Saturday, December 31, 2005

தமிழ் நடிகர்களின் சாஃப்ட்வேர் கம்பெனி - 2

முதல் பாகம் இங்கே..

சிவாஜி கேட்டதும் கவுண்டமணி, "அன்னைக்கு என்ன நடந்துச்சுனாங்கையா..." என பிளாஸ்பேக்கை எடுத்துவிட எந்த சிரமமுமில்லாமல் அறையிலிருந்த அனைவரும் ஒரு கொசுவர்த்தி சுருள் சுருள டைம் மெஷினில் பயணம் செய்து அந்த நாளை அடைந்தனர்.

கவுண்டமணி எதோ ப்ரொகிராமை ஒப்பன் சோர்ஸ்ஸில் இருந்து காப்பியடித்துக் கொண்டிருக்க அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த செந்தில் பவ்யமாக "அண்ணே.. எப்பிடின்ணே... இவ்வளவு வேகமா கோடிங் முடிக்கறீங்க..?" என்றார்.

"டே..மண்டையா.. அதெல்லாம் தனித்திறமைடா... இங்க பாரு இந்த கீபோர்டுல கசகசன்னு எத்தனை கீ ன்னு.. அழகா காபி பேஸ்ட் டுனு ரெண்டு பட்டண் பத்தாது...."

"அண்ணே .. சூப்பர்னே.."

" டே.. இதெல்லாம் போயி எல்லார்கிட்டயும் சொல்லனும்டா.. அண்ணன் ஒரு வல்லவரு நல்லவரு .. கோடிங்ல ஒரு புலின்னு.. குறிப்பா நம்ம டாக்குமெண்டேசன் டீம் இருக்கே அங்கே போய் சொல்லணும்... என்ன புரிஞ்சுதா..?.. ம்ம்...நான் என் அறிவுக்கு இந்தியாவுல இண்டியன் பேங்க்ல வேலை செய்ய வேண்டியவண்டா..ம்ஹும்..இங்கபாரு இந்த நாசமா போன நாசாவுக்கு கோடெலுத வேண்டியிருக்கு.."

"அக்காம்ணே.." என செந்தில் சிரித்துக் கொண்டே செந்தில் முன்னால் வர..

" டே.. ரெம்ப முன்னால வராத.. அந்த பவர் பட்டன்ல காலு பட்டுடுச்சுனா..எல்லாம் போச்சு.." என்று சொல்லி முடிப்பதற்குள்..

ஈ என சிரித்துன் கொண்டே " இந்த பட்டனையாண்ணே.." என அழுத்த ஸிஸ்டம் பட்டென அஃப் ஆனது..

"என்னண்ணே.. ஆஃப் ஆயிடுச்சு" என ஆச்சர்யமாய் கேக்க

"டேய் .. வைரஸ் வாயா.." என்ற படி மௌஸைத் தூக்கி அடிக்க வந்த கவுண்ட்ஸிடம் இருந்து தப்பித்து ஓடினார் செந்தில்.

மீண்டும் கொசுவர்த்தி சுருள் ரிவர்ஸில் சுற்ற கான்ஃபரன்ஸ் ரூமுக்கு வந்தனர்.

" என்ன மிஸ்டர் செந்தில் இதெல்லாம் கொஞ்சம் ஓவராப் படலை.. நல்ல நாள்ளயே வேலைய முடிக்கமாட்டார்.. இதுல நீங்க வேற..பார்த்து நடந்துக்குங்க.." என்றபடி அடுத்த ஐட்டத்திற்கு தாவினார் சிவாஜி.

" மிஸ்டர் வடிவேலு, லேப் செட்டப் எல்லாம் எப்பிடி போகுது.. ? லேப்ல இருக்கற எக்யூப்மெண்ட் ஷிப்டிங் மெஸின்ல உக்கார்ந்துட்டு.. அஸிஸ்டெண்ட்ஸைத் தள்ளச் சொல்லி ஆபிஸ் எல்லாம் சுத்திவந்து மெரட்டுறீங்களாம்.. என்ன பழக்கம் இது..?"

வடிவேலு " அய்யா.. இதெல்லாம் ஒரு கெட்டப்புக்கு தான்யா.. இல்லேன்னா அவனவன் லேபுக்குள்ள வந்து வயர கியர புடுங்கி போட்டுடாறானுக.." என்று வழிய..

"வயரு சரி.. அது என்ன கியரு.. நீ என்ன பல்லவன் பஸ்ஸா ஓட்டீட்டு இருக்க" என குரல் ஒன்று கேட்க.. வடிவேலு "ஆஹாஹா..நீ இங்கே தான் இருக்கிறயா " என்று மனசுக்குள் சத்தமாக நினைத்துக் கொண்டே திரும்ப..

வேற யாரு அங்க..லேப்டாப்பில் மறைந்திருந்த முகத்தை நிமிர்ந்தபடி பார்த்திபன்..

அப்புறம் என்ன நடக்குதுன்னு அப்புறம் சொல்லறேன்..

அடுத்த பாகம் இங்கே
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

9 comments:

G.Ragavan said...

// ஈ என சிரித்துன் கொண்டே " இந்த பட்டனையாண்ணே.." என அழுத்த ஸிஸ்டம் பட்டென அஃப் ஆனது..

"என்னண்ணே.. ஆஃப் ஆயிடுச்சு" என ஆச்சர்யமாய் கேக்க //

கண்ணு முன்னாடி படமாத் தெரியுது. செந்திலோட புன்னகையும் கவுண்டமணியின் கடுப்பும் அப்பப்பா........சிவாஜி புருவத்தை உயர்த்திச் செந்திலைப் பார்ப்பதும் செந்தில் பதுங்குவதும் மல்டிபிளக்ஸ் தேட்டர்ல பாத்த மாதிரி இருக்கு. சூப்பரப்பு.

Suka said...

:) நன்றி

சுகா

ரூபா. said...

நன்றி சுகா.

செந்தில் பெட்டோல்மஸின் மெட்டிலை டைத்தது ஞாபகம் வந்து விட்டது.
ஹி ஹி ஹி ஹி.......

Suka said...

சொந்த சரக்கென்று இதில் ஏதும் இல்லை. கவுண்டமணி செய்ததே தான் நான் செய்ததும்..நான் பார்த்த ரசித்த நகைச்சுவைக் காட்சிகள், என்னுடையது மாதிரியான ஒரு அலுலகச்சூழலிள்..

நிஜமாலுமே நம் அலுவலகச் சூழழில் இவர்களை கற்பனை செய்து கொண்டால், அடுத்த முறை மேலதிகாரி கடிக்கும் போது சிவாஜி தான் நியாபகம் வருவார் :)

வருகைக்கு நன்றி

சுகா

பிரதீப் said...

அருமையா எழுதிருக்கீங்க சுகா.
சிரிச்சி சிரிச்சி வயிறே வலிச்சுப் போச்சு

நிலா said...

கலக்கிட்டீங்க.

இது ரெண்டும் நல்ல கற்பனை:

//"டே..மண்டையா.. அதெல்லாம் தனித்திறமைடா... இங்க பாரு இந்த கீபோர்டுல கசகசன்னு எத்தனை கீ ன்னு.. அழகா காபி பேஸ்ட் டுனு ரெண்டு பட்டண் பத்தாது...."//

//"டே..மண்டையா.. அதெல்லாம் தனித்திறமைடா... இங்க பாரு இந்த கீபோர்டுல கசகசன்னு எத்தனை கீ ன்னு.. அழகா காபி பேஸ்ட் டுனு ரெண்டு பட்டண் பத்தாது...."//

Suka said...

நன்றி பிரதீப்.

நன்றி நிலா... என்ன நீங்க எங்க இண்டஸ்ட்ரி இல்ல போல.. சரியா கட் பேஸ்ட் செய்யலயே...
ஒரே லைன ரெண்டு முறை பேஸ்ட் பண்ணீட்டீங்க :)

வாழ்த்த்துக்கள்
சுகா

கோபி(Gopi) said...

எப்படிங்க இப்புடி கலக்கறீங்க..

:-)))))

PositiveRAMA said...

சூப்பரா எழுதியிருக்கீங்க சார்!

வாழ்த்துக்கள்!