Monday, March 13, 2006

விநாச காலே விபரீத 'பக்தி' !?!

இன்னுமொரு நகைச்சுவை செய்தி

http://dailythanthi.com/article.asp?NewsID=244791&disdate=3/13/2006&advt=2

//
கோவை அருகே பரபரப்புவிநாயகர் சிலையில் இருந்து திருநீர் விழுவதாக பரபரப்புபக்தர்கள் திரளாக வந்து தரிசனம்
துடியலூர்,மார்ச்.13-
கோவை அருகே விநாயகர் சிலையில் இருந்து திருநீர் விழுவதாக நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து திரளான விநாயகர் பக்தர்கள் அங்கு சென்று தரிசனம் செய்து வருகிறார்கள்.
விநாயகர் சிலை
கோவையை அடுத்த துடியலூர் சேரன் காலனியை சேர்ந்தவர் ராஜன். இவர் பெட்டிக்கடை நடத்துகிறார். இவரது மனைவி மாலினி. இவர் புத்தக கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ராஜனும், மாலினியும் சேர்ந்து ஒரு மாதத்துக்கு முன்பு எருக்கம்பூ தண்டை வைத்து புதிய விநாயகர் சிலை ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
மாலினி ஆஞ்சநேயர் வழிபாட்டில் தீவிரம் கொண்டவர். அவர் தினமும் ஆஞ்சநேயருக்கு பூஜை செய்து வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் ஆஞ்சநேயர் படத்துக்கு அருகில் இருந்த விநாயகர் சிலையில் இருந்து திருநீர் விழுந்து கிடந்ததை மாலினி பார்த்தார். விநாயகர் சிலைக்கு மேலே எப்படி திருநீர் விழுகிறது என்று அதிர்ச்சியடைந்த மாலினி உடனடியாக விநாயகர் சிலையை சுற்றி விழுந்து கிடந்த திருநீரை அகற்றினார்.
திருநீர் விழுந்ததாக பரபரப்பு
அதன்பிறகும் சில மணி நேரத்திற்குள்ளாகவே மீண்டும் விநாயகர் சிலையில் இருந்து திருநீர் விழுந்து கிடந்தது. இதைப்பார்த்ததும் மாலினி தனது கணவர் ராஜனிடம் நடந்ததை சொன்னார். இருவரும் ஆச்சரியப்பட்டனர். இதையடுத்து எருக்கம்பூ விநாயகருக்கு இருவரும் பூஜைகள் செய்தனர்.
விநாயகர் சிலையில் இருந்து திருநீர் விழும் தகவல் அந்த பகுதி மக்களிடையே பரவியது. உடனே அக்கம்பக்கத்தினர் பெண்களும், ஆண்களும் திரண்டு வந்தனர். விநாயகர் சிலையை சுற்றி விழுந்து கிடந்த திருநீரை மக்கள் ஆச்சரியத்தோடு பார்த்து தரிசனம் செய்தனர். இந்த சம்பவம் துடியலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றி மாலினி கூறியதாவது:-
விநாயகரின் லீலை
நான் ஆஞ்சநேய பக்தை. எங்கள் வீட்டில் ஆஞ்சநேயர் படத்தை வைத்து நான் தினமும் வழிபடுவேன். ஒரு நாள் எருக்கம்பூ தண்டினால் நானும் என் கணவரும் சேர்ந்து விநாயகர் சிலை செய்தோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு என் கனவில் விநாயகர் வந்து `நான் இருக்கும்போது எப்படி ஆஞ்சநேயருக்கு பூஜை செய்கிறீர்கள். நாளை காலை பாருங்கள்' என்று கூறினார்.
மறு நாள் காலையில் விநாயகர் சிலை மேலே திருநீர் விழுந்து பரவி கிடந்தது. நான் ஏதோ ஞாபகத்தில் திருநீரை அகற்றிவிட்டேன். அதன் பிறகும் சிறிது நேரத்தில் விநாயகர் சிலை மீது திருநீர் விழுந்து கிடந்தது. அதுமட்டுமின்றி சிலை அருகில் வைக்கப்பட்டு டம்ளரில் வைக்கப்பட்டு இருந்த இளநீரையும் காணவில்லை.
அதனால் இது விநாயகரின் லீலைகள் என்று நாங்கள் நினைக்கிறோம். அன்று முதல் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். இது பற்றி இயற்பியல் பேராசிரியர் திருமூர்த்தியிடம் கேட்டபோது `விநாயகர் சிலையில் திருநீர் விழுவது என்பது இயற்கைக்கு முரணாக இருக்கிறது. ஒரு வேளை எருக்கம்பூ தண்டு பவுடராக மாறுகிறதா என்று தெரியவில்லை. இது பற்றி நேரில் பார்த்து ஆராய்ந்தால் தான் தெரியும்' என்றார்.

//


சிறப்பு பூஜைகளிருக்கட்டும் மேலே ஒரு விட்டம் ரெம்ப உழுத்துப் போகியிருக்கிறது போல அதனால் ஜாக்கிரதையாக இந்த பூஜைகளைச் செய்யட்டும்

சுகா

4 comments:

johan-paris said...

suga solluvathu thaan sariyaga irukkuM.
veeddar avathanamaka iruppathu nanru
johan
paris

Suka said...

நன்றி ஜோஹன்..
மன்னிக்கவும்.உங்கள் இரண்டாவது வரி ஏனோ எனக்கு புரியவில்லை. :(

சுகா

வெளிகண்ட நாதர் said...

விநாயகர் கண்ல இருந்து பால் வருதுன்னு ரொம்ப நாளைக்கூ முன்னே டில்லியிலே ஒரு புரளி! விநாயகர் சிலை எங்கெல்லாம் இருந்ததோ அத்தனை சிலையிலையும் பால் வடியுதுன்னு!. முட்டாளா இருக்கிறவரை, இந்த மாதிரி புரளி கிளப்பிவிட ஆயிரம்பேர் இருக்காங்க!

Suka said...

ஹும் .. பச்சைக் கலர் புடவை வாங்கித் தந்தால் அண்ணங்காரங்களுகெல்லாம் புண்ணியம் ன்னு ஒரு புரளி... அதோட எஃபெக்ட் .. ரோட்டுல திரும்புன பக்கமெல்லாம் பச்சை நிறமே.

அட அந்த ஆயிரம் பக்தர்கள்ல ஒருத்தர் கூடவா 'யோசிக்க' மாட்டாங்க :(

பக்தி ரெம்பவே மனவசியப்படுத்திடுது.

சுகா