Wednesday, March 29, 2006

தடா முடா ராய்க்கல் .... மரம்புடிச்சு.

.. மசா பந்து ..தண்ணீர் தரை ..அடி ஜான்.. டாம் டூம் .. மேடு பள்ளம்.. உதவி.. கிராப் ..நொண்டி.. ஒளிஞ்ச விளையாட்டு.. ஏழு கல்.. குதிரை.. ராஜாராணீ .. ஒளிச்சுக முழிச்சுக .. தொட்டு விளையாட்டு .. கண்ணாமூச்சி .. கொல கொலயா.. சீட்டு (கல்) ..சீட்டு (அடிச்சு).. குண்டு .. பம்பரம் .. கில்லி .. பல்லாங்குழி.. அஞ்சுகல்.. தாயம். பரமபதம்..நம்பர் பார்த்து ... புக் க்ரிகெட்..

இந்த விளையாட்டுகளையெல்லாம் எத்தனை பேர் விளையாண்டிருக்குறீர்கள் என தெரியாது .. ஆனால் இது மாதிரி வேறு விளையாட்டுகள் .. வேறு பெயரில் விளையாண்டிருக்கக் கூடும் என்றே நினைக்கிறேன். சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தைப் பற்றி ரெம்ப யோசித்ததின் பக்கவிளைவு இது..

இப்போது பொடுசுகள் பெரும்பாலும் கார்ட்டூன் சேனலிலும் கம்ப்யூட்டர்/வீடியோ கேம்களிலும் அதிக நேரம் செலவிடுவதாகவே நினைக்கிறேன் .. கண்களைக் கெடுத்துக் கொண்டு உடல் பெருப்பதும் வாடிக்கையாகிவிட்டது..

வசதி வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் ஒரு விதத்தில் பத்து பதினைந்து வருடங்கள் முன்பிருந்த விளையாட்டுகள் இப்போது மறைந்தே விட்டன என நினைக்கிறேன்..

பழைய விளையாட்டுகள் பற்றி சில வரிகள் பகிர்ந்து கொள்கிறேன்.. நீங்கள் இதை வேறு பெயரில் கூட விளையாடியிருக்கலாம்..

மசா பந்து ..கொஞ்சம் டேஞ்சரஸ் தான் .. ரெண்டு டீம் . ஒரு டீம்ல குறைந்தது 4 பேர்.. பந்த எடுத்து அடுத்த டீம் மேல அடிக்கனும் .. ரெம்ப அடி படாதமாதிரியான பந்து தான்.. அந்த டீம் கைல பந்து கிடச்சுடுச்சுனா ..ஓடி ஒளிஞ்சு தப்பிக்கனும்


தண்ணீர் தரை .. ஒரு வட்டம் அது தான் தண்ணீர்.. வெளில தண்ணீர்... யாரு சிக்கியோ அவங்க தண்ணீர், தரை இல்லைன்னா தண்ணீர்த்தரை ( வட்டத்துல ஒரு கால் .வெளிய ஒரு கால்) ன்னு சொல்வாங்க ... அதுக்கு தகுந்த மாதிரி குதிக்கணும்.. மாறினா அந்த ஆள் சிக்கி..

அடி ஜான்.. கோலி குண்டோ .. கல்லோ .. யூஸ் பண்ணலாம் .. கால்ஃப் மாதிரி :) .. அடுத்தவன் கல்ல முதல்ல வீசிடுவான் .. ரெண்டாவது ஆள் அதை அடிக்க ட்ரை பண்ணலாம் .இல்லைன்னா அந்தக் கல்லுக்கு ஒரு ஜான் பக்கத்துல கொண்டு போய் நிருத்தி மறுபடியும் அடிக்க ட்ரை பண்ணலாம்.. எவ்வளவு தூரம் தள்ளீட்டு போறமொ அவ்வளவு தூரம் அந்த ஆள் நொண்டனும்

தடா முடா ராய்க்கல்... கொஞ்சம் ஜாக்கிரதையா விளையாடனும்.. ஆளுக்கொரு குச்சி வச்சிருக்கனும்.. யார் சிக்கியோ அவங்க குச்சி கீழ கிடக்கும் .. அடுத்தவங்க அவங்க குச்சிய எதாவது கல் மேல ஊன்றி இருக்கனும் . .. சிக்கியான ஆள் ஏமாறும் போது அவன் குச்சிய தள்ளிவிடனும்.. தள்ள ட்ரை பண்ணும் போது தொட்டு விட்டால் அவுட்..

மரம் புடிச்சு .. தென்னந் தோப்பு என்றால் .. மரமே . இல்லைன்னா .. ஜன்னல் தான் மரம் ... இத விளையாட அருகருகே ஜன்னல் இருக்கும் வீடுகள் வேண்டும்..

டாம் டூம் .. யாரது ... பேயது .என்ன வேண்டும்... நகை வேண்டும் .. என்ன நகை .. கலர் நகை... என்ன கலர்? . இந்த கேள்விக்கு சிக்கியானவன் எதாவது ஒரு கலர சொல்லீட்டு தொட ஒடி வருவான் ... அவன் வர்ரதுக்குள்ள அந்த கலரைத் தொட்டுடனும் ....

புக் கிரிக்கெட் ....க்ரூப் ஸ்டடில இத விளையாடத ஆளுயாராவது இருப்பாங்களா என்ன ;)

மேடு பள்ளம்.. இது தண்ணீர் தரை மாதிரியே ... நீண்ட திண்ணை இருக்கும் போது விளையாடலாம்...

உதவி.. கிராப் ..நொண்டி.. ஒளிஞ்ச விளையாட்டு.. ஏழு கல்.. குதிரை.. ராஜாராணீ .. ஒளிச்சுக முழிச்சுக .. தொட்டு விளையாட்டு .. கண்ணாமூச்சி .. கொல கொலயா.. சீட்டு (கல்) ..சீட்டு (அடிச்சு).. குண்டு .. பம்பரம் .. கில்லி .. பல்லாங்குழி.. அஞ்சுகல்.. தாயம். பரமபதம்..நம்பர் பார்த்து ... இதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்ச விளையாட்டுத் தானே..

உங்க வீட்டு பொடுசுகளுக்கும் சொல்லிக் கொடுத்து விளையாட வைங்க.. :)

4 comments:

ILA (a) இளா said...

கடைசியா காலேஜ்லதாங்க நாங்க கில்லி விளையாடினோம், அப்புறமா இது மாதிரி விளையாட வாய்ப்பே கிடைக்கல

Suka said...

உங்களுக்காவது காலேஜ்ல கூட விளையாட முடிந்ததே.. எனக்கு ஸ்கூல் டைமோட முடிஞ்சு போச்சு :(

சிவா said...

சுகா! பழச எல்லாம் கிளறி விட்டுட்டீங்க. நன்றி.

//** வசதி வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் ஒரு விதத்தில் பத்து பதினைந்து வருடங்கள் முன்பிருந்த விளையாட்டுகள் இப்போது மறைந்தே விட்டன என நினைக்கிறேன்..**//
உண்மை தான் சுகா! சென்னை போன்ற பெருநகரங்களில் யாருக்கும் உடம்பு நோக விளையாட்டு என்பதை பற்றி யோசிக்க நேரம் இருப்பதே இல்லை. படிப்பு, டி.வி என்றே வாழ்க்கை போய் விடுகிறது. :-(

Suka said...

சிவா.. (நி.பெ குரலில்) இந்த வாரம் மலரும் நினைவுகள் வாவாவாரம் .. :)

அப்பார்ட்மெண்ட்களில் உள்ள குழந்தைகள் கூட ஒன்று சேர்ந்து விளையாடாமல் வீட்டிலேயே முடங்கி இருப்பது ஒரு பெரிய கொடுமை ..

ஒரு விதத்தில் பெற்றோரின் சோம்பேறித் தனம் கூட இதற்குக் காரணமாயிருக்கலாம்...

சக நண்பர்களுடன் சேர்ந்து விளையாடும் விளையாட்டுக்கள் கற்றுக் கொடுக்கும் சில நல்ல பண்புகள் கணிணி விளையாட்டுகளில் கிடைப்பதில்லை..

டீ.வியும் கணிணியும் குழந்தைகள் உடல் பெருக்கவும் காரணமாகிவிடுகின்றன..