல தரமான கொசுவர்த்திகள் இங்கே மலிவு விலையில் கிடைக்கும்:-)))

Suka said...

அட அப்பிடியா..

தேங்க்ஸ் சிரில்.. சங்கீதத்துக்கும் எனக்கும் ..ஏணி ..இல்ல எஸ்கலேட்டர் வெச்சாலும் எட்டாது ..

பிராஜக்ட் மீட்டிங்ல எல்லாம் பேசி முடிஞ்சதுக்கப்புறமும் எதோ பேசுனொம்ங்கிறதுக்காக சிலபேர் பேசுவாங்க அது மாதிரி வேணும்ன்னா அப்பப்ப பேசுவேன்.. அவ்ளவு தான் :)

சுகா

Suka said...

துளசி..

இப்பதான் மீட்டிங்ல இருந்து வந்ததால ..மூளை கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கு.. செரிய புரியல..

எதுக்கு கொசுவர்த்தி விக்கிறீங்க இங்க :)

சுகா

Suka said...

ஓ..ஓ.. பிக்கப் பண்ணிடுச்சு.. மலரும் நினைவுகள்க்கா :)) ஒகே..ஒகே.. இங்க நிறைய பேர் வாங்குவாங்க..எல்லாத்தையும் வித்துடுங்க

மகேஸ் said...

சுகா அப்படியே நம்ம எண்ணக்குதிரைகளுக்கும் வந்து பின்னூடமிட்டுட்டுப் போங்க.

கைப்புள்ள said...

//நீங்க..யார் பெத்த புள்ளயோ .. கைப்புள்ள கேள்விக்கு பதில யோசிச்சு தலைய வெடிக்க வெக்காம காப்பாத்தினதுக்கு நன்றி ..//

தலை வெடிக்கிற அளவுக்குக் கொண்டு போனதுக்கு சாரிங்க! அனானிமஸ் சொன்ன அழகன் படத்துப் பாட்டு ஒரு விதத்துல சரி தான்னாலும், நான் நெனச்ச பாட்டு வேற.

பாலச்சந்தர் இயக்கத்துல வந்த 'கல்யாண அகதிகள்'ங்கிற படத்துல வர்ற 'மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய் என் மவுனத்தை இசையாக மொழிப் பெயர்த்தாய்' ங்கிற பாட்டைத் தான் நான் சொன்னேன். இந்த படம் தான் நாசரோட முதல் படம். அருமையான பாட்டுங்க. இசை வி.எஸ்.நரசிம்மன். நடிகை சரிதாவும், சென்னைத் தொலைக்காட்சியில் அப்போ வந்துட்டுருந்த ஒரு செய்தி வாசிப்பாளர்(அப்படி தான் நினைக்கிறேன்)ஹீரோவா நடிச்சு வந்த படம் அது. 'எதிரொலி','ஒலியும் ஒளியும்','மலரும் நினைவுகள்' அப்படின்னு சென்னைத் தொலைக்காட்சி நிகழ்ச்சி பேர்களே அந்த பாட்டுல வரும். நீங்க கேட்டிருக்கீங்களா?

Suka said...

ஓ..உண்மைல நீங்க சொன்ன மாதிரி பாட்டத் தான் யோசிச்சுட்டிருந்தேன் .. எதுவும் தட்டுப்படலை .. அப்புறம் மக்கள் சொல்ல அழகன் பாட்டுத்தானா அதுன்னு நினைச்சேன்...

நீங்க சொன்ன பாட்ட கேட்டதில்லை.. எனக்கு தோனினது 'ஒளியும் ஓலியும் கரண்ட்டு போனா...' மட்டும் தான் ..

ரெம்ப தேங்க்ஸ்.. :)

Dubukku said...

Have linked this post in desipundit

http://www.desipundit.com/2006/03/30/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/

Dubukku said...

Have linked this post in desipundit

http://www.desipundit.com/2006/03/30/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/

Suka said...

இணைப்பிற்கு நன்றி டுபுக்கு..

பினாத்தல் சுரேஷ் said...

சுகா,

எப்படி மிஸ் செய்தேன் என்று தெரியவில்லை. இப்போதுதான் படித்தேன், மிக மிக மிக ரசித்தேன் - குறிப்பாக காம்பியர்கள் படும் பாட்டையும் அவர்கள் போடும் பாட்டையும்..

என்னாத்த சொல்வேனுங்கோ..
கொசுவத்தி சுத்துதுங்கோ
கொசுவத்தி சுத்தட்டுமே
டிவிய ஆஃப் பண்ணுங்கோ..

தயா said...

மனதுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்...

எனக்குள் இப்போதும் மணியடிக்கும் பாடல். நல்ல பாட்டு. எனக்கு என்ன படம்? ஏது? என்று தெரியாது. ஆனாலும் இந்த பாடலை (படமும் அறை குறையாக பார்த்திருக்கிறேன். சரிதா ஹாஸ்டலில் இருப்பார். அடிக்கடி விஜயில் பகல் நேரத்தில் வந்தது என நினைக்கிறேன்) கேட்டதிலிருந்து அவ்வப்பொழுது மணியடிக்கும்

தூர்தர்ஷன் நாட்கள் மறக்க முடியாதவை தான். சுஹாசினியின் இயக்கத்தில் ஒளிபரப்பான "பெண்", "இவளா என் மனைவி", "சித்திரப்பாவை" போன்ற தொடர்களும் மறக்க முடியாதவை.

அன்றெல்லாம் டிவி பார்ப்பதை ஒரு பெரும் பொழுதுபோக்காக வைத்திருந்தோம். சாட்டிலைட் வந்த பிறகு டிவி பார்ப்பதையே பலர் குறைத்தபடி இருக்கிறார்கள். (இல்லத்தரசிகளை விட). நல்லதுக்கு தான்.

Suka said...

வாங்க சுரேஷ்.. தயா..

சென்னைத் தொலைக்காட்சி ரசிகர் மன்றமே ஆரம்பிச்சுடலாம் போல .. :)

எதிரொலி ல சில சமயம் திட்டி வர்ற கடிதங்களைக்கூட படித்து விளக்கமளிப்பார்கள்.. எனக்கு நினைவில் இருப்பது ஏதோ ஒர் நாடகத்தில் .."இந்தாங்க காபி" என கொடுத்தது காலி டம்ளர் என்பதை கேமரா காட்டி .. அதையும் ஒருவர் நோட் பண்ணி கடிதம் எழுத .அதற்கு வருத்தம் தெரிவித்து..அடுத்த நாடகத்திலிருந்து காபி எவ்வளவு ஜில்லுனு இருந்தாலும் .சர்ர்ன்னு ஒரு ஆத்து ஆத்துவாங்க :)

G.Ragavan said...

// மனதுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்...

எனக்குள் இப்போதும் மணியடிக்கும் பாடல். நல்ல பாட்டு. எனக்கு என்ன படம்? ஏது? என்று தெரியாது. ஆனாலும் இந்த பாடலை (படமும் அறை குறையாக பார்த்திருக்கிறேன். சரிதா ஹாஸ்டலில் இருப்பார். அடிக்கடி விஜயில் பகல் நேரத்தில் வந்தது என நினைக்கிறேன்) கேட்டதிலிருந்து அவ்வப்பொழுது மணியடிக்கும் //

தயா...அந்தப் படம் கல்யாண அகதிகள். எனக்கு மிகவும் பிடித்த படம். பிடித்த பாடலும் கூட.

Anonymous said...

Migavum nalla pathivu.

'Intha veenaiku theriyathu' ketka

http://www.dhool.com/sotd2/168.html

Sindhu

Suka said...

ஆஹா .. ரெம்ப நன்றி சிந்து ..

இந்தப்பாட்ட மறுபடியும் கேக்க முடியுன்னே தோணல .. அங்க நல்ல கலெக்ஷன்ஸ் இருக்கும் போல.. நன்றி

Adaengappa !! said...

அடேங்கப்பா !! உங்கள் பதிவு மிகவும் அருமை...


தொலைந்து போனவர்கள் என்ற தொடர் ஞாபகம் வந்தது !


மறக்க முடியுமா அந்த நாட்களை !!

Bhuvan said...

சிறுவர் பூங்கா, வொன்டர் பல்லூன்...பேராசிரியர் நன்னனின் தமிழ் அறிவோம்...

நினைவில் இருக்கிறதா?

Bhuvan said...

சிறுவர் பூங்கா, வொன்டர் பல்லூன்...பேராசிரியர் நன்னனின் தமிழ் அறிவோம்...

நினைவில் இருக்கிறதா?

Suka said...

வாங்க அடேங்கப்பா.. புவன் ..

நன்னன் ..ஆஹா.அவர்கிட்ட இந்த காம்பெயர்கள் எல்லாரையும் ட்யூசன் போக சொல்லி இருக்கலாம் :)

சுதர்ஷன் ..கார்ட்டூன் வரைய சொல்லித் தருவாரே..அதுவும் நல்லாத்தான் இருந்தது :)

கமல் said...

வாவ்... கெளப்பிட்டீங்களே சுகா! கொசுவர்த்தி சுத்த ஆரம்பிச்சிடுச்சு. இன்னைக்கு அலுவலகத்தில் எப்படி வேலை ஓடப்போகுதுன்னு தெரியலை.

விழுதுகள் ஒளிபரப்பானபோது லஞ்ச் அவர்க்கு முந்தைய வகுப்பை 'பங்க்' அடித்துவிட்டு ஹாஸ்டலுக்கு ஓடிப்போய்ப் பார்த்தமாதிரி இப்போ வர்ற தொடர் எதையாவது பார்ப்போமாங்கறது சந்தேகம்தான்.

அப்போதெல்லாம் எங்க ஊருல பஞ்சாயத்து டி.விதான். வியாழக்கிழமைகளில் ஒளிபரப்பான வானவீதி பார்த்துத்தான் சுதந்திரப்போராட்டத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், சித்திரப்பாவை பார்த்துத்தான் நாவல்களைப் படிக்கவும் ஆரம்பித்தேன்.

நன்றி
கமல்

Suka said...

விழுதுகள்... கண்டிப்பாக இப்போதைய மெகா சீரியல்களோடு கம்பேர் செய்யவே முடியாது.. நல்ல தொடர்..

ஓ..வானவீதியா... பெயர் நியாபகமில்லை ... ஆனால் விடுதலைப் போராட்ட நாடகம் நியாபகமிருக்கிறது...

சரி ..புடிங்க ஒரு கொசுவர்த்தி ..

கார்த்திகேயன் said...

ஆகா 'அகா'வாவே ஆகிட்டேனா? அப்போ 'குகா' என்னாச்சு? ;-)

(எப்படி போகுது * வாரம்?)

சித்ரகார், சித்ரமாலா(ஒரே ஒரு தமிழ் பாடல்), ஞாயிறு மதியம் புரியாத மொழி(நல்ல)படங்கள், இந்தி இராமாயணம், இந்தி மகாபாரதம்...இதெயெல்லாம் உட்டுட்டீங்களே தலைவா?

இவுகெல்லாம் செ.தொ.காட்சிக்கே முன்னோடி... நிறைய ஞாபகத்துக்கு வருது உங்க பதிவை பார்த்தபின்.
நன்றி :-)

அன்புடன்
அகா :-)

Voice on Wings said...

'நீங்கள் கேட்டவை' படத்துல பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள கிண்டல் செய்து ஒய்.ஜீ. மகேந்திராவோட நகைச்சுவைக் காட்சி ஒண்ணு வரும். அண்மையிலதான் படத்த வி.சி.டி. வாங்கி பாத்தேன், நல்ல தமாஷான காட்சி :)

அந்தக்கால DD நிகழ்ச்சிகள் நல்லாவே இருந்தன. ஹிந்தி திணிப்பு கொஞ்சம் அதிகமா இருந்தது ஒண்ணுதான் குறைபாடு. இப்பவும் DD வழங்கற பொதிகை சானல்தான் இருக்கற தமிழ் சானல்களிலேயே சிறப்பா இருக்கு.

தமிழ்மணத்துக்கு ஒரு கருத்து கணிப்பு ஐடியா. "சிறந்த தமிழ் தொலைக்காட்சி சானல்:
- சன்
- ஜெயா
- ராஜ்
- விஜய்
- பொதிகை
- No comments"

Suka said...

வாங்க கு.கா..

நட்சத்திர வாரமா ..சில பல திட்டுக்களோட பரவாயில்லாம போய்ட்டிருக்கு... எங்க வி.பி கிட்ட இந்த வாரம் கொஞ்சம் எழுத்துவேலை அதிகம்ன்னா.. புரிஞ்சுக்க மாட்டீங்குறார்..போங்க.

நீங்க சொன்ன எல்லாத்தையும் மறுமொழிகள்ல மக்கள் சேர்த்து கொசு ஒழிப்பு புரட்சி செஞ்சுட்டாங்க :)

Suka said...

வாங்க வாய்ஸ்..

எனக்கு DD பார்க்க முடியல..கிட்டத்தட்ட 2 வருஷத்துக்கு மேலாச்சு..

என்னதான் மலரும் நினைவுகள் நல்லா இருந்தாலும் .. கொஞ்சம் கேஷுவலா செய்தா இன்னமும் நல்லாயிருக்குமோ..

DDல இருந்து காப்பியடிக்கப்பட்ட போட்டிகள் பல பல சேனல்களில் நன்றாகவே ஓடின ..

மகேஸ் said...

என்ன சுகா, கொசுவத்தி யாவாரம் செம சூடு போல.
வெள்ளி இரவு 8 மணி ஒளியும் ஒலியும் போடுவதற்கு முன்பு எதிரொலி ன்னு போட்டு எல்லோரையும் கடுப்படிப்பாங்களே? அத மறந்துட்டோம் போங்க.

தயா said...

ரிமோட்டை மாற்றி மாற்றி தட்டியதில் சாட்டிலைட் சானல் ஒன்றில் கண்ணிலும் காதிலும் விழுந்த டயலாக் -
அவர் வில்லி போல:

ஏய் அவ "சாண்" னா நர்ன "ஜாக்கிசாண்"டி!

நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.

Suka said...

மகேஸ்.. அதத்தான் கமெண்ட்ஸ்ல புடிச்சுட்டோம்ல..

எதிரொலில யு.எம்.கண்ணன் வந்தா அடுத்தவாரத் தமிழ்ப்படம் சொல்லுவார்ன்னு கடைசிவைரை பார்த்த அற்ப ஜீவிகள்ல ..ஹீ ஹீ ..நானும் ஒண்ணு.. :)

Suka said...

தயா ..
அது வந்து "சீரியஸ் காமெடி" வெரைட்டி ..
தமிழ் காமெடில இருக்கற சப்கேட்டகரில ரெம்ப பிரபலமானது..

அவங்க (ஹீரோ/வில்லன்) சீரியஸா எதாவது செய்வாங்க ..நமக்கு காமெடியா இருக்கும்..

இதப்பத்தை இன்னும் அதிகம் தெரிஞ்சுக்கணும்ன்னா ... அந்த கரண்டுக்கே ஷாக் அடிக்க வைச்ச "நரசிம்மா" பாருங்க..

சீனு said...

"ஹூம்...அந்த காலத்துல நாங்கல்லாம்..."அப்படீன்னு யோசிக்க வெச்சுட்டீங்களே?

Suka said...

வாங்க சீனு

சிபி என்னை ஒன்னாம் வகுப்பு ரெண்டாம் வகுப்பு பாடமெல்லம் யோசிக்க வைக்கிறார்..

http://sukas.blogspot.com/2006/04/blog-post_02.html

நான் மட்டும் சும்மா இருக்கனுமா :)

Anonymous said...

Guys,

Do you remember some of the good serials which used to come on Sunday afternoon..? The last one was udal porul anandhi by Vinodhini..I believe..and some pattukku pattu program...?

--Stan