Friday, March 31, 2006

வானின்று பெய்யும் அமிழ்தம் ..ஆதவன் கடல் காய்ச்சி
கடைந்தெடுத்த அமிழ்தமது

அந்த மேருமலை வருந்தவில்லை
அரவக் கயிறும் தேவையில்லை

ஆமை முதுகிலும் பாரமில்லை
ஆனாலும் அமிழ்து கிடைக்கிறது

ஆவியாதலனெ அறிவியலாருரைக்க
ஆண்டவன் சித்தமென ஆன்மீகத்தார் கூற

ஆங்காங்கே சில கழுதைச் சோடிகளும்
ஆவென்று வாய்பிளந்து வான்நோக்க

கருப்புக் காளான்கள்
சாலைகளில் முளைத்திருக்க

காய்ந்திருந்த மரங்களின்
கற்பனையைத் தட்டிவிட அவை

தூரிகை ஏதுமின்றித் தன் மேனியிலே
பல வண்ண படம் வரைய

போட்டிக்கு சாலைத் தண்ணீரும்
தூக்கிய வேஷ்டிகளையும் புடவைகளைப் பதம் பார்க்க

பலநாள் கழித்துக் குளித்த காக்கைகள்
ஒரத்தில் ஒதுங்கி உடலுலுலர்த்த

வானம் பார்த்த பூமியாம் சில
உதடுகள் உஷ்ணமாக

சில்லென காற்று டீ கடையில்
சில சில்லரைகளைச் சேர்க்க

பல்லவன் தன்னுள் சிலைரைத்
தவணை முறையில் குளிப்பாட்டி

சாலையோர நடைபாதைவாசிகளை
தாராளமாய்க் குளிப்பாட்ட

சைக்கிள்காரர்கள் தலையில்
பாலித்தீன் பூக்கள் பூத்திருக்க

மாடியிலே மறக்கப்பட்ட வடாம்கள் சில
எமதர்மராணிகளை நினைத்து சிரிக்க

ஓட்டு வீட்டுத் தோணிகளின் தண்ணீர்
வீட்டுப் பாத்திரங்களை நிரப்ப

திண்ணைக் குழந்தைகள்
காகிதக் கப்பல் விட

இடியே விழுந்தாலும் மெகாத்தொடர்கள்
விடாது பார்க்கப் பட

மறக்கப்பட்ட குடைகள்
ஆணிகளில் தூங்கியிருக்க

இன்று கடும்வெயிலென்ற
வாநிலை ஆராய்ச்சி நிலையம் மீது

கொஞ்சம் கடுமையாகவே
நீர் வீழ்த்த..

சில செல்லத் திட்டுக்கள்
சில நன்றிகள்
சில சந்தோஷங்கள்
சில எரிச்சல்கள்

எதையும் பொருட்படுத்தாமல்
சோ வென பெய்யும் மழை..

~~~~~~~~~~~~****~~~~~~~~~~~

மேலே உள்ள கோடு ..இத்தோடு கவிதை முடிந்தது என்பதைக் காண்பிக்க. :) (நல்ல கவிஞர்களுக்கு இது தேவை இல்லை தான் ) .. மழைக் கவிதைக்கு காரணம் இதோ கீழே உள்ள வாநிலை அறிக்கை தான் ..

25 comments:

Anonymous said...

//வானம் பார்த்த பூமியாம் சில
உதடுகள் உஷ்ணமாக// ??

Suka said...

மழைக் காலங்களில்... பெட்டிக்கடை ஓரங்களில் ..பார்த்ததில்லை !!?

Anonymous said...

kavidhai romba romba nalla iruku.

Unmai said...

இப்போதுதான் இந்தப் பதிவைப் பார்க்கிறேன்..missed it somehow..!
கலக்குறீங்க சுகா??!!

Suka said...

வாங்க உண்மை.. நன்றி

மழைல எழுதுனது ..வெயில்ல படிச்சிருக்கீங்க.. :)

இங்க பெய்யற மழைல இவ்வளவு ஏக்டிவிடீஸ் இருக்காது :( ஹைகூ தான் ட்ரை பண்ணனும்.

Suka said...

நன்றி அனானி :)

குமரன் (Kumaran) said...

:-)

Suka said...

குமரன்.. நன்றி

சிலகாலமாக என் பதிவில் ஓர் மர்மப் புன்னகையை மட்டுமே மறுமொழியாக்குகிறீர்களே :)

குமரன் (Kumaran) said...

உங்கள் பதிவுகள் மட்டுமில்லை சுகா. 'படித்தேன். நன்றாய் இருந்தது' என்று சொல்வது தான் அந்த புன்னகை. பலர் பதிவுகளிலும் நீங்கள் இதனைக் காணலாம். எந்த மர்மமுமில்லை. :)

Suka said...

ஹ.. அனுமான், உவேசா க்கு பிறகு சொல்லின் செல்வர் நீங்கள் தான் ..
ஒருவேளை ஸ்மைலியின் செல்வரா :)

குமரன் (Kumaran) said...

சிரிப்பானின் செல்வர் என்று கூட சொல்லலாம். என்ன 'சிரிப்பானை'க் கண்டுபிடித்த கொத்ஸும் செல்வனும் சண்டைக்கு வராமல் இருக்கவேண்டும். :-)

Suka said...

சிரிப்பானா... அதை கொத்ஸ் , செல்வன் கண்டுபிடித்தார்களா..?

ஆஹா.. தேவநேயப் பாவாணர் வாரிசுகள் இத்தனை பேரா...

இத்தனை நாள் எனக்கு தெரியவே இல்லையே.. பதிவுகளைக் கொஞ்சம் அகழ்வாராய்ச்சி செய்யும் சந்தர்ப்பம் இப்பொதுதான் :)

வெற்றி said...

சுகா,
அருமை.

நன்றி.

அன்புடன்
வெற்றி

குமரன் (Kumaran) said...

சிரிப்பானைக் கண்டுபிடித்தவர் கொத்ஸ். நீங்கள் என்னை 'சிரிப்பானின் செல்வர்' என்று சொன்னால் செல்வன் சண்டைக்கு வராமல் இருக்க வேண்டும் என்று சொன்னேன். :)

சொல் ஒரு சொல் பதிவுகளைப் படிக்கிறீர்கள் அல்லவா? பாவாணரின் பெண் வாரிசு ஒன்றும் தமிழ்மணத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார். அவரை 'சொல் ஒரு சொல்' பதிவுகளின் பின்னூட்டங்களில் காணலாம். :)

Suka said...

நன்றி வெற்றி.

Suka said...

குமரன்..

ஓ.. குழல் விளக்கு கடைசியாக எரிந்தது :)

பெண் வாரிசு யார்.. புதரகம் கண்ட பொன்ஸ் ஆ.. ஏற்கனவே அறிக்கைப் போருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன் ..

ஆமாம்.. தமிழில் ..பொன்ஸ் என்பது "பொன்கள்" என்றல்லவா இருக்கவேண்டும்.. வாரிசு பெயரிலேயே பிழையா.. :P

குமரன் (Kumaran) said...

//பொன்ஸ் என்பது "பொன்கள்" என்றல்லவா இருக்கவேண்டும்//

அட நீங்க வேற. பொன்ஸ், கொத்ஸ்ன்னு பேருங்களைப் பாத்துட்டு நிறைய பேர் என்னையும் கும்ஸ்ன்றாங்க. என்னத்தை சொல்ல?

Suka said...

'சொல் ஒரு சொல்' சொல்றவருக்கே இந்த கதியா..

உங்க கஷ்ட்டம் புரியுது கும்ஸ்..

ஹ ஹா :)

Thekkikattan said...

//பல்லவன் தன்னுள் சிலைரைத்
தவணை முறையில் குளிப்பாட்டி //

நன்றாக அனுபவிச்சு எழுதினெ வரிகள்... ஒரு இரண்டு நாட்களுக்கு முன்புதான் மழையும் இது போன்ற திறந்த வெளி பேருந்துகளும் சன்னலோர பயணங்களும் பாதி குளித்தும் குளிக்காமலும் பயணித்த நாட்கள் அன்று எரிச்சலுடன் இன்று அது கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் என் நினைவில் வந்துப் போனது.

இங்கே உங்கள் கவிதையின் மூலம் மீண்டும் ஒரு முறை நனைந்தேன். நன்றி!

தெகா.

Suka said...

தெகா..

:) ஒரு பத்தாயிரம் மைல்கள் .. முந்தைய எரிச்சல்களையும் ஏக்கமாக்கி விடுகின்றன..

மழையில் இங்கே அசையும் வைப்பர்களைத் தவிர வேறெதையும் ரசிக்கமுடியவில்லை.

Suka said...

கும்ஸ் இருக்கிறாரே .. (இப்படிக் கூப்பிட்டால் கடுப்பாவீர்களோ ;) )

வைப்பருக்கு தமிழில் என்ன :)

குமரன் (Kumaran) said...

வைப்பர்ன்னா வைப்பர் எடுப்பர் அதனைத் தானே கேட்கிறீர்கள்? :-)

Suka said...

ஒகே ..குமரன் இனி நான் உங்களை கும்ஸ்ன்னு கூப்பிடலை..

இப்படி கடிச்சுட்டீங்களே ;(

குமரன் (Kumaran) said...

:-)

துடைப்பான் நல்லா இருக்கா?

Suka said...

கண்ணாடி துடைப்பானா..
மழைநீர் துடைப்பானா..


இதை எப்படியோ கொஞ்சம் சுருக்குவாங்களே..

கண்துடைப்பான்..சே
மழைதுடைப்பான்
மழைப்பான் !! இது எப்படி :-)


இருந்தாலும் பாவணரோட மற்ற வாரிசுகளையும் கலந்தாலோசிக்க வேண்டிய விஷயம்.. :)

நான் கற்றது சிட்டிகை அளவு.