Tuesday, December 20, 2005

'கடவுள்கள் இல்லையடி பாப்பா'

'சாதிகள் இல்லையடி பாப்பா 'என பாரதி பாடியபோது எனக்கு இரண்டு விதமாக எண்ணத் தோன்றியது.

பாப்பாவைப் பார்த்து பாரதி பாடிய காரணம் என்ன? இந்த 'வளர்ந்த' மனிதர்க்கு உரைத்தலால் ஒரு பயனுமில்லை; வளரும் சமுதாயத்திற்காவது எதாவது புரிகிறதா என முயற்சி செய்திருப்பாரோ... அல்லது சாதிகள் விசயத்தில் நாமனைவருமே 'பாப்பா' போலவே பக்குவப்பட்டிருப்பதை எண்ணிப் பாடியிருப்பாரோ எனத் தோன்றியது.

இப்போது இன்னொன்றும் எண்ணத்தோன்றுகிறது. இன்னும் சிலகாலம் பாரதி இருந்து தமிழ் மணத்தில் எழுதியிருந்தால்

சாதிகள் இல்லையடி பாப்பா!- குலத் தாழ்ச்சி உயர்ச்சிசொல்லல் பாவம் நீதி, உயர்ந்தமதி கல்வி - அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்.உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்!- தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்வயிர முடையநெஞ்சு வேணும்;- இது வாழும் முறைமையடி பாப்பா.

என்பதற்குப் பதிலாக இப்படி எழுதியிருப்பாரோ..

கடவுள்கள் இல்லையடி பாப்பா!- இறைத்
தாழ்ச்சி உயர்ச்சிசொல்லல் பாவம்
நீதி, உயர்ந்தமதி கல்வி - பண்பு

நிறைய உடையவர்கள் மேலோர்.
உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்!- மதம்

வெறும் அடையாளந்தானறிதல் வேணும்வயிர
முடையநெஞ்சு வேணும்;-
இது வாழும் முறைமையடி பாப்பா.

11 comments:

பூங்குழலி said...

அன்பு சுகா,

கடவுள் என்பது சரியான சொல்லாடல் இல்லையோ என நினைக்கிறேன்.

கடவுள் என்பது நம்மை நாமே உள் தோண்டி கண்டுபிடிப்பது.

சாமி, பூதம், தெய்வம் என்பது மற்ற ஆசாமிகள் கன்டுபிடித்து நம்மை மூளைசலவை செய்தது.


நன்றி,
பூங்குழலி

G.Ragavan said...

சுகா, நல்லா கவிதை எழுதீருக்கீங்க. ஆனா பாருங்க...இதயும் பாரதி ஏற்கனவே சொல்லீட்டாரு.

ஆத்திச்சூடி இளம்பிறையணிந்து மோனத்திருக்கும் முழுவெண் மேனியன் - என்ற பாடலைப் படியுங்கள் விளங்கும்.

Suka said...

பூங்குழலி,

உங்களுடன் ஏற்ற கருத்தே என்னுடையது. மேலும்..

கடவுள் முழுமையாக தேவையற்ற படைப்பு என்பது என்றும் கருதிவிட முடியாது. கூடி வாழத்தேவையான சிலவிதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டுமென்பதற்காக ஒரு காப்பாளனின் தேவை இருப்பதை உணர்ந்து உண்டாக்கப்பட்ட படைப்பு என்றே கருதுகிறேன்.

மக்களிடம் ஏதேனும் விதிமுறைகளைச் சொல்லும் போது , உதாரணத்திற்கு 'பொய் பேசினால் சாமி கண்ணைக்குத்தும்' என்று சொல்லுவது காலத்தை மிச்சப்படுத்டுவதாகவும் இருக்கும். முழு காரணங்களை கூறி விளக்க வேண்டிய தேவை இருக்காது. குறிப்பாக குழந்தைகளுக்கு புரியாது.

நாம் தற்போது சில சமயம் காரணங்களை மறந்து காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சில சமயம் காரணங்களையும் சிதைத்துக் கொண்டிருப்பதாக உணருகிறேன்.


ராகவன்,

பாரதிகின் பாடல்களின் நான் இன்னும் ஒரு பாப்பாவே .. நிறைய படிக்கவேண்டியுள்ளது.. சுட்டிக் காட்டியதற்கு நன்றி.


உங்கள் வருகைக்கு நன்றி
சுகா

Suka said...

//
நாம் தற்போது சில சமயம் காரணங்களை மறந்து காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சில சமயம் காரணங்களையும் சிதைத்துக் கொண்டிருப்பதாக உணருகிறேன்.
//

என நான் குறிப்பிட்டது இது போன்றவைகள் குறித்தே
http://sukas.blogspot.com/2005/12/blog-post_16.html

http://sukas.blogspot.com/2005/12/blog-post_08.html

நன்றி

Anonymous said...

ஒழுங்கு மரியாதையாக பிராமனர்களை வாழ்த்தி எழுதவும். இல்லை என்றால் தமிழ்மணத்தில் இருந்து தூக்கிவிடுவேன். தலித்தாக பிறந்த என்னை ஐயங்கார் ஜாதியில் சேர்த்து அழகு பார்த்தவர் டோண்டு. அதனால் நான் வாழ்த்துகிறேன். நீங்களும் பார்ப்பன ஜாதியை வாழ்த்தி எழுதவும்.

Suka said...

விவாதிக்க நிறைய விஷயங்கள் இருக்க, தனி மனித தாக்குதல்கள் வேண்டாமே..

வருகைக்கு நன்றி.
சுகா

Suka said...

முந்தைய பதிவு காசி அவர்களுடையதாக இருக்காது என்றே நம்புகிறேன்.

சுகா

Premalatha said...

I have featured you in Desipundit

Suka said...

Thanks Premalatha.

Karthi

jeevagv said...

சுகா,
நானாக இருந்தால் இப்படி நினைக்க மாட்டேன்.
ஏனெனில் நமக்கு 'இல்லை, தேவையில்லை, பயனில்லை' என்று நினைப்பதெல்லாம் எல்லோருக்கும் அப்படியே என்று நினைக்க மாட்டேன்.
ஒன்னொருவருக்கும் ஒரு வழி.
கடவுள் இல்லையென சொல்ல - நான் யார்?
என்ன நானே அறியாதபோது?

Suka said...

ஜீவா,

வருகைக்கு நன்றி.

உங்களுடன் முழுமையாக ஒத்துப் போகிறேன். என்னுடைய கருத்தும் அதுவேதான்.

நான் பொதுவாக இது சரி இது தவறு என கூற முற்படுவதில்லை. அவ்வாறு கூறினால் அது என் கோணமாக மட்டுமே இருக்குமேயன்றி நிதர்சனமாகாது.

அது போல் எந்த விஷயத்திலும் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுதல் தேவையற்றது என்பதே என் தாழ்மையான கருத்து. ஆலோசனைகளி வேறு.

நான் இங்கே முயற்சிப்பது கடவுளைப் பற்றிய என் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டு உங்களைப் போல மற்றவர் பகிர்ந்து கொள்ளும் கருத்துகள் வாயிலாக கற்றுக் கொள்வது தான். தேவைப்பட்டால் என் நிலையை மாற்றிக் கொள்ளவும் தயங்க மாட்டேன்.

கருத்துக்கு நன்றி ஜீவா. இந்த பதிவில் அவ்வளவாக எழுத முடியாததால் தனியாக ஒரு தொடர் பதிவில் தெளிவாக எழுதலாம் என முயன்றுகொண்டிருக்கிறேன்.

சுகா