Friday, December 30, 2005

தமிழ் நடிகர்களின் சாஃப்ட்வேர் கம்பெனி -1

சீரியஸாவே எழுதறீங்களே என நண்பர்கள் சிலர் அங்கலாய்க்க.. புத்தாண்டில் உங்களைச் சிரிக்க வைக்க ஏதோ என்னாலான முயற்சி..

2010-இல் சினிமா துறை நொடித்துப் போனதால் தமிழ் நடிகர்கள் சிலர் தமிழ்நாட்டின் விலைவாசியைத் தாங்கமுடியாமல் இலவசமாகக் கிடைக்கும் அமரிக்க விசாக்களை வாங்கிக் கொண்டு கலிஃபோர்னியா கடலோரமாக ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி ஆரம்பிக்கின்றனர்.

முதல் பிராஜக்டாக அவர்களுக்கு நாசாவின் ஏவுகணை சம்பந்தமான ஏதோ ஒரு ப்ராஜெக்ட் தான் கிடக்கிறது. லோ பட்ஜெட் என்பதால் சீஈஓ ஏவிம் சரவணன் சிறிது தயங்கினாலும் வேறு யாரும் நம்மை நம்பிப் பிராஜக்ட் தரப்போவதில்லை என்ற எதார்த்ததை உணர்ந்து ஓகே சொல்கிறார்.

வைஸ் பிரசிடண்ட் சிவாஜியைக் கூப்பிட ப்யூன் லூஸ் மோகனை அனுப்புகிறார். லூஸ் மோகன் தனக்கே உரிய பாணியில் கூப்பிட டென்ஸனாகி நிமிர்கிறார். விஷயத்தை கேட்டு யாஹூவில் ச்சேட் செய்து கொண்டிருந்த விண்டோவை மூடிவிட்டு, தங்கப்பதக்கம் ஸ்டைலில் பீடு நடை போட்டு சீஈஓ ரூமுக்குள் நுழைகிறார் வீபீ ஸௌத்ரி.

ஏவிஎம்சரவணன் " வாங்க மிஸ்டர் சௌத்ரி, ஒரு நல்ல விஷயம். நமக்கும் கூட ஒரு பிராஜக்ட் கிடைச்சிருக்கு.. எல்லாம் நீங்க ஜாயின் பண்ணின நேரம் தான்..'

சிவாஜி " தேங்க்யூ சார்.."

சரவணன் " ஒரு கெட்ட விஷயம் கூட இருக்கு ...எப்பிடி சொல்லறதுன்னு தான் தெரியலை"

சிவாஜி " பிளீஸ் டெல் மீ சார்.." என்று சீரியஸ் ஆகிறார்.

"விஷயம் என்னன்னா இந்த பிராஜக்ட நீங்க தான் கைட் பண்ணனும்.. வேற வழியேயில்லை.. எத்தனை மாசம் தான் யாஹுவை ஸ்டடி பண்ணறென்னே சம்பளம் வாங்குவீங்க.. எல்லாரும் பென்ச்லதான் இருப்பாங்க..ஆனா நீங்க கிங் ஸைஸ் பெட்ல யில்ல இருந்துட்டு இருக்கீங்க.."

"ஹ..." டக் என நிலைகுலைந்து விழப் போய் சரவணன் வந்து பிடிப்பதற்குள் பேலன்ஸ் செய்து ஸ்டெடியாகிறார். அதிர்ச்சியில் உறைந்துபோய் எதுவும் பேசாமல் அபௌட்டனின் திரும்பி தலையை நிமிர்த்தி பீடு நடை போட்டு வெளியேறி தன் அறைக்கு செல்கிறார்.

அவர் ஸ்ட்ரேடஜி ரெடி பண்ணுவதற்குள் நாம் கம்பெனியை ஒரு வலம் வருவோம்.

ஆபிஸில் நுழைந்தவுடன் முதல் தரிசனம், ரிஷப்ஷனில் 'கோவை சரளா' ... கொஞ்சம் அதிகமாகவே லிப்ஸ்டிக் ஜிகினா போட்டுக்கொண்டு பெர்க்ளி யுனிவர்சிட்டிக்கு கேம்பஸ் இண்டர்வியுக்கு வரச்சொல்லி சில ஸ்டூடண்ட்ஸ் கெஞ்சியதை கேட்டுக்கொண்டே அவர்கள் கொடுத்த ப்ரோட்சரை வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

நம்மைப் பார்த்ததும் " அட .. வாங்க தம்பி .. " என வரவேற்று "ஒரு நிமிசம் கூட குமுதம் விகடன் படிக்க விட மாட்டீங்குறாங்க ..இந்த பசங்க... என்னை மெட்ராஸ்ல மேக்ரோஹார்டுல கூப்பிட்டாக... கோயமுத்தூர்ல கோவிந்தாடெக்ல கூப்பிட்டாக..என் கெரகம் இங்க வந்து வேலை செய்ய வேண்டியிருக்கு.." என புலம்ப ஆரம்பிக்க..

அவரிடம் இருந்து தப்பித்து உள்ளே சென்று முதல் க்யூபில் எட்டிப்பார்த்தால் "ப்ப்ப்ர்ர்ர்ர்ர்...... என்ன தம்பி சொல்லீட்டு வரக்கூடாதா.. ஏடாகூடமாகிடப் போகுது..' என சௌண்டு விட்டார் அக்கௌண்டெண்ட் வெண்ணிற ஆடை மூர்த்தி.

சரியென அடுத்த க்யூபிற்கு செல்வதற்குள், ஒரு கையில் சாட்டைவாருடன் மறு கையில் பால் கேன் சகிதம் 'வணக்கம்னே..' என்ற படி ராமராஜன் கடந்து சென்றார். இவர்தாம் இங்கே கிராபிக்ஸ் ஸ்பெஸலிஸ்ட்..

அடுத்தது ஒரு இரட்டை க்யூப்.... உள்ளே எட்டிப் பார்த்தால், எதற்கோ செந்திலை எட்டி உதைப்பதற்காக காலை ஓங்கிக் கொண்டிருந்தார் கவுண்ட்ஸ். டெஸ்ட் அண்ட் டெவளப்மெண்ட் என்ஜினியர்களாம்.

நெட்வொர்க் அட்மினிஸ்ட்ரேட்ரர் வடிவேலு கத்திக் கொண்டிருந்தது லேப்-ஐயும் தாண்டி கேட்டதால் உள்ளே எட்டிப்பார்த்தால்... " ஊஊஊ... ஏண்டா உயிர வாங்குறீங்க.... அமைதியா வேலையப்பாருங்கடா அப்பிரசண்ட்டுகளா.." என யாரையோ விரட்டிக் கொண்டிருந்தார்.

இதற்கிடையே சிவாஜி ஸ்டேட்டஸ் மீட்டிங்க்கு அழைப்பு விடுக்க அனைவரும் கான்ஃபரன்ஸ் ஹாலில் ஆஜர்.

சிவாஜி பேச ஆரம்பிப்பதற்குள் கேப்டன் விஜயகாந்த் எழுந்து " இங்கே கூடியுள்ள லட்சோப லட்சம் தமிழ் நெஞ்சங்களே.." என ஆரம்பிக்க.. " மிஸ்டர் விஜயகாந்த்.. பழைய நியாபகமா.. இது நம்ம பிராஜக்ட் மீட்டிங்" என கடித்தார் சிவாஜி. அசடு வளிந்து கொண்டே அமைதியானார் டீம் லீடரான கேப்டன்.

"ராமராஜன் .. பிரஸண்டேஸனை ப்ரொஜக்ட் பண்ணுங்க" என்றார் சிவாஜி.

"ஆத்தா மகமாயி.." என்ற படி ஆன் செய்ய .. கண்ணைக் கூசும் மஞ்சள் வெளிச்சம்.. அனைவருக்கும் கண்குருடாகிவிட்ட உணர்வு.. கொஞ்ச நேரத்தில் கண்ணைக் கசக்கிக் கொண்டு ஸ்கிரீனைப் பார்த்தால்..வெளீர் மஞ்சள் பேக்ரௌண்டில் சிவப்பு எழுத்துகள் மின்னின..

"அய்யோ... என்ன இது ராஜன்.. இப்பிடி ஒரு கலர்ல.." என சிவாஜி கடுப்படிக்க..

"மங்களகரமா இருக்கட்டுமேன்னுதான்........." என இழுத்தார்.

" ஆமா.. அப்பிடியே தேங்கா பழத்தையும் கொண்டு வந்துடுங்கய்யா.. அவனவனுக்கு சம்பளத்தையே காணோம்..இதுல இது வேற" என முணுமுணுத்தார் கவுண்ட்ஸ்.

"சைலன்ஸ்ஸ்ஸ்" கத்தினார் சிவாஜி..

கூளிங்கிளாஸ் போட்டுக் கொண்டு சிலைடைப் பார்த்தபடி ஒவ்வோரு ஏக்ஸன் அயிட்டத்தையும் ட்ரேக் செய்ய ஆரம்பித்தார் வீபீ.

" மிஸ்டர் ரஜினி, எப்பத் தான் ரிலீஸ் பண்ணுவீங்க டிசைன் டாக்குமெண்டை.." சிவாஜி கேட்க

" எப்ப வரும் எப்பிடி வரும்ன்னு தெரியாது..ஆனா வர வேண்டிய நேரத்துல கரீக்டா வரும்" என்றபடி பென்சிலைத் தூக்கிப் போட்டு வாயில் பிடித்தார் ரஜினி.

" இதுக்கொன்னும் கொறைச்சலில்லை.. ஒரு மாசமா இதே பதில் தான்.. ரெம்ப ஃபோர்ஸ் பண்ணினா..ரிஸைன் பண்ணீட்டு ரிஸுகேஷ் போறேன்னு சொல்லுறீங்க..ம்ஹூம்..ப்ளிஸ் சீக்கிரமா முடிக்கப் பாருங்க" என்று அலுத்துக் கொண்டே அடுத்த அயிட்டத்திற்கு தாவினார்.

"நெக்ஸ்ட் அயிட்டம்.. சத்யராஜ், உங்க மாட்யூல்ல ஏகப்பட்ட கோடிங் இஸ்யூஸ் இருக்கு போல..மணிவண்ணன் கம்ப்ளெய்ன் பண்ணுறார்..என்ன விஷயம்"

சத்யராஜ் "என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டீங்குறேங்களே" என இழுக்க..

"உங்க கேரக்டர் புரியலைன்னு யார் அழுதா.. கோடிங் புரிய மாட்டீங்குதே..அதுக்கென்ன பதில்.."

"..ம்ம் நான் ந்ல்ல படிச்சுட்டு வந்து வெனும்னா எழுதறேன்.. அதுக்கு ரேகா இண்ஸ்டிட்யூட்ல ட்ரெய்னிங் அரேஞ் பண்னுறீங்களா.." என வளிந்தார் சத்யராஜ்..

" என்ன .. பாட்டு பாடீட்டே மணல்ல ப்ரொக்கிராம் எழுதி பிராக்டீஸ் பண்ணலாம்னு ஐடியாவா....இதுக்கெல்லாம் இங்கே பட்ஜெட் இல்லை..ஒழுங்கா எழுத ட்ரை பண்ணுங்க" சிவாஜி


"சரி அடுத்த அயிட்டம்ஸ் பாக்கறதுக்கு முன்னாடி .. வேற முக்கியமான இஸ்யூஸ் எதாவது இருக்கா" சிவாஜி


" அய்யா.. இந்த ஹார்டிஸ்க் தலையன் தொந்தரவு தாங்க முடியலையையா..வேற டெஸ்ட் இஞ்சினியர்கிட்ட என் மாட்யூலை குடுங்கையா.." என அலறினார் கவுண்டமணி.

" பிஹேவ் யுவர் செல்ஃப்.. என்ன பிராப்ளம்?" சிவாஜி

அடுத்த பதிவில் அந்த பிராப்ளம்..

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

10 comments:

அனுசுயா said...

அருமையான நகைச்சுவை.... இதே நிலை தொடர்ந்தால் தமிழ் திரையுலகம் இந்த நிலைமைக்கு ஆக வாய்ப்புள்ளது.

dondu(#11168674346665545885) said...

தீவிரவாதிகளை அடக்குவதற்காக நல்ல மென்பொருளை கண்டுபிடித்துவிட்டு பம்பரம் விடச் சென்றிருக்கும் எங்கள் கேப்டனை இங்கு ஓரம் கட்டியது நியாயமா? அவர் எவ்வளவு அழகாகச் செயல்பட்டார்? பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_22.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

rv said...

:))

ரொம்ப நல்லாருக்கு.

புத்தாண்டு வாழ்த்துகள்

G.Ragavan said...

சூப்பரு சூப்பரு.....ஏய்யா! எங்க ஆபிசுக்குள்ள வந்து எட்டிப் பாத்துட்டீரா? பண்றதெல்லாம் அப்படியே எழுதீருக்கீரே! ஒருவேள நீங்களும் நம்மாளா? :-)

Voice on Wings said...

ரொம்பவே சிரித்தேன் :)

Suka said...

அட.. நிறைய பேருக்கு பிடித்திருக்கிறது போல.. :)

அனுசுயா, டோண்டு, இராமநாதன், ராகவன், voice od wings,
இங்கே வந்ததிற்கு நன்றி..
ராகவன், நீங்க என் ஆஃபிஸ்லயா வேலை செய்யறீங்க.. பார்த்ததே இல்லயே.. :)

புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :)
சுகா

G.Ragavan said...

// ராகவன், நீங்க என் ஆஃபிஸ்லயா வேலை செய்யறீங்க.. பார்த்ததே இல்லயே.. :) //

இல்லைங்க. ஆனா எல்லா சாஃப்டுவேரும் இப்பிடித்தான இருக்கனும். அதான் நீங்களும் சாஃப்டுவேரான்னு கேட்டேன். ஹி ஹி

Vinod said...

dei...

ennamo poda padam podura..

தகடூர் கோபி(Gopi) said...

கதை சூப்பருங்க...

:-)))))))))))

Mani said...

nice to read