இந்த வாரம் தமிழ்மண விண்ணோக்கி என் பக்கம் பார்த்திருக்கிறது... எனக்கு சந்தோஷம் தான்.. உங்களுக்கு எப்படியோ ? என்னைப் பொறுத்தவரை வலைஞர்கள் அனைவருமே சந்தோஷத்தையே அளிக்கிறார்கள் . பலர் வலைப்பதிவிடும் போது.. சிலர் வலைப்பதிவிடாத போது...
மேடையில் சும்மா அமர்வதே ஒரு குடைச்சல் .. அதுவும் பேச வேண்டுமென்றால் ... அதிலும் தலைப்பே எதுமின்றி பேச வேண்டுமென்றால்?
சரி .... எப்படியும் கொஞ்சமாவது படிப்பவர்களுக்கு உபயோகமாக இருக்க, முடிந்தவரை முயலவேண்டியது தான் ... முயற்சி தானே வாழ்க்கை..
இருந்தாலும் இந்த பதிவு மட்டும் கொஞ்சம் சொந்தக்கதை.. ;)
நான்கரை ஆண்டுகளிலேயே என் தொந்தரவு தாங்க முடியாமல் பள்ளியில் சேர்க்க .. பத்தாண்டுகள் இராஜலக்ஷ்மி உயர்நிலைப் பள்ளியில் படிப்பு... கோவை திருச்சி சாலையில் உள்ள இந்தப் பள்ளி பாரம்பரியம் மிக்கது ... என் ஒன்றாம் வகுப்பு ஆசிரியர் தான் .. என் தந்தைக்கும் ... என் தங்கைக்கும் ... கடைசி வரை அவர் பாஸ் செய்யவே இல்லை (Just kidding .. அருமையான ஆசிரியர்) 94 இல் பத்தாவது முடித்தபிறகு இன்றும் கோவை செல்லும் போது ஆசிரியர்களை சந்திப்பேன் .. கற்றுக் கொள்ள வேண்டியது மட்டும் என்றும் தீராது போல..
(இந்த பதிவு மூலம் முன்னாள் மாணவர்கள் தொடர்பு கிடைத்தால் மகிழ்ச்சி)
என் ஓவிய ஆர்வத்திற்கு வித்திட்டவர் சாலமன் என்ற ஆசிரியர். ஓவிய வகுப்புகளுக்கு நாங்கள் அதிகம் பயப்படுவோம்... கலர் பாக்ஸ் , ப்ரஸ் கொண்டு வரவில்லை எனில் மண்டி தான் :( அவர் எனது முதல் Inspiration.. ஆனால் இதற்கு மற்ற பாடங்களுக்கு இணையான முக்கியத்துவம் தரப் பட்டது... அதே போல் ஆறாம் வகுப்பிலிருந்தே வாழ்க்கைக் கல்வி(Life Oriented Education) என்ற வகுப்பில் மர வேலை செய்ய சொல்லிக் கொடுத்தனர்... இன்று நினைத்துப் பார்த்தால் அந்த வகுப்புகள் எவ்வளவு முக்கியமெனப் படுகிறது.. எனக்குத் தெரிந்து இப்போதெல்லாம் பொதுத்தேர்விற்கு மட்டும் தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. கொஞ்சம் இந்த விஷயங்களுக்கும் முக்கியத்துவம் தந்தால் பிற்காலத்தில் சிறிது நல்ல உபயோகமாக இருக்கும்.. ஓவியம் வரையதே மனத்திற்கு இதமானது தான் ... வண்ணக் கலவைகளும் தூரிகைகளின் வெவ்வேறு patternகளும் ஒருவித போதைதான் :)
பெரிய வசதியான பள்ளிகளில் படிப்பதை விட மற்ற பள்ளிகளில் படிப்பது, படிப்பைத் தவிர பல விஷயங்களைக் கற்றுத் தருவதாகவே உணர்கிறேன். ஆசிரியர்களைத் தவிர வேறு வேலைக்கு ஆட்கள் குறைவாக இருப்பதால், மாணவர்களே செய்ய வேண்டிவரும்.. சுதந்திர தின, குடியரசு தின, ஆண்டு விழா, விளையாட்டு விழாவின் பொறுப்புகள் வழக்கமான படிப்புச்சுமைக்கு நல்ல மாற்று மருந்து.. ஓடியாடி வேலை செய்யும் போது இருக்கும் பரபரப்பும் , மாலையில் எல்லாம் ஓய்ந்த பிறகு இருக்கும் களைப்பும் சுகமே... பின்னாட்களில் மென்பொருள் துறை தான்கதியென முன்பே தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் வேலை அதிகம் செய்திருக்கலாம் ... :)
பள்ளி, கல்லூரி முடித்து சென்னைக்கு முதல் வேலைக்கு வந்தது கொஞ்சம் நெர்வஸான அனுபவம். தனியே முதலில் ரயிலில் பயணம் செய்து வீட்டில் போட்டுக் கொடுத்த மேப் படி சென்ட்ரலிலிருந்து சஃப் வே வழியே வெளியே வந்து வா.ஊ.சி நகர் போக பஸ்டேண்டிற்கு வந்த போது 71 அங்கே நிற்குமா என சந்தேகம். யாரைக் கேட்கலாம் என யோசித்து டீசண்டாக உடையணிந்த ஒருவரிடம் "எங்க .. இங்க 71 நிக்குங்களா" என்ற போது அவர் தமிழில் முதல் முறையாக 'ங்' என்ற எழுத்தை கேட்பவர் போல் மேலும் கீழும் பார்த்துவிட்டு 'ம்' என்றார்.. டக் கென 71 வர அதை நோக்கி நகர " அத்து செவன் ஜே பா" என்றார்...ஹீ ஹீ என வழிந்தாலும் அவர் கேட்காமலே உதவியதால் உடனே சென்னையை பிடித்துப் போயிற்று.
அண்ணாநகர், வெஸ்ட் மாம்பலம் அப்புறம் கோயம்பேடு கேம்ஸ் வில்லேஜ் என நான்காண்டுகளில் மூன்று மாற்றங்கள்.. எங்கே மாறினாலும் மாறாதது சரவணபவன் சாப்பாடு .. "நீங்க புதுசுங்களா" என சர்வர்களைப் பார்த்துக் கேட்குமளவிற்கு அடிக்கடி விசிட். வெஸ்ட் மாம்பலத்தில் கவனித்தது ..மாடுகளுக்குத் தான் ரைட் ஆஃப் வே போல... ராமராஜன் இங்கே இருந்திருப்பாரோ !!
கொஞ்ச நாள் பெங்களூர் வாசம், பின் இங்கே கலிஃபோர்னியாவின் சேன் உஸேவிலிருந்து ஸ்காட்ஸ் வேலிக்கு ஹைவே 17 ஐ தேய்க்கிறேன். அருமையான இயற்கை எழில் கொஞ்சும் சாலை. வளைவுகள் கொஞ்சம் அதிகம்.. வண்டி ஓட்டும் போது இயற்கையை ரசிக்க முடியாது.. சாலையில் அதிக கவனம் தேவை..
'வானம் எனக்கொரு போதிமரம்' என்பது வெகு உண்மை .. உலகின் சிறந்த ஒவியர் வானமென்பதை நிரூபிக்கும் விதத்தில் இங்கே தினம் தினம் மேகத்தின் ரசிக்கும்படியான பல pattern கள் இங்கே .. சில வளைவுகளின் பள்ளத்தாக்குகளைப் பார்த்தால் காலடியே மேகங்கள் படர்ந்திருப்பதைக் காணலாம்.. கொடைக்கானல் போலிருக்கும்
இப்போதைக்கு இவ்வளவே .. இந்த வாரம் இனிய வாரமாகட்டும்.
வாழ்த்துக்கள்,
சுகா
(கொஞ்சம் சொற்களுக்கு தமிழ் வார்த்தை தட்டுப்படவில்லை.. மன்னிக்கவும்.. உங்களுக்கு தெரிந்து, தெரிவித்தால் மகிழ்ச்சி)
38 comments:
நீங்களும் கோவைத்தம்பியா?வருக வருக.,..
கோவையில் எந்த கல்லூரியில் படித்தீர்கள் என்று சொல்லவில்லையே?
வாங்க செல்வன்.. :) நான் படித்தது குமரகுருவில்..
சுகா
நட்சத்திரத்துக்கு என் வாழ்த்துக்கள்.
சார். நம்ம கடைக்கு கோலிவுட்டே ஒர்ரு IT ப்ராஜெக்ட்ல வேலை பாத்திங்களே. அத பாதில நிப்பாட்டுனா நல்லாவா இருக்கு :-). நேரம் கிடைக்கும் போது எழுதுங்க :-)
நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்.
கார்த்திக் ..
இன்னமும் மறக்காமல இவ்வளவு ஆர்வமாக இருக்கறீங்க :) ..இன்னைக்கு நைட் எவ்ளவு நேரமானாலும் அதை பதிவிட்டுட்டுத்தான் மறுவேலை ..ஓகேவா .. நன்றி
குமரகுரு சூப்பரான காலேஜாச்சே..
கொங்கு நாட்டின் சார்பில் முதல் வலைபதிவர் நீங்கதான்ன்னு நினைக்கிறேன்.நட்சத்திர வாரம் முழுக்க கலக்கி எடுத்துடணும் சரியா?
சார்,
எப்படி சார் மறக்க முடியும். அப்பத்தான் எதோ தட்டுதடவி தமிழ்ல எழுத முயர்ச்சி பண்ணுன நேரம். அதுவும் போக நமக்கு கிண்டல் / காமெடின்னா ஹி ஹி.
SanjOse லயா இருக்குகாப்புல. நல்ல ஊர். ஹும். நமக்குத்தான் குடுப்பினை இல்ல.
இராமநாதன்,
வாழ்த்துக்களுக்கு நன்றி..
செல்வன்..
;) கோவையில இருந்து நிறையபேர் இருக்கறாங்கன்னு நினைக்கிறேன்.. எதோ என்னால முடிஞ்சத எழுதறேன்..
கார்த்திக்,
முடிஞ்சா எதுதான் முடியாது.. குடுப்பினை கிடிப்பினைன்னு ..:)
வாங்க சுகா. இந்த வாரம் இனிய வாரமாக அமைய எனது வாழ்த்துகள்.
நட்சத்திரத்துக்கு வாழ்த்து(க்)கள்.
முதல் நட்சத்திர வலைபதிவர்னு சொல்ல வந்தேன்.மாத்தி அடிச்சுட்டேன்.கோவையிலிருந்து சூப்பர் சுப்ரா மற்றும் அடியேன் முதலிய பல வலைபதிவர்கள் உள்ளோம்.
ராகவன்,
வாங்க.. நன்றி
துளசி,
நீங்க யானை வளர்க்க முடியலேன்னு பூனை வளர்க்கறீங்க.. நான் பூனை கூட வளர்க்கமுடியலேன்னு ..இப்போதைக்கு எலி தான் வெச்சிருக்கேன் .. நன்றி :)
செல்வன்,
'அடியேன்' ஆ :) பழம்பெரும் நடிகர் மாதிரி பேசுறீங்க ..
wish you the best!
வாழ்த்துக்கள் சுகா... இனிய வாரமாக மலர என் வாழ்த்துக்கள்...
அன்புடன்
அகா ("அ. கார்த்திகேயன்")
(மற்றொரு கார்த்திகேயன் ஆச்சே ???)
நன்றி பொட்டீக்கடை :)
கார்த்திகேயன்.. நீங்க "அகா" இல்லை "குகா" (குசும்பு கார்த்திகேயன்) :)
நன்றி
சுகா
இனிய வாரமாக அமைய வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் கார்த்திகேயன். நிறைய வலைப்பதிவர்கள் இருந்தாலும், நட்சத்திர வாரத்துக்குள் வரும்போதுதான், ரசனை தொடங்கி இருப்பிடம் வரை தெரிவதால் கூடுதல் பாசத்துடன் அந்யோன்யப் படுகிறோம். இதன் பிறகு உங்கள் நட்பின் வட்டம் விரிவடையும்!!
நட்சத்திர வாழ்த்துக்கள் சுகா!
நம்மூரு பயலுக இளக்கிய ஆர்வத்துக்கு அளவே இல்லைங்ங்..! :)
கலக்குங்க இந்தவாரம்...
நன்றி முத்துக்குமரன்..
நன்றி தாணு... உண்மை தான் .. நான் அடிக்கடி பதிவிடாததால் இந்த அளவிற்கு ரெஸ்பான்ஸை எதிர்பார்க்கவில்லை தான்.. பரவாயில்லை வாழ்த்துக்கள் நல்ல ஊக்கமளிக்கிறது..
நன்றிங் இளவஞ்சி..
என்னமோ போங்க .. ப்ளாகைப் பொறுத்தவரைக்கும் நாம எழுதறதுதானுங்லே இலக்கியம் :)
நம்மூரு தம்பிக்கு வாழ்த்துங்கண்ணா :)
வாங்க.. வாங்க்.. வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்களுக்கு நன்றி ராசா, மணியன் அவர்களே..
நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள் !!!
அப்புறம் அந்த போட்டா, சூப்பரா இருக்குங்க.. ஹைவே 17ன்னு சொல்றீங்க.. ஒரே ஜாலிதானா ??
நட்சத்திர வாழ்த்துக்கள் கொங்கு அண்ணே!
நட்சத்திரக் கோவையாருக்கு வாழ்த்துகள்.
நன்றி சிங்.செயக்குமார், பாரதி, ஞான வெட்டியான் அவர்களே..
சோம்பேறி பையன்
(ன்னு கூப்புடறது .எதோ திட்ற மாதிரி இருக்கு.. சாரி)
அந்த ஃபோட்டோ , சென்னை MGM ல ஒரு அவுட்டிங் அப்போ எடுத்தது.. லாஸ்ட் பால்ல கேட்ச் புடிச்சா வின் ..இல்லைன்னா அவ்ளவு தாங்கிற நிலமை ... இந்த படத்த பத்திரப்படுத்தீருக்கென்னா ரிஸல்ட் என்னவா இருந்திருக்கும் :)
நன்றி,
சுகா
வாழ்த்துகள் சுகா. போன வாரம் தான் கலிஃபோர்னியா பக்கம் வந்திருந்தேன். எல்.ஏ.வும் சான் டியேகோவும் பாத்துட்டு ரெண்டு நாள் லாஸ் வேகாஸ் போயிட்டு வந்தோம். தெரிஞ்சிருந்தா சான் ஜோஸுக்கும் ஒரு விசிட் அடிச்சிருக்கலாம். :-(
உங்க பதிவுகளை இதுக்கு முன்னாடியே படிச்சிருக்கேன். ஆனால் பின்னூட்டம் போட்டிருக்கேனான்னு தெரியலை. பின்னூட்டம் போட்டிருக்கேனா?
தாணு சொன்ன மாதிரி இனி உங்களுக்கும் நிறைய புதிய நண்பர்கள் கிடைப்பார்கள் - ஒன்னே ஒன்னு. இந்த வாரம் நல்லா இருக்கணும்... சொதப்பக் கூடாது. :-) சரியா?
வாங்க குமரன்... நன்றி
அடடா .. நான் முன்னாலெயே சொல்லி இருக்கலாம்.. எல்.ஏ, சின் சிட்டி :) எப்பிடி இருந்துது.. ? லாங் வீக்கெண்ட் கூட இல்லை ...ஆனாலும் பயணமா.. கலக்குங்க..
நீங்க ரெண்டொரு முறை கருத்து தெரிவிச்சிருகீங்க ..
எனக்குத் தெரிந்தத எழுதறேன்.. சொதப்பாம இருக்கனும்ன்னா ..சீரியஸா எழுதாம கொஞ்சம் ஜாலியா எழுதனும்ன்னு நினைக்கறேன் :)
படிச்சுட்டு எப்பிடி இருக்குன்னு சொல்லுங்க
//'வானம் எனக்கொரு போதிமரம்' என்பது வெகு உண்மை .. உலகின் சிறந்த ஒவியர் வானமென்பதை நிரூபிக்கும் விதத்தில் இங்கே தினம் தினம் மேகத்தின் ரசிக்கும்படியான பல pattern கள் இங்கே .. சில வளைவுகளின் பள்ளத்தாக்குகளைப் பார்த்தால் காலடியே மேகங்கள் படர்ந்திருப்பதைக் காணலாம்.. கொடைக்கானல் போலிருக்கும் //
NICE!
-Mathy
நன்றி மதி..
என்னதான் இருந்தாலும் ..இதை விவரிக்க வார்த்தை பத்தாது.. இந்த சீசன் முடிவதற்குள் ஒரு புகைப்ப்படமெடுத்து அளிக்க முயல்கிறேன்
சுகா,
நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்...எழுதுங்க...
அப்படியே உங்களையே நீங்களெ வரைஞ்ச ஓவியத்தையும் போடுங்க..பார்ப்போம்....
நன்றி முத்து...
நான் நல்லா வரஞ்சு பழகினதுகப்புறம் தான் என்ன வரயலாம்ன்னுட்டு இருக்கேன் ;) ..
சுகா
வாழ்த்துக்கள் கார்த்திகேயன்
உங்கள் ஓவியங்கள் பார்த்தேன். நன்றாயிருக்கின்றன.
தொடர்ந்தும் வரைந்து உங்கள் திறமையைப் பெருக்குங்கள்.
வாழ்த்துக்கள் கார்த்திகேயன்
உங்கள் ஓவியங்கள் பார்த்தேன். நன்றாயிருக்கின்றன.
தொடர்ந்தும் வரைந்து உங்கள் திறமையைப் பெருக்குங்கள்.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சந்திரவதனா .. !
சுகா,
உங்கள் பதிவுகள் அனைத்தும் ரசிக்கும்படியாக இருக்கின்றன.
சான்ஹொசேவிலிருந்து 17 வழியாக ஸ்காட்ஸ்வேலி? விப்ரோவா நீங்கள்? நான் 2000ல் சான்ஹொசே(Kingdale oaks, 1919 Fruitdale avenue)வில் தங்கியிருந்தபோது, ஒரு 15-20 பேர் அங்கிருந்து car pool இல் ஸ்காட்ஸ்வேலி சென்று வருவார்கள்.
சனி, ஞாயிறு போரடித்தால் காரை எடுத்துக்கொண்டு 17 வழியாக சாந்தாகுரூஸ் பீச் சென்றுவிடுவோம். 17ல் கார் ஓட்டுவதே ஒரு பரவச அனுபவம். ஊட்டி மலைப்பாதையில் 70-80 கி.மீ வேகத்தில் போவதைப் போன்ற த்ரில்லிங் அது.
நமக்குள் பல விஷயங்கள் ஒத்துப்போகின்றனவே! சான்ஹொசே, கொங்குநாடு முதல் 71 நிக்குங்களா வரை.
மேலும் சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்.
நன்றி
கமல்
வாங்க கமல்.. :)
நன்றி..
நான் ஒரு start-up கம்பெனியில் வேலை செய்கிறேன்..
வளைவுகள் மிக ரம்யமானவை.. எனக்கு பயண சலிப்பே தெரியாது. கார்ப்பூல் செய்ய எனக்கும் விருப்பமே ஆனால் தெரிந்தவர் யாருமில்லை.. யாருக்கேனும் தேவைப்பட்டால் தனிமடல் அனுப்பவும்.. எரிபொருள் தேவையை குறைத்து அடுத்த ஈராக்கையாவது காப்பாற்ற முயல்வோம்..
வரலாறு தளம் வெகு அருமை.. நன்றி..
Post a Comment