சென்ற வலையேற்றத்திற்கு காரசாரமாக வந்த பதில்களுக்கு இணையாக அந்த பூனைக்கதையையும் கேட்டு சில நண்பர்கள் தனிமடல் அனுப்பி இருந்தனர். அவர்களையாவது திருப்திப் படுத்தலாமே :)
பல வருடங்களுக்கு முன் ஒரு ஆச்சாரமான அந்தணர் வாழ்ந்துவந்தார். அவர் வருடா வருடம் மார்கழி மாதம் பெரிய அளவில் பலரையும் அழைத்து பூஜை செய்வது வழக்கம்.
அவர்கள் வளர்த்தும் வீட்டு பூனை ஒன்று எப்போதும் ஆசாரத்தில் குறுக்கே மறுக்கே திரிந்து கொண்டே இருக்கும். பூஜை நாட்களில் பூஜைக்கு இடைஞ்சலாக இருக்ககூடாது என்பதற்காக பூஜை ஆரம்பிக்கும் போது முதல் வேலையாக தன் பையனை அழைத்து அந்த பூனையை தூணில் கட்ட சொல்லுவார். பையனுக்கு அது எதற்காக என புரியவில்லை , இருந்தாலும் தந்தை சொன்னால் அதில் அர்த்தமிருக்கும் என சொன்னபடி செய்தான்.
வருடங்கள் ஒடின. பெரியவர் காலமாகிவிட்டார். அந்த பையன் இன்றும் தந்தை வழியே மார்கழி பூஜை நடத்துகிறான். பூனையும் தூணில் உரசியபடி யோசித்துக் கொண்டிருக்கிறது "நான் பாட்டுக்கு நாலாவது தெருவில் திரிந்து கொண்டிருந்தேன், வழக்கம் போல இந்த வருடமும் பையனை அனுப்பி என்னை புடித்துக் கொண்டுவந்து கட்டிவிட்டார்கள்.. என்னை இவர்கள் வளர்த்துவதும் இல்லை..ஏதோ அலர்ஜியாம்.. நானும் இவர்கள் வீட்டுப் பக்கம் தலைவைத்தும் படுப்பதில்லை.. ஏன் எனக்கு மட்டும் இந்த நாளில் இப்படி நடக்கிறது' என. பூனைக்குப் பக்கத்தில் அப்பாவை பயபக்தியோடு பார்த்துக்கொண்டு எதையும் யோசிக்காமல் சிறுவன் நிற்கிறான்.
3 comments:
ஏன் என்று கேள்வி கேட்காமல் வாழ்கையே இல்லை.... கவிஞரின் வரிகள் நினைவிற்கு வருகின்றன.
-தேவ்
http://sethukal.blogspot.com
கேள்விகள் கேட்பதால் பதில் கிடைக்குமா என்பது ஒருபுறம் இருக்க கேள்விகள் கேட்க என்ன தேவை, ஊரோடு ஒத்துவாழ்வதல்லவா அவசியம். ஊரில் யாரும் கேட்காதபோது எனக்கென்ன தேவை, நானும் சொல்வதை செய்துவிட்டுப் போகிறேன் என்ற மனப்பாங்கிலும் வாழ்கிறோமே !
மூடநம்பிக்கை மக்களிடம் எப்படி உருவாகிறது என்பதை அழகாக காட்டுகிறது. சிந்திக்க வேண்டிய (பூனைக்) கதை.
Post a Comment