Friday, March 31, 2006

கூகுள் சரணம் கச்சாமி : Just Think , don't type, we search for you

ஸ்டேண்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பாலிகிராஃப் சம்பந்தமாக ஒரு ஆராய்ச்சி நடந்து வந்தது. அதில் முக்கியமான கண்டுபிடிப்பு இது ..

நாம் எதாவது ஒன்றைப் பற்றி சிந்திக்கும் போது நம் மூளை அதைப் பற்றி மீச்சிறு அலைகளை எழுப்புகிறது..அது சிலசமயம் பேசுபவரின் தாய் மொழியின் வார்த்தைகளை ஒத்துள்ளது என்பது.

பலநாள் முன்பு உடைப்பில் போட்ட இதை கூகுள் தூசி தட்டி எடுத்து இப்போது ஒரு புது தேடல் வசதியை அறிமுகப் படுத்த முயற்சி செய்கிறது.

இதற்கு புதிதாக எந்த உபகரணமும் தேவை இல்லை என்பதே இதன் ஹைலைட். நாம் வழக்கமாக உபயோகப் படுத்தும் மைக் போதும்.. அதுவே நாம் யோசிக்கும் போது வெளிப்படும் கீ வேர்ட்ஸ்ஸை உள்ளிழுத்து சில pattern மேட்சிங் செய்து அதை வைத்து இணையத்தில் தேட ஆரம்பித்துவிடும்.

இதில் ஒரு பிரச்சினை .. மிக முக்கியமான பிரச்சினை .. ப்ரைவசி.. ஆமாம் .. இந்த வசதி கொண்டு அருகில் உள்ளவரின் மனதையும் கிட்டத்தட்ட படிக்க முடியும்.. அதனால் கூகுள் குழம்பியுள்ளது.. இதை வெளியிடுவதில் உள்ள சட்டச் சிக்கல் குறித்து ஆராய்ந்து வருகிறது.

ஹும்...பார்த்து யாரவது மைக்கோட இருக்கும் போது எக்கு தப்பா நினைச்சு வெக்காதீங்க .. :)

மூலம் : http://think.google.com/

15 comments:

Anonymous said...

ஏப்ரல் 1 ???

Unknown said...

அந்த சுட்டிக்குள் போகாமலேயே சொல்லுகிறேன்.

இது ஏப்ரல் 1 வேலை

supersubra said...

http://think.google.com/ link is not working. please verify the link and give the correct link for the stanford project or google project regarding this

Suka said...

செல்வன் ... பரணி ..

கூகுள் மேல உங்களுக்கு நம்பிக்க இல்லையா ... நாளைக்கு அறிவிப்பு வரும்பாருங்க

Suka said...

சூப்பர்சுப்ரா சார்..

இருங்க .. அந்த இணைப்பை சரியா இணைதிடறேன் ..

மகேஸ் said...

ஏப்ரல் ஒன்னாம் தேதி. சுகா ஏமாத்துறார்.
நாங்க ஏமாந்துட்டோம் சுகா :-((

Suka said...

அடடடடா... மெனக்கட்டு இப்பிடி ஒரு பதிவு போட்டதுக்கு ..எனக்கு ஆறுதலா சூப்பர்சுப்ரா மட்டும் பதிலளிச்சிருக்கார்..

மகேஸ் .. கொஞ்சம் ஏமாந்த மாதிரி நடிச்சாத்தான் என்ன :)

இருந்தாலும் கொஞ்சப் பேராவது 'ஹ' என ஒரு நொடி ஏமாந்திருப்பாங்கங்கற (அல்ப!) சந்தோஷத்துல திருப்த்தி பட்டுக்கறேன்.. :)

குமரன் (Kumaran) said...

:-)))))

Suka said...

குமரன் ரெம்ப சிரிக்காதீங்க ;)

கொஞ்ச நாள்ல இப்பிடி எதாவது நிஜமான செய்தி கூட வரலாம் ..

நான் இந்த கதைய வேற எங்காவது நம்பக் கூடிய வட்டாரத்துல சொல்லியிருக்காலாம் .

இங்கே ரெஸ்பான்ஸே செரியில்லை :)

Sardhar said...

//கொஞ்ச நாள்ல இப்பிடி எதாவது நிஜமான செய்தி கூட வரலாம் ..//

சரியாச் சொன்னீங்க சுகா..கண் இமைக்கறதன் மூலம் இயக்கறமாதிரி கணணி வர்ற இருக்கறப்போ நீங்க சொன்னதும் சாத்தியமாக ரொம்ப தூரமில்லே. (அப்பாடி! மறுபடி ஒங்களுக்கு ஆறுதலா ஒரு பின்னூட்டம்)

Suka said...

வாங்க .. சர்தார்

ஆறுதலுக்கு நன்றி :)

உண்மை தான் .. என் காலேஜ் முதல் வருஷத்துல இந்தியாவுல பொதுமக்களுக்கு இண்டர்நெட் அறிமுகமாச்சு...

அதுல படங்களோட பார்க்கற வசதி இருக்கற கனெக்ஷன் ..மாதம் 15,000 ரூபாய் !!! இப்ப 250 ருபாய்க்கு அகலகற்றை இணைப்பு...

நான் இந்த 250 ரூபாய் செய்திய அப்ப சொல்லியிருந்தா ஏப்ரல் ஃபூல் தானே :)

supersubra said...

நான் யோசிக்கவே வேண்டாம். என்னுடைய அசைவுகளின் தயக்கத்திலேயே என் மனைவி என் மனதில் உள்ள ப்ரச்னையை கண்டுபிடித்து (பெரும்பாலும் பணம்தான்) உடனே தீர்த்துவிடுவாள். கூகிளுக்கு அந்த திறமை வந்து விட்டால் (கட்டாயம் எதிர்காலத்தில் வரும்) வீட்டு அம்மணிக்கு தொந்தரவு கொடுக்காமல் முழு நேரமும் (இப்பொழுது மட்டும் என்ன ஒரு நாளைக்கு 25 மணி நேரம்) இணைய தளத்தில்தான் உலா வரலாம் என்று நினைத்தேன். இப்போதைக்கு கூகிள் கொஞ்சம் மக்குதான் என் மனைவியை விட. மற்ற படி உங்கள் மற்ற கட்டுரைகளை படித்ததால் இதுவும் அறிவியல் ரீதியான சாத்தியம் என்று நினைத்து அந்த ஒரு நிமிடம் ஏமாந்த்துதான் போனேன்.

Suka said...

ஏமாத்தினதுக்கு சாரி..சூப்பர் சுப்ரா..

பாலி கிராஃபின் அடுத்த பரிணாமம் தினசரி வாழ்க்கையில் புழங்கும் செல்ஃபோன் போன்ற கருவிகள் ஏதேனும் ஒன்றில் வரலாம்..

எனினும் உங்கள் வீட்டைப் பார்த்தால் உங்களுக்கு அது தேவைப்படாது போல :)

உங்களை ஏமாற்றியதற்கு பரிகாரமாக பாலிகிரஃப் குறித்து விரைவில் எழுதுகிறேன் .

சுகா

Unknown said...

இப்டியெல்லாம் குறும்பு பண்ணியிருக்கீங்களா.. நான் இவ்ளோ நாளா கவனிக்கலையே..

Suka said...

:-)