Tuesday, January 10, 2006

தமிழ் நடிகர்களின் சாஃப்ட்வேர் கம்பெனி - 5

முந்தைய பதிவுகள் : ஒன்று , இரண்டு , மூன்று & நான்கு

மீட்டிங் முடிந்ததும் அனைவரும் தூக்கக் கலக்கத்தில் அறையைவிட்டு வெளியேறினர்.

அறையின் ஒரு மூலையில் லேப்டாப்பிற்குள் தலையை விட்டு கிட்டத்தட்ட ஒருமணி நேரமாக எந்த அசைவுமில்லாமல் அமர்ந்திருந்த சுந்தர்ராஜன் , யாரோ முதுகைத் தட்டுவதை உணர்ந்து
" யா..யா.. ஐ அக்ரி வித் யூ " என்று சொல்லிக் கொண்டே நிமிர்ந்தவர், அறை வெரிச்சோடி இருப்பதைப் பார்த்துத் திகைத்தபடி திரும்ப..

அங்கே சத்தமேஇல்லாமல் வாய் மீது கையை வைத்தபடி நக்கலாக சிரித்துக் கொண்டிருந்தார் சத்யராஜ்.

சத்யராஜ் சிரித்துக் கொண்டே "எதுக்கு இதெல்லாம்... இல்ல எதுக்கு இதெல்லாம்ன்னேன் ..யார் என்ன சொல்றாங்கன்னே தெரியாது... அதுக்குள்ள 'யா யா...' ன்னு அக்ரி பண்ணறீங்களா..."

சுந்தர்ராஜன் " இல்லபா.. டீப் பா மூழ்கி டீபக் பண்னீட்டு இருந்தேன்... அதாதான்...."

"அடடா... இருகூர்ல பொட்டிக்கடை வெச்சிருந்த காலத்திலிருந்து உங்களைத் தெரியும்.. இப்ப எதுக்கு இந்த மழுப்பல்.. ம்ம்ம்... அட சாமீ... மீட்டிங்ல தூங்கறவங்க நெறயா பேரப் பாத்திருக்கேன்... ஆனா தூங்கிக் கிட்டே மீடிங்க்கு வந்து மீட்டிங் முடிஞ்சது கூடத்தெரியாமத் தூங்குற ஒரே ஆளு..." என்ற படி ரெண்டு கையையும் நீட்டி சுட்டிக்காட்டுகிறார்..

" என்ன பண்றது ..இந்தியாவில இருந்திருந்தா ஜோசியகாரன், பாகவதரு வாத்து மேய்க்கறதுன்னு கவுரவமா இருக்கலாம் .. இங்க பாரு என்ன பேசுறம் எதுக்கு பேசுறம்ன்னே தெரியாது ஆனா ரெம்ப பேசி உசுர வாங்குறானுக...இப்பிடி பன்ணுன தூக்கம் வராம என்ன செய்யும்.. இந்த லட்சணத்துல ஏஎம்சில சதிலீலவதி ஸெகண்ட்ஸோ வெற..அதனாலத் தான்.."

" சரி சரி வாங்க .. வெளிய போயி காப்பி குடிச்சுட்டு வரலாம்" என அவரைக் கிளப்பிக் கொண்டு வெளியே போக,

ஆபிஸ்...மீட்டிங் என ஒரே போரடித்ததால் நானும் அவர்கள் பின்னாலயே போனேன்..

அறையை விட்டு வெளியே வந்ததும் எங்கிருந்தோ சுவற்றில் ஊர்ந்துவந்த செக்யூரிடி டிடக்டர் இவர்கள் மீது இன்ஃப்ரா ரெட் லைட் அடித்துப் பரிசோதித்தது..

சுந்தர்ராஜன் " அட ..இதொரு தொந்தரவு கண்ணுக்குள்ள லைட் அடிச்சுக்கிட்டு.. ஆதிகாலத்திலயே இருக்காங்க..இந்தியாவுல பாத்தியா எவ்வளவு அட்வான்ஸ்டு டெக்னாலஜீஸ் வந்துடுச்சுனு"

"அட நீங்க வேற .. இங்க சில கம்பெனில அந்த காலத்து ஸ்வைப் கார்டெல்லாம் வெச்சிருக்காங்களாமா.... சரி சரி நடையக் கட்டுங்க ..கடைய சாத்திடப் போறான்.." சத்தியராஜ்.

வெளியே துள்ளிக் குத்தபடி சத்யராஜ் வர கடந்து சென்ற அமரிக்கப் பெண் ஒன்று " வணக்கம்.. சௌக்கியமா..?" என கேட்டபடி சிரித்துக் கொண்டே கடந்து சென்றது.

பின்னால் வந்த சுந்தர்ராஜன் " ஒசரமா இருந்தா மரியாதையே தனி தாம்பா.." என அங்கலாய்க்க

சிர்த்துக் கொண்டே " நீங்க வேற.. பாண்டியராஜன் இங்க இருந்தாலும் இப்பிடித்தான் தனி கவனிப்பு இருக்கும்.. நாம இந்தியன் சிட்டிஜன் இல்லையா.. அதனாலத் தான் தனி மரியாதை ..வேற ஒன்னுமில்ல.. உங்களுக்கு வயசும் ஆகிப்போச்சு... பத்தாதக்கு சீப்பா கிடைக்குதேன்னு ப்ளேசரை போட்டுட்டு சுத்தீட்டு இருக்கீங்க... ஒரு $200 டாலர் அதிகமாப் போனாப் போகுதுன்னு போத்தீஸ் போயி இந்தமாதிரி கலர் லுங்கி, மைனர் சட்டை, கழுத்துக்கு கர்ச்சீப் ன்னு வாங்க வேண்டியது தான.. எப்பப்பார்த்தாலும் டார்கெட்டு வால்மார்ட்டுன்னு.. அட சே" அலுத்துக் கொள்ள

சுந்தர்ராஜன் " நீ பேசுவப்பா .. ..அப்பிடி இப்பிடின்னு மேக்கப் போட்டு எள ரத்தமாவே ஆகிட்ட.. நானெல்லாம் இன்னியும் கொஞ்ச நாள்ள இந்தியா போனாத்தான் உண்டு.. இரநூறு டாலர்ன்னு சொல்லீட்டே அது 5 ருபாய்ல்லயா.. ருபாக் காசோட மதிப்புதெரியாம ஆடீட்டு இருக்கே..ஆடு ஆடு"

" சரி சரி பொலம்பாதீங்க.. வாங்க வசந்த பவன்க்கு போலாம் .. போயி இட்லி வட காபிய ஒரு கட்டு கட்டலாம்.."

" நேத்து தான சரவணபவனுக்கு கூட்டீட்டு போன.. இன்னைக்கு ஒழுங்கா இங்கத்த கடை எதாவதுக்கு போறோம் சீப்பா முடிக்கறோம்... டெனிஸ் ல சாம்பார் சூப்பரா இருக்கும் தெரியுமில்ல... "

"உங்க கூட வந்ததிற்கு ... " என புலம்பிக் கொண்டே டெனிஸ்ஸுக்குள் நுழைய,

நான் கொஞ்ச நேரம் ஊர் சுற்றிப் பார்த்து அப்புறம் அவர்களோடு சேர்ந்து கொள்ளலாம் என நினைத்தேன்.

கிட்டத்தட்ட சில வருடங்களிலேயே மாபெரும் மாற்றங்கள்... எரிபொருள் பற்றாக்குறை உலகப் பொருளாதாரத்தையே ஒரு புரட்டு புரட்டி இருந்தது. பொருளாதர மாற்றம் கலாச்சாரப் பரிமாற்றத்தையும் எந்த சிரமமுமில்லாமல் நிகழ்த்தியிருந்தது.

கிட்டத் தட்ட இந்தியாவில் சில வருடங்களுக்கு முன்பிருந்த சூழல் இப்போது இங்கே..

நடைபாதைக் கடைகளில் நைக் அடிடாஸ் ஷூஸ் விற்றுக் கொண்டிருந்த பையன் தமிழிலேயே அழைக்க.. சிரிப்புடன் மறுத்து கடந்து சென்றால்..

அங்கே மசாலா மண மணக்க பேல் பூரி விற்றுக் கொண்டிருந்தார் "பூரி ராஜா" என அடையாளமிட்ட சட்டை அணிந்தபெண். பர்கர் கிங் இன் லேட்டஸ்ட் ச்செயின் ஆஃப் தெருவோரக்கடைஸ்.. இதில் அவர்களுக்கு நல்ல லாபம் போல..

சத்யராஜ் பேச்சில் பசி எனக்கும் ஒட்டிக் கொண்டிவிட சாப்பிட நினைத்து பாக்கெட்டில் தேடினால் இந்திய நாணயமே இருந்தது.. 'வி அக்செப்ட் இண்டியன் மனி' என எழுதி இருந்ததைப் பார்த்து 'அப்பாடா' என பேல் பூரி ஆர்டர் செய்தேன்.

லேசாக இருட்ட ஆரம்பித்திருந்தது. அப்படியே ரோட்டில் பார்த்தால் பத்து சைக்கிள் ட்ரேக்குகளும், இரண்டு லைட் ரெயில் ஒரு கார் ட்ரேக்கும் மீடியனின் இரு புறமும் இருந்தன. இங்கே கார்களைப் பார்ப்பது அரிது தான்.

சன் டீவியில் கேட்ட போது பில்கேட்ஸ் புதிதாக எதோ மாருதி காரை இம்போர்ட் செய்திருப்பதாகவும் அதில் எதோ வரிப் ப்ரச்சனை என்றும் ரீஜினல் நியூஸில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். என்ன செய்ய மாருதி , டாடா காரெல்லாம் வாங்கினால் பிரச்சனை வராதா யோசித்துக் கொண்டிருக்கும் போது..

" சூடான பேல் பூரி ரெடி" சொல்லிய படி தட்டை நீட்ட..
பாக்கெட்டில் இருந்த ஒரு ருபாய் நாணயத்தைக் கொடுத்தேன்.. "ஒரு ருபாய்... இந்தாருங்கள் மிதி ஐம்பது டாலர்கள்" எனக் கொடுக்க

இந்தப் பெண் மீதியை 'மிதி' என்கிறதே டோடெல் பரிட்சை எழுதியிருக்காது போல என நினைத்துக் கொண்டே நம்ம ஆட்களைப் பார்க்க டெனிஸ் நோக்கி நகர்ந்தேன்.

இதற்கும் கலிஃபோர்னியாவில் தான் தமிழ் பேசும் அமரிக்கர்கள் அதிகமாம். வியப்பாக இருந்தது.

15 comments:

சந்தோஷ் aka Santhosh said...

சும்மா சோக்கா எழுதி இருக்கேபா. அதுல பஞ்ச் மெட்டரே நம்ம இந்தியாவைப்பத்தி நல்ல எழுதி இருக்கியேஅது தான்.

நிலா said...

அதெப்படி உங்களுக்கு எல்லாரோட ஸ்டைலும் சரளமா வருது? (சுந்தரராஜன் கூடவா? விட்டா பின்னூட்டம் எழுதறதை வைச்சே ஆளுங்களோட ஸ்டைல் கண்டுபிடிச்சு டயலாக் எழுதுவீங்க போலருக்கு) பெரிய விஷயம்தான்.

விறுவிறுன்னு ஆரம்பிச்சு சவசவன்னு முடிஞ்சிருச்சு. 4வது பாகத்தைவிட இது பரவாயில்லை. ஆனால் 2,3 மாதிரி இம்ப்ரஸிவ்வா இன்னும் வரலை. தொடர்ந்து முயற்சி செய்யுங்க.சும்மா குறை சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. இன்னும் பெட்டரா உங்களால எழுத முடியும்னு ஒரு நம்பிக்கையில சொல்றதுதான்.

Suka said...

நன்றி சந்தோஷ்.

Suka said...

நிலா..

ரெம்ப ஓவர டயலாக்கா பேசரத கேட்டு காது கொஞ்சம் வலிச்சது.. அலுவலகத்தை விட்டு வெளிய போய் ஒரு ரவுண்டு வரலாம்ன்னு நெனச்சேன்.அதான் இப்பிடி..

குறை..நிறைன்னெல்லாம் எதுமில்லைங்க.. தோனறத சொல்லுங்க..இதுல என்ன இருக்கு. பெட்டரா எழுத முயற்சி செய்யறேன்..

வஷிஷ்ட்டர் வாயால ப்ரம்மரிஷி பட்டம் வாங்கீட்டு இந்த தொடர முடிச்சுக்கலாம்ன்னு பார்க்கறேன் :)

சுகா

G.Ragavan said...

என்ன சொல்லி நான் எழுத
உங்கள் பதிவினைப் பாராட்ட

நல்லா காமெடியா இருக்கு...

இதுல ஹைலைட் என்ன தெரியுமா? செகண்ட்ஸோ..... ஆமா...சுந்தர்ராஜன் பேசுறப்போ அப்படித்தான் உச்சரிப்பு தெளிவில்லாம இருக்கும்.

Suka said...

நன்றி ராகவன் :)

ஹைலைட் ஸெகண்ட்ஸோவா .. அப்ப நீங்களும் ரீஸண்டா எதாவது படத்துக்கு போயிட்டு வந்து ... சுந்தர்ராஜன் மாதிரி பண்ணீடீங்களா .. :)

சுகா

Karthik Jayanth said...

Suka sir,

sunderrajan & satya raj comedy :-))

Good & nice about India .But kinda resembles a old emails still getting fwd.

Appdiyee heroine intra matter rayum konjam kandu konga.

Suka said...

நன்றி கார்த்திக்..

என்ன ..சார் ..மோர்ன்னுட்டு :)

இந்த தொடரை முடிக்கறதுக்குள்ள நீங்க சொல்ற மேட்டர சேர்க்க முயற்சிக்கறேன்.. எனக்கென்னமோ இந்த விஷயத்துல சொதப்புவேன்னு அபார நம்பிக்கை..ஹும்..பார்க்கலாம்

சுகா

கீதா said...

ஆரம்பம் அசத்தலா இருக்கு. அதும் சுந்தர்ராஜன்


" யா..யா.. ஐ அக்ரி வித் யூ " என்று சொல்லிக் கொண்டே நிமிர்ந்தவர், அறை வெரிச்சோடி இருப்பதைப் பார்த்துத் திகைத்தபடி திரும்ப.."

சூப்பரோ சுப்பர்.

கோபி(Gopi) said...

நல்லாயிருக்கு

//Good & nice about India .But kinda resembles a old emails still getting fwd.//

நான் இதை வழிமொழிகிறேன்.

ஒரு யோசனை:

பலகுரல் கலைஞர்களை (நம் வலைப்பதிவர்களிலேயே பலர் உண்டு) கொண்டு இந்த உரையை ஒலி வடிவத்தில் கொண்டு வந்தால் இன்னும் அருமையாய் இருக்கும்

Suka said...

நன்றி கோபி..
ஒரே மூச்சில் அனைத்து பாகங்களையும் படித்துவிட்டீர்கள் போல.. :)

மின்னஞ்சலில் பார்த்தது போலுள்ளதா..ம்ம்..எனக்கு அது படிக்கக் கிடைக்கவில்லை.. இந்தியா பற்றி கற்பனைகளெல்லாம் ஒரே போல் தான் உள்ளதோ.. :)

இங்குள்ள பலகுரல் கலைஞர்கள் யாரையும் இதுவரையில் நான் அறியவில்லை.. யாரேனும் விருப்பப்பட்டால் ஆட்சேபமேதுமில்லை..ஆனால் இந்தத் தொடரில் பயனுள்ளதாய் எதும் எழுதியதாய்த் தோன்றவில்லை..இதற்குப் போய் எதற்கு இவ்வளவு முயற்சி எடுக்கவேண்டுமென்றும் தோன்றுகிறது :)

சுகா

Anonymous said...

ரொம்ப அறுமையாக உள்ளது.

Suka said...

எனக்கென்னமோ இங்க ஒரு பிழை இருக்கற மாதிரி தெரியுதே ..

அறுமை -> அருமை யா இல்லை அறுவையா :D

Anonymous said...

:o) romba nalla irukunu dhaan sonaen. chinna spelling mistake aayittu..

- tamil

Suka said...

ஓ.. நீங்க தானா இது.. :)

நன்றி தமிழ்.