இவை அனைத்துமே நம் கண்களில் உள்ள குருட்டுத் தானத்தைப் (Blind Spot) பற்றியும், இந்தக் குறைபாட்டை நம் மூளை எப்படி சாமர்த்தியமாக சரிசெய்ய முயற்சிக்கிறது என்பதைப் பற்றியுமே. இதைச் செய்து பார்ப்பதும் மிக எளிதே.
சோதனைகளின் முடிவில் உள்ள இணைப்பின் (Applet) வழியாக உங்கள் கண்ணின் குருட்டுத்தானத்தைத் துல்லியமாக அறிந்து கொள்ளமுடியும்.
சோதனை 1 :
இடது கண்ணை மட்டும் மூடியபடி வலதுகண்ணால் இடதுபுறம் உள்ள (+) குறியைப் பார்த்தபடி திரையை நோக்கி நகர்க. திரைக்கும் கண்ணுக்கும் அரை அடி இருக்கும் போது (0) கருப்புப்புள்ளி மாயமாக மறைவதைக் கவனியுங்கள். இதில் மூளைக்குப் பெரிதாக வேளை ஏதுமில்லை. ஆனால் அடுத்ததில்...
சோதனை 2 : (மூளையின் சமாளிப்பு)
அதே செய்முறை தான். படம் தான் வேறு. இந்த முறையும் குருட்டுத்தானத்தில் புள்ளி மறைகிறது. ஆனால்...
குருட்டுத் தானத்தில் புள்ளி மறைந்த இடம் மஞ்சள் நிறத்தில் நிறைந்திருப்பதைக் கவனிக்க. சுற்றியும் மஞ்சள் இருப்பதால் அதுவும் மஞ்சளாகத்தான் இருக்க வேண்டும் என மூளை யூகம் செய்து தவறான தகவலைச் சேகரிப்பதை அறிக. நாமும் இன்ன பிற விஷயங்களிள் இவ்வாறாகவே யூகித்து முடிவெடுக்கிறோம் அல்லவா !
சோதனை 3 ( நிறம் மட்டும் தானா..)
செய்முறையில் மாற்றமில்லை. கீழே உள்ள படத்தில் கவனிக்க.
கோடு போட்டால் ரோடு போடுவதைப் போல தெரியாத இடத்தில் கோடு தான் இருக்கும் என மூளை முடிவு செய்வதைப் பாருங்கள்.
சோதனை 4 : ( கடைசி சமாளிப்பு)
மொசைக் தரையில் ஏதேனும் தவறவிட்டு விட்டு நெடுநேரம் தேடியவர்களுக்கு சமர்ப்பணம் :)
உங்கள் கண்ணை சோதித்துக் கொள்ள இங்கே சொடுக்கவும். இதற்கு Java தேவை.
நீங்கள் இந்த பயிற்சியை செய்து கொண்டிருக்கும் போது வேறு யாராவது ஒரு மாதிரியாக பார்க்கப் போகிறார்கள். கவனமாக இருங்கள் :)
சுகா
4 comments:
:) amazing.
நல்ல டெஸ்ட் வச்சீங்க போங்க! கண்ணு உறுத்துதது
சுகா
கண்ணு மியாமியா ங்குது
அடடா.. கணினியை விடுத்து ஒரு நடை போய்விட்டு வாருங்கள். சரியாகிவிடும்.
மதுமிதா உங்களுக்கு பூனைக்கண்களா ? 'மியா..மியா' என்கிறதே.. (விளையாட்டிற்கே :) )
உங்கள் வருகைக்கு நன்றி
Post a Comment