Thursday, March 30, 2006

நோபல் பரிசின் ஏமாற்றமான மறுபக்கம்


சென்ற வாரம் தொலைக்காட்சி (KQED) யில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி என்னை மிகவும் பாதித்தது. ஒரு நோபல் பரிசின் மறுபக்கம் இவ்வளவு மோசமானதாக இருக்கும் என நான் கனவினுலும் நினைக்கவில்லை.

ஏப்ரல் 15, 1953 இல் இயற்கை(Nature) என்ற அறிவியல் இதழில் மூன்று முக்கிய ஆய்வுக் கட்டுரைகள் வெளியாயின. அவை மூன்றும் இன்றைய மருத்துவத்துறை வளர்ச்சியின் அடிப்படையான டி.என்.ஏ வின் கண்டுபிடிப்பைப் பற்றியவை. முதன் முறையாக அந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.

அந்தக் கட்டுரைகள் மரபணுவின் அமைப்பின் இரும்புத்திரை ரகசியத்தை உடைத்து அதன் டபுள் ஹீலிக்ஸ் எனும் வடிவத்தை உலகிற்குக் காட்டின. இந்த ரகசியம் மனித உடலில் வியாதிகள் பரவும் விதத்தையும் அதற்கு உடல் தகவமைத்துக் கொள்ளும் விதத்தையும் அறிவியலாலர்களுக்கு எளிதில் புரியவைத்து பலப் பெரும் வியாதிகளுக்கு மாற்று மருந்துகளைக் கண்டுபிடிக்கப் பெரிதும் உதவியது. இப்போது கண்டுபிடிக்கப்பட்ட பல மருந்துகளுக்கு இந்த நிகழ்வே முன்னோடி என்க் கூறலாம்.

1950க்கு முன்பு அறிவியலாலர்களுக்கு மரபணுவைப் பற்றி ஒரு விதமான அனுமானத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை. கிரகார் மெண்டலின் அடிப்படைக் கோட்பாடுகள் மட்டுமே அவர்கள் அறிந்திருந்தனர். அதற்கு அடுத்த படியை அடையும் ஓட்டப்பந்தயத்தில் அறிஞர்களுக்கிடையே கடும் போட்டி இருந்தது.

சிலருக்கு ரோஸாலின் பிராங்ளின் பற்றி.. அவர் ஒரு கெமிஸ்ட், எக்ஸ் ரே கிரிப்டலோகிராஃபர் என தெரிந்திருந்தது. இன்னும் சிலருக்கு மட்டுமே அவருடைய எக்ஸ்ரே படங்களே.. இந்தப் புதிய கண்டுபிடிப்பிற்கு அடிகோலின என்றும் தெரிந்திருந்தது. ஐன்ஸ்டீனின் ரிலேடிவிடிக்குப் பிறகு அந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக மிளிர்ந்த டி.என்.ஏ வின் வடிவக் கண்டுபிடிப்பின் பின் உள்ள ஒரு அசிங்கமான நம்பிக்கைத் துரோகம் விஷயமறிந்த பலரைப் பலகாலம் துக்கத்திலாழ்த்தியது.

1951 இல் ரோஸாலின் லண்டனின் கிங்ஸ் காலேஜில் ரேண்டல் லேபில் ஆராய்ச்சியாளராகச் சேர்ந்தார். அங்கே ஏற்கனவே இருந்த மௌரிஸ்க்கு ரோஸலினை அவ்வளவாக பிடிக்கவில்லை.

ஐந்து அடி உயரம்..வெகு ஒடிசலான தேகம்..யாரையும் சகஜமாய் பழகவிடாத வெட்கம்..வேலையைத் தவிர வேறெதையும் நினைக்காத குணம், எப்போதும் ஆராய்ச்சியே என கரும சிரத்தையாய் இருப்பது.. மனதில் பட்டதை வெளிப்படையாய் சொல்லுவது..போன்ற குணங்கள் அவருக்கு நண்பர்கள் யாரையும் சேர்க்கவில்லை..

பின்னாளில் நோபல் பரிசு வாங்கிய வாட்சன் தனது சுயசரிதையில் கூறுகையில் " ரோஸாலின் ஒரு பெண் போலவே இருக்கவில்லை.. உடையிலோ ..முக அலங்காரத்திலோ எதிலும் நாட்டமில்லை.." என தன் ஆணாதிக்கத்தைக் கொட்டினாலும் " அறிவுக்கு மட்டும் பஞ்சமில்லை" என ஒத்துக் கொண்டார்.

கிங்ஸ் காலேஜில் ரோஸாலின் , மௌரிஸ் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை.. டி.என்.ஏ வின் வடிவத்தை எக்ஸ்.ரே மூலம் கண்டறிவது..

அதே நேரத்தில் கேம்பிரிட்ஜ் லேபில் வாட்சனுக்கு புரதங்களை ஆராய்ச்சி செய்யும் வேலை இருந்தது..ஆனால் அதில் நாட்டமில்லாமல் இவர்கள் ஆராயும் டி.என்.ஏ பக்கம் அவர் கவனம் திரும்பியது.

ரோஸாலினின் கடின உழைப்பு படிப்படியாக பலனளிக்கத் துவங்கியிருந்தது.. மௌரிஸ்க்கு பெண்ணுடன் வேலை செய்யவேண்டியிருக்கிறது என்ற ஒரு குறுகுறுப்பும்..அதிலும் அவள் நன்றாக வேலை செய்கிறாலோ என்ற எரிச்சலும் அதிகமாகிக் கொண்டே வந்தது.

1951 இல் மௌரிஸ் வாட்சனை சந்தித்து பழக வாய்ப்பு கிடைத்தது.. ரோஸலினைப் பற்றிய மௌரிஸின் எரிச்சல்.. கிங்ஸ் காலேஜை ..கேம்பிரிட்ஜ்க்கு முன்னாலிழுத்துச் செல்லும் ரோஸலின் மீது உள்ள வாட்சனின் வெறுப்பு ..இரண்டும் இவர்களை நண்பர்களாக்கியது.

சில மாதங்களுக்கு பின் நவம்பர் 1951 இல் ரோஸலின் ஒரு ஆராய்ச்சி வகுப்பில் அதுவரையிலான தன் கண்டுபிடிப்பை விளக்கி .. டி.என்.ஏ வின் முதுகெலும்பு அதற்கு வெளியிலேயே அமைந்துள்ளது..அது ஹெலிக்கள் வடிவம் என விளக்கினார்.

வாட்சன் அந்த வகுப்பில் அமர்ந்திருந்தார்.. குறிப்பேதும் எடுக்காமல்..தவறாக சிலவற்றை நினைவில் இருத்தினார். அதற்கு இரண்டு காரணம் ..ஒன்று அவர் ரோஸலின் போல கெமிஸ்ட்ரி மேஜர் அல்ல... இரண்டாவது ஒரு பெண்ணின் லக்ட்சரை கேட்பதா என்ற எண்ணம்..

அவர் தன் அரைகுறை அறிவுடன் கிர்க் என்பவருடன் சேர்ந்து ஒரு மாதிரியை உருவாக்கினார்.. அதன் அடிப்படையே தவறாக முதுகெலும்பை உள் நிறுத்தி டி.என்.ஏ வடிவம் செய்து அதை மௌரிஸ் மற்றும் ரோஸலின் முன் சமர்ப்பித்தார்.

ரோஸ்லின் அதை தக்க காரணங்களுடன் தவறு என அனைவர் முன் நிரூபித்துவிட..வாட்சன் , கிர்க் இருவருக்கும் அவமானத்துடன் எரிச்சலும் வந்துவிட்டது. இவர்களின் இந்தத் தோல்வி அவர்களது கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சி தலைமைக்கு எட்ட ..புரதங்களை ஆராயமல் கால விரயம் செய்ததால் கடும் கோபம் கொண்டு டி.அன்.ஏ ஆய்வை அத்தோடு முடித்து பழைய ஆய்விற்குத் திரும்ப உத்தரவிட்டது.

ரோஸலினின் வளர்ச்சியை அங்கீகரித்த கிங்ஸ் காலேஜ் உயர்ந்த இடம் கொடுத்துக் கவுரவப்படுத்தியது. ஆனால் உடன் வேலை செய்யும் மௌரிஸ் அதைப் பொருட்படுத்தாமல் ரோஸலினைத் தன் அஸிஸ்டெண்ட் போல பயன்படுத்த அதற்கு ஒரு நிலையில் எதிர்ப்பு தெரிவித்தார். மௌரிஸ் மட்டுமல்ல அங்குள்ள கிட்டத்தட்ட அனைத்து ஆராய்ச்சியாளர்களாலும் பெண் என்ற ஒரே காரணத்திற்காக தனிமைப் படுத்தப்பட்டார். மதிய உணவு கூட அனைவரும் அமர்ந்து உண்ணுமிடத்தில் உண்ண அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மௌரிஸ்ஸால் சுத்தமாக ரோஸலினை சகித்துக் கொள்ள முடியாத நிலை வந்துவிட்டது .. ரோஸலின் அறைப்பக்கமே போவதில்லை.. ரோஸலினோ சுற்றி நடப்பதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தன் ஆய்வில் மூழ்கியிருந்தார்.

மே 1952 இல் மிக நுண்ணியமாக அவர் எடுத்த இரண்டு டி.என்.ஏ படங்கள் ட்ரை மற்றும் வெட் ஃபார்ம் மிக முக்கியமான மைல்கல்லாகின. யாரும் அது வரை அவ்வளவு தெளிவாக எடுத்ததில்லை.

எதுவும் சாதிக்காத வெறியிலிருந்த மௌரிஸ் .. ரோஸலினின் ஆராய்ச்சிக் குறிப்பு.. படங்களை அவர் இல்லாத போது நகலெடுக்க ஆரம்பித்தார்.

ஜனவரி 1953 இல் வாட்சன் திரும்பவும் ரோஸலினை சந்திக்க வந்தார்.. அவமானகரமான முந்தைய சந்திப்பிற்குப் பிறகு இவர் மீண்டும் வரக் காரணம்... லைனஸ் பாலிங் என்ற மற்றோரு விஞ்ஞானி டி.என்.ஏ வடிவமைப்பு பந்தையத்தில் வாட்சனுக்கு முன்பிருந்ததே... எப்படியும் இந்த முறை சரியான தகவலைப்பெற்று வென்று விடவேண்டும் அதற்கு ரோஸலினை விட்டால் கதியில்லை என வந்தார்.

அங்கே ரோஸலினை சந்திப்பதற்குள் மௌரிஸைப் பார்த்து வந்த காரணத்தைக்கூற... ரோஸலினிடனிருந்து திருடிய நகல்களைத் தாரைவார்த்தார். அந்தக் குறிப்புகளும் புகைப்படங்களும் அங்கேயே வெற்றிக் கோப்பையை வாட்சனுக்குக் காட்டின..

அறிவியல் ஆராய்ச்சியைப் பொறுத்தமட்டிலும் விஞ்ஞானிகள் தங்கள் படைப்புகளை பகிர்தல் அவசியம். அவ்வாறு பகிரும் போது கண்டுபிடிப்பாளர்களுக்குரிய அங்கீகாரம் வழங்க வழிவகுக்க வேண்டும் யாருடைய ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பையோ தன்னுடையது என உரிமை கொண்டாடக்கூடாது. இதுவே அடிப்படை விதி.

அதை மீறி வாட்சனும் , கிர்க்கும் ரோஸலினை அங்கீகரிக்காமல் அவரது படைப்பை மட்டும் கொண்டு இரண்டாம் மாதிரியைப் படைத்தனர். அதை ரோஸலினை வைத்தே சரிபார்க்க வைத்தனர்.
அந்த ஆய்வினடிப்படையில் வெளியான கட்டுரைகள் தான் முதலில் நான் சொன்னது.

கண்டுபிடிப்பின் காரணகர்த்தாவான ரோஸலினின் கட்டுரை ஏதோ வடிவமைப்பை சரிபார்க்க மட்டுமேபயன்படுத்தப்பட்டது போல் தோற்றத்தை ஏற்படுத்தி நோபல் பரிசைத் தட்டிச் சென்றனர் வாட்ஸனும் கிர்க்கும்.

ரோஸலினுக்கு கிடைத்தது "டார்க் லேடி" என்ற சக ஆணாதிக்கவாதிகளின் பட்டப்பெயர் மட்டுமே.

முலம்: http://www.historycooperative.org/journals/ht/36.1/rapoport.html

23 comments:

துளசி கோபால் said...

(-:

தருமி said...

it reads like a mystery novel..

தருமி said...

it reads like a mystery novel..

மணியன் said...

இத்தகைய நிகழ்வுகள் எல்லா ஆராய்ச்சிநிலையங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. விஞ்ஞானிகளும் மனிதர்கள்தானே, மனிதகுலத்தின் அத்தனை அவலங்களும் நோபல்பரிசு பெறுவதால் நீங்கிவிடுமா ?

Suka said...

வாங்க துளசி, பாரதி, சாம், மணியன் அவர்களே..

பாரதி..
.. அந்த தொலைகாட்சி நிகழ்ச்சியில் காட்டிய அனைத்தையும் இங்கே எழுத முடியவில்லை.. பல இழிசொற்களைத் தாண்டி ரோஸலினின் சீரிய உழைப்பு என்னை மிகவும் கவர்ந்தது..

மணியன் அவர்கள் கூறுவது போல் இன்றும் அலுவலகங்களில் இது போல் நடந்து கொண்டுதானிருக்கிறது என்பது ஒரு வருந்தத்தக்க உண்மை..

Unknown said...

அடப்பாவிங்களா..

அப்பாவி பொண்ணுகிட்டருந்து நோபல் பரிசை தட்டிபறிச்சவனுங்க எல்லாம் விஞ்ஞானிகளா?நோபல் பரிசுலயும் அரசியலா?கலிகாலம்பா

Suka said...

வாங்க செல்வன் ..

மௌரிஸ்.. வாட்சன் & கிர்க் படத்தையும் இணைத்துள்ளேன்..

அராய்ச்சிக் கூடங்களிலும் அரசியல் வந்தால் அறிவியல் அர்த்தமற்றதாகிவிடும்..

கலை said...

வாட்சன் கிரிக்கின் டி.என். ஏ டபிள் ஹேலிக்ஸ் படைப்புக்குப் பின்னால் இப்படி ஒரு துரோகக் கதை ஒளிந்திருக்கிறதா? பாவம் ரோஸலின். :(

சன்னாசி said...

லினஸ் பாலிங்கைப் பொறுத்தவரை - பாலிங், டி.என்.ஏவுக்கு மூன்று இழைகள் (strands) இருந்தன என்று அப்போது கருதினார் (DNA is a double stranded helix). ரோஸலிண்ட் ஃப்ராங்க்ளின் பற்றி சமீபத்தில் வந்த ஒரு நல்ல புத்தகம் இங்கே.

Suka said...

வாங்க கலை..

எனக்கும் அதிர்ச்சியாகத் தானிருந்தது.

ஆனால் நோபல் பரிசு என்ன..பின்னாளில் மக்களின் ஆதரவு அவருக்கு மிகுந்திருந்தது..அவருடைய பெயரிலேயெ ஒரு கல்லூரியும்..விருதுகளும் வழங்கப்பட்டன..

Suka said...

சன்னாசி .. வாங்க

லினஸ் பாலின் தகவலுக்கும் புத்தக இணைப்பிற்கும் மிக்க நன்றி..

சுகா

மு. சுந்தரமூர்த்தி said...

Suka,
Thanks for the Good article.

Though Rosalind Franklin had to work in higly male dominated environment the reason that she was not recognized by Nobel is not due to that. She has died before Watson-Crick-Wilkins trio were awarded Nobel. Had she lived, it would have been Watson-Crick-Franklin.

Another big dissenter was Erwin Chargaff, a chemist from Columbia University, whose work paved the way for what is called base-pairing of DNA. He never accepted the discovery of DNA structure as Watson and Crick's, until he died in 2002.

It is a well known fact that Watson and Crick did not have their own data but rather used the x-ray picture of Franlin and chemical data of Chargaff. But it was Crick and another gentleman William Chochran established mathematical foundation for helical structure without which it would have been to predict DNA structure.

மு. சுந்தரமூர்த்தி said...

//But it was Crick and another gentleman William Chochran established mathematical foundation for helical structure without which it would have been to predict DNA structure.
//

Should be:

But it was Crick and another gentleman William Chochran who established the mathematical foundation for helical structure without which it would have been hard to predict DNA structure.

Suka said...

தகவலுக்கு மிக்க நன்றி சுந்தரமூர்த்தி..

டி.என்.ஏ வரிவமைப்பில் வாட்சன் மற்றும் கிர்க் அவர்களின் பங்களிப்பும் இன்றியமையாததே.. ஆனால் ரோஸலினை அவர்கள் அங்கீகரிக்காமல் விட்டதே மிகத் தவறு.. உண்மையில் ரோஸலின் அதைக்கூடப் பொருட்படுத்தாமல் அவர்களுடன் பின்னாளில் நட்பாகவே பழகினாரென்பது அவர் பெருந்தன்மை தானே..

இதோ.. இந்த தளத்தின் கருத்து


Controversy About Using King's College London's Results

A more enduring controversy has been generated by Watson and Crick's use of Rosalind Franklin's crystallographic evidence of the structure of DNA, which was shown to them, without her knowledge, by her estranged colleague, Maurice Wilkins, and by Max Perutz. Her evidence demonstrated that the two sugar-phosphate backbones lay on the outside of the molecule, confirmed Watson and Crick's conjecture that the backbones formed a double helix, and revealed to Crick that they were antiparallel. Franklin's superb experimental work thus proved crucial in Watson and Crick's discovery. Yet, they gave her scant acknowledgment. Even so, Franklin bore no resentment towards them. She had presented her findings at a public seminar to which she had invited the two. She soon left DNA research to study tobacco mosaic virus. She became friends with both Watson and Crick, and spent her last period of remission from ovarian cancer in Crick's house (Franklin died in 1958). Crick believed that he and Watson used her evidence appropriately, while admitting that their patronizing attitude towards her, so apparent in The Double Helix, reflected contemporary conventions of gender in science.

Suka said...

முந்தைய கருத்தின் மூலம் :
http://en.wikipedia.org/wiki/James_D._Watson

வவ்வால் said...

இதேக் கட்டுரை வேறு எதிலோப் படித்தேன் , எதில் என நினைவு இல்லை, மீண்டும் படிக்கும் போதும் அதே உணர்வு தான், முதுகில் குத்தும் வேலை என்ற வேதனை.

இது போன்று காந்திக்கும் 4 முறை நோபல் அமைதிப்பரிசு தருவது கடைசி தருணத்தில் நிறுத்தப்பட்டது, இதனை நோபல் கமிட்டியின் முன்னாள் தலைவரே ஒப்புக்கொண்டார் சமீபத்தில். அவர்கள் பெரும் பிழை செய்து விட்டதாக.

நோபல் பரிசினை தீர்மானிப்பது யூதர்களைக் கொண்ட ஒரு ரகசிய குழுவே, வெளிப்படையாக ஒரு குழு இயங்கினாலும் மேல் மட்ட குழு என ஒன்று உள்ளது அது யூதர்களை மட்டுமே கொண்டது அவர்கள், அமெரிக்கா, இங்கிலாண்ட் போன்ற நாடுகளின் அரசியல் ஆதரவிற்காக சில முடிவுகளை எடுப்பார்கள். நோபல் பரிசினை வெல்வது பெரும்பாலும் யூத விஞ்ஞானிகளாக இருப்பார்கள் அல்லது ,அமெரிக்கா, இங்கிலாந்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் மற்றவர்கள் சிறு அளவிலே பெற்று இருப்பார்கள்.

நோபல், ஆஸ்கர் முதல் எல்லாம் அரசியல் தான்,

Anonymous said...

Hi guys, The most unfortunate scientist whom must have shared this nobel was Prof G.N.Ramachandren(GNR).He was one who provided all necessary theoritiacal foundation towards DNA structure. People from bio physics,chemistry know his important contribution known as GNR plot,GNR angle in explaining complex Structure which was evolved from highly abstract mathematics.

After Bose,GNR was also missed the prize just because of their asian identity.

Suka said...

நன்றி வவ்வால், உங்கள் மறுமொழியை கவனிக்கவேயில்லை. நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது .. பெரும்பாலான நோபல் பரிசுகள் அமரிக்க ஆய்வு மையங்களின் விஞ்ஞானிகளுக்கே அளிக்கப்பட்டுள்ளன.

உண்மையில் தகுதியான விஞ்ஞானிகளுக்கு அளிக்கப்படும்போதுதான் அந்த விருதுகளுக்கு பெருமை !

வாழ்த்துக்கள்
சுகா

Suka said...

வெங்கட்,

தகவலுக்கு மிக்க நன்றி.

http://www.vigyanprasar.gov.in/scientists/GNRamachandran%20.htm

இந்திய அரசின் தளமே ""Ramachandran was clearly a "Nobel Class" scientist, to borrow a phrase from Eugene Garfield. But his active career was all too brief by modem day standards. For the last twenty years Ramachandran was not really visible internationally, reminding us of one of the ironies of modern science;

achievement alone is not enough, packaging and marketing play an important role.
" என்று அங்கலாய்த்திருக்கிறது.


http://en.wikipedia.org/wiki/Gopalasamudram_Narayana_Iyer_Ramachandran

நன்றி
வாழ்த்துக்கள்

முகவை மைந்தன் said...

என்னங்க ஆளாளுக்கு போட்டு தாக்கிட்டீங்க. அந்தம்மா கடும் உழைப்பாளி, அவருடைய ஆய்வு DNA அடிப்படையை வெளிக்கொணர்ந்தது எல்லாம் சரிதான். ஆனா நோபல் பரிசு வழங்கப்பட்டப்ப (1962) அவங்க உயிரோட இல்லை(1958). இறந்தவங்களை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க முடியாது. மேலும் பரிசு நியூக்ளிக் ஆசிட் குறித்த ஆராய்ச்சிக்கும் சேர்த்து வழங்கப் பட்டுள்ளது.

மற்ற குற்றச்சாட்டுகளுக்குள், அதைப்பற்றித் தெரியாததால், போக விரும்ப வில்லை.

கட்டுரை படித்து அதிர்ந்து, விக்கியானால் தெளிவானேன்.
http://en.wikipedia.org/wiki/Rosalind_Franklin.

மு மாலிக் said...

இது ஒரு நல்ல பதிவு. நோபல் பரிசுகள் புனிதமானவைகள் அல்ல. குவாண்டம் ஃபிசிக்ஸ் (Quantum Physics), புள்ளியீட்டு இயற்பியல் (Statistical Physics) போன்ற ஜல்லிகளுக்கு கொடுக்கப் பட்ட நோபல் பரிசுகள் பெரும்பாலும் அரசியல், மத, இன நோக்குடையவை.

சில சமயங்களில் இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகளும் இது போன்ற கரையான்களால் பாதிக்கப்படும்.

"கம்யூனிஸ்டுகள்" என்பதற்காக பரிசினை இழந்தவர்களும் உள்ளனர்.
"பொறியியளார்கள்" என்பதற்காக பரிசுகளை இழந்தவர்களும் உள்ளனர்.
ஃபெயின் மேன் போன்ற அறிவுத் திருடர்களின் விசுவாசிகளால் கூட பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம். ஜார்ஜ் சுதர்ஷன் பலமுறை பரிந்துரைக்கப்பட்டும் பரிசினை இழந்ததற்கு இது காரணமாக இருக்கலாம். ( http://www.flonnet.com/fl2224/stories/20051202002210000.htm )

also: http://www.flonnet.com/fl2224/stories/20051202002610200.htm



மேலும் அமெரிக்கர்கள் என்பதற்காக பரிசுகளைப் பெற்றவர்களும், ராயல் சொசைட்டிக்கு விசிட் அடித்த தெரிந்தவர் என்பதற்காகப் பரிசினைப் பெற்றவர்களும் உள்ளனர்.

பரிந்துரை மூலம் பரிசுக்கான தகுதியுடையவர்களைக் கருத்தில் கொள்ளும் முறையை கைவிட வேண்டும். பரிசுகளைத் தீர்மானிப்பவர்கள் யார் யார் என அறிவிக்க வேண்டும். இதன் மூலம் அவர்களின் பின்னணியினை ஆராய முடியும். பரிசு பெறுபவர்களைத் தீர்மானிக்கும் முறையில் ஒவ்வொரு படிகளையும் சுவீடன் வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு படியிலும் யார் யாரை வெளியில் தள்ளுகிறதோ அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.

Suka said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மாலிக்.

சுகா

Suka said...

முகவை மைந்தன்,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தகுதியானவர்களை அடைவதன் மூலம் விருதுகள் அங்கீகாரமடைகின்றன என்பது என் எண்ணம் :)

இந்தக் கட்டுரை ரோஸலினுக்கு பரிசு கிடைக்கவில்லையே என்பதை விட அறிவியலில் கருத்துப் பரிமாற்றத்திற்கான மரபுகள் (ethics) பின்பற்றப்படவில்லையே என்ற ஆதங்கம் தான்.


விக்கியில் படிப்பதை வேறு எங்காவது சரி பார்ப்பதும் , அதன் talk மற்றும் history க்கு சென்று ஆய்வதும் கூட முக்கியம் என்பது என் கருத்து :) .

அவர் உயிருடன் இருந்தாலும் அவருக்கு கிடைத்திருக்குமா என்றும் வாதம் இருக்கிறது ..அதே இடத்திலேயே..
http://en.wikipedia.org/wiki/Talk:Rosalind_Franklin

நன்றி, வாழ்த்துக்கள்
சுகா