நிலாவே வா...
அன்பென்ற மழையிலே..
பூவே பூச்சூடவா ..
இந்தப் பாடல்கள் என் தங்கை ஆர்த்தி பாடியது.
நான் பாடி கேட்டுத் தான் ஆகனும் என அடம்பிடித்தால் யார் காப்பாற்றமுடியும் உங்களை.
இதோ இங்கே கிளிக்குங்கள். அன்று கொஞ்சம் வாய்ஸ் சரியில்லை ..அனுசரித்துக் கொள்ளுங்கள்.
சுகா
15 comments:
Super thi idea and very well
i like your voice keep it up. good luck
Koguan, Tamil eelam
kocca_6@yahoo.co.in
நன்றி
:)
பிண்ணணி -> பின்னணி
உங்கள் தங்கைக்கு நல்ல குரல்வளம்.
உங்கள் குரலும் பரவாயில்லை.;-)
ஆனால் உங்கள் தங்கையைப் பின்னணியிசையில்லாமல் பாடவிட்டு, நீங்கள் மட்டும் இசையோடு பாடியிருக்கிறீர்கள்.
நல்ல யுக்தி, ரெக்கார்டிங் நல்லாயிருக்கு.
உங்கள் குரல் ஏசுதாஸ் குரல்மாதிரியிருக்கு அதனால இனி பாட வேண்டாம். (நல்ல நக்கல்).
நன்றி .. வசந்தன்
'பின்னணி' கொஞ்சம் பிசகிவிட்டது..எங்கள் தமிழாசிரியர் பார்த்தான் 5 முறை திருத்தம் எழுதச்சொல்லுவார் :)
என் குரல் அச்சு அசலாக.. யேசுதாஸ் அவர்களைப் போன்றே இருக்கிறதல்லவா .. ;) நன்றாக் இருக்க வேண்டுமென கொஞ்சம் பின்னணி இசையைக் கலந்து வைத்தேன் ;)
நன்றி சிரில்..
:-))
சுகா
உங்கள் குரல் என் குரலை விட நன்றாக இருக்கிறது சுகா. :-) நானும் கல்லூரியில் படிக்கும் போது இந்தப் பாடலைப் பாடி எல்லாரையும் கொல்லுவேன். என் நண்பர்கள் என்றால் இந்தப் பாடலை நான் பாடி கேட்டே ஆக வேண்டும். :-)
உங்கள் தங்கையின் குரலை ஏற்கனவே உங்களின் பழைய பதிவில் கேட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். அருமையான பாடல்கள் மூன்றும். நன்றாகப் பாடியிருக்கிறார்.
நன்றி குமரன்.. :)
யேசுதாஸ் என்னை ஸ்யூ பண்ணாமல் இருந்தால் சரி :)
இன்று என் நண்பன் மூலமாக ஒரு கொசுறு தகவல் கேள்விப்பட்டேன் ..
பொம்மைப் படத்தில் "நீயும் பொம்மை.. நானும் பொம்மை" பாடல் தான் யேசுதாஸின் முதல் பாடலாமே .. உண்மையா..
நான் கொஞ்சம் முயன்றால் அந்தப் பாடலை வேண்டுமானால் ஒரிஜினல் குரலில் பாடலாம் :)
சுகா! உங்கள் தங்கையின் 'அன்பென்ற மழையிலே' ஏற்கனவே கேட்டு இருக்கேன். மற்ற இரண்டு பாடல்களும் அருமை. நல்ல ஊக்கம் கொடுத்தால் நல்ல பாடகியாக வரலாம். குரல் ரொம்ப இனிமையா இருக்கு.
ஏங்க! யேசுதாஸ் பாடிய பாடலை போட்டு நீங்க பாடுனது என்று சொல்றீங்க :-))
நன்றி சிவா..ஒரு பாடல் புதிதாக சேர்த்தேன்..பதிவிட்டவைகளையும் இதிலே இணைக்கலாமென இணைத்தேன்..
என்னால் முடிந்த அளவுக்கு ஊக்கம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன் ..
நான் பாடி ஏன் உங்களை கலவரப்படுத்தனும்ன்னு தான் இப்பிடி பண்ணினேன் :)
ஆமாம் சுகா. நீயும் பொம்மை நானும் பொம்மை பாட்டு தான் ஜேசுதாஸின் முதல் தமிழ்த் திரைப்பட பாடல். ஒரு பேட்டியில் இவ்வாறு அவர் சொல்லியிருந்தார் 'அந்தப் பாடல் பாடுவதற்கு ரொம்ப கஷ்டம். நீ...யும்... பொம்மை.... நா...னும்... பொம்மை... என்று மெதுவாகப் பாட வேண்டும். கண்ணில்லாத குருட்டுப் பிச்சைக்காரம் பாடுவது போல் படத்தில் வரும். அதோடு என் தமிழ் திரைப்பட சான்ஸ் முடிந்தது என்று நினைத்தேன்'.
முயற்சி செய்து பாருங்கள். பிச்சைக்காரன் குரல் உங்களுக்குப் பொருத்தமாக இருக்கலாம். :-)
குமரன் ..
:) எப்படியோ யேசுதாஸின் குரல் கிடைக்குமென்றால்..
"பிச்சை புகினும் கிடைத்தால் நன்றே" ;)
சுகா
உங்கள் தங்கைக்கு நல்ல குரல்வளம்.. அருமையாக பாடுகிறார்.. (ஆனால் அன்பென்ற மழையிலே பாடலில் கொஞ்சம் எக்கோ எஃபக்டை குறைத்திருக்கலாம்)
என் பாடலை "சுட்டு" உங்கள் பாடல் என்று போட்டிருக்கிறீர்களே (என் பாடல் உங்களுக்கு எப்படி கிடைத்தது?)
நன்றி முகமூடி...
அடுத்த முறை கொஞ்சம் நல்லா எடிட் செய்ய ட்ரை பண்ணறேன்..
சரி.. நமக்குள்ள எதுக்கு இதெல்லாம் .. ஒரு அக்ரிமெண்டுக்கு வருவோம்.. எனக்கு தெரிஞ்சு S.P.B கொஞ்சம் பெட்டரா பாடினா உங்க குரல் மாதிரியே இருக்கும்ன்னு நினைக்கிறேன் ..சரிதானே :)
சுகா
ஆர்த்தி குரல் நல்லாருக்கு. எதிரொலியையும் தாமதத்தையும் குறைச்சிருந்தா இன்னும் நல்லா இருக்கும்.
உங்கக் குரலையும் கேட்டேன். ஏப்ரல் ஒண்ணாந்தேதிக்கு இன்னும் ரெண்டு நாளு இருக்கே. அதுக்குள்ள இப்படிக் கொள்ளப் பேரு கிளம்பிட்டீங்களே! :) :)
Post a Comment