இன்று காலையில் பண்பலையில் கேட்ட செய்தி நன்றாக சிரிக்க வைத்தது..
அவங்கவங்க அடுத்த நாட்டைப் பற்றிக் கிண்டலடிக்கறதிலிருக்க சுகம் அனைத்து நாட்டினருக்கும் பொதுதான் போல...
இது அமரிக்காவின் கிண்டல் இங்கிலாந்தைப் பற்றி..
லண்டனில் ஜேப்படித் தொல்லை அதிகமாகி விட்டதாம்... போலீஸார் நேரில் திருடன் ஓடுவதைப் பார்த்தாலும் ஓடிப்போய் பிடிக்க முடியவில்லையாம்.. (இனி நம்ம ஊர் போலீசை யாராவது கிண்டல் பண்ணினீங்கன்னா பாருங்க..)
அதனால ரெம்ப யோசிச்சு சூப்பரா ஒரு ஐடியா பண்ணினாங்களாம் .. (அநேகமா பின்னால விசாரிச்ச போது..அந்த ஐடியாவைக் கொடுத்தது ..போலீஸ் உடையணிந்த திருடன்ன்னு கண்டு பிடிச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்..)
ஐடியா என்னன்னா.. ஸ்கேட்டிங் ஷூஸ்... ஆமாம் ..எல்லா ரோந்து போலீஸ் கால்லயும் சக்கரம் கட்ட சொன்னாங்களாம்..
அதுக்கு கொஞ்ச நாள் ட்ரெயினிங் வேற .. எல்லாம் முடிஞ்சு களத்தில் குதிச்சா .. அங்க அவங்களுக்கு பெரிய ஆப்பு !
திருடங்க இப்ப ரோட்ல ஓடாம ..புல் தரைல ஓடராங்களாம் உண்மைல நடந்தே போறாங்களாம்.. காலில் சக்கரத்தோடு போலீஸார் பாவமா முழிக்கறாங்களாம் ..
இத சொல்லி அமரிக்க ரேடியோ கேலி பண்ணுது .. இவங்களை பத்தி தெரியாதா.. இது ரெம்ப நாள் முன்னால கேட்ட ஜோக்..
அமரிக்கா காரங்க விண்வெளிக்கு போயி.. (ஸ்டுடியோ இல்லைங்க.. நெஜமான விண்வெளி) அங்க எதோ நோட்ஸ் எடுக்க ட்ரை பண்ணும் போது ... பேனா எழுதுலயாம் ..
என்னன்னு பார்த்தா .. விண்வெளில வாயு அழுத்தம் வேறு படரதுனாலன்னு கொஞ்சம் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிச்சாங்களாம்..
அப்புறம் .. இத சரி பண்ண ஒரு ஃபேமஸ் பேனா கம்பெனிக்கு நிறையா மில்லியன் கொடுத்து ஒரு புது டெக்னாலஜி பேனா .. விண்வெளில .. தண்ணீர்க்கடியில பயன்படுத்தறமாதிரி ஒரு சூப்பர் பேனா செஞ்சாங்களாம்.. மறக்காம பேட்டெண்ட் வேற பண்ணீட்டாங்க.. அதுல ரெம்ப கெட்டியாச்சே..
ஆனா ரெம்ப நாட்களும் காசும் செலவாகிடுச்சு..
அப்புறம் யோசிச்சாங்க.. அட நம்ம ரஸ்யாகாரங்க கூட விண்வெளிக்கு போயிருக்காங்களே.. அவங்க கிட்ட கொஞ்சம் ஷோ விடலாம் என அவங்க கிட்ட எல்லா பிரசண்டேஷ்ன்லாம் கொடுத்துட்டு பந்தாவா கேட்டாங்கலாம் ... ' நீங்க எப்பிடி நோட்ஸ் எடுக்கப் போறீங்க? வேனும்ன்னா இந்த டெக்னாலஜிய காசு கொடுத்து வாங்கிக்கங்க " ன்னு தூண்டில் போட்டதும் அவங்க சொன்ன பதில கேட்டு அமரிக்காக்காகாரங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சாம்..
என்ன சொல்லியிருப்பாங்க .. எனி கெஸ் ?
10 comments:
Russians used pencil..
But this incident never happened.It was Just a joke.Russians arent that intelligent
Use pencil
செல்வன், அது ஜோக் தான்...
ரஸ்யன்ஸ்ன்னு புத்திசாலி இல்லைன்னு நாம ஏன் சொல்லணும் .. :) ஒருவேளை நீங்க பார்த்த சிலபேர் மட்டும் கூட அப்படி இருந்திருக்கலாம் இல்லையா.. Just a thought :)
சுகா சார்,
இந்த பென்சில் மேட்டர் ஜோக் இல்லை நிஜமா நடந்தது.. அமெரிக்கா இந்த சூப்பர் பேனாவ 5 வருச ப்ராஜெக்டா பண்ணுனாங்க. Accenture தான் இத செய்த்தது. மொத்த செலவு என்னமோ மில்லியன்ல..
ஆனா ரஷ்யாகாரங்க அசால்ட்டா பென்சில் உபயோகப்படுத்தி மேட்டர முடிச்சிடாங்க.. இந்த தகவலை Out of Box Think பண்ணனும்ங்கறதுக்கு Example ல சொன்னாங்க எங்க கடை IT Architect செமினார்ல.
கார்த்திக் ,
நீங்க சொன்னது சரி தான் .. நன்றி
http://history.nasa.gov/spacepen.html
இந்த இணைப்பில் முழுத் தகவல்..
அடடா..அதுவும் மில்லியன் கணக்கில் செலவிடவில்லை போல..
http://www.snopes.com/business/genius/spacepen.asp
இந்த தளம்.. இதை புரளி என்று சொல்லுகிறது.. உண்மையில் இந்த http://www.snopes.com , புரளி (hoax) செக் செய்ய நல்ல தளம்..
என்னாங்க சார். இது உங்க நட்சத்திர வாரம். சும்மா time pass பண்ணிக்கிட்டு இருக்கீங்க?
//Russians arent that intelligent //
என்ன செல்வன்? நீங்க அமெரிக்காவுல இருக்கிறதால ரஷ்யர்கள் மேல் இப்படி ஒரு அபிப்பிராயமா? :-) யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை சார். ஏன் Generalisation பண்றீங்க?
கார்த்திக் ஜெயந்த் சொல்றது உண்மைதான்னு நெனைக்கிறேன். நானும் இதை பெரிய செமினாரில் கேட்டிருக்கிறேன்.
குமரன் சொல்ற மாதிரி...உங்க நட்சத்திர வாரம் சரியாகப் பயன்படுத்தப்படவில்லையோ என்ன ஐயம் எனக்கும் உண்டு. சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
குமரன், ராகவன் ..
நன்றி ..
உண்மையில் pass time இல் தான் எழுதிவந்தேன் ..இப்போது கொஞ்சம் அதிகமாக எழுதுகிறேன்..
முடிந்த அளவிற்கு இன்னும் அதிகமாக எழுத முயல்கிறேன்..
வாழ்த்துக்கள்
சுகா
Post a Comment