Friday, January 06, 2006

தமிழ் நடிகர்களின் சாஃப்ட்வேர் கம்பெனி - 4

முந்தைய பதிவுகள் : ஒன்று , இரண்டு & மூன்று

சிவாஜி அடுத்த அயிட்டத்துக்கு செல்வதற்கு முன் அறையைப் பார்வையிட்டார். ப்ரொக்ரரமர் கமல் மிஸ்ஸிங். செல் ஃபோனில் கூப்பிட்டு வரச்சொன்னார்.

கமல் என்ன மூடில் இருந்தாரோ .. பாடிக் கொண்டே உள்ளே வந்தார்.

"கோடிங் பாதி ...டிஃபெக்ட் பாதி கலந்து செய்த கலவை தான்..
வெளியே ஃபீச்சர் உள்ளே டிஃபக்ட்.. விளங்க முடியா டிசைனிங் தான்...
டிஃபக்டை கொன்று டிஃபக்டை கொன்று.. ஃபீச்சர் வளர்க்கப் பார்க்கின்றேன்..
ஃபீச்சர் கொன்று ஃபீச்சர் கொன்று டிஃபக்ட்டு மட்டும் வளர்கிறதே.."

சிவாஜி பாட்டைக் கேட்டு சிரித்துக் கொண்டே " என்ன மிஸ்டர் கமல், இந்த வார ஸ்டேட்டஸ பாட்டாவே படிச்சுட்டீங்க போல.." என குணா ஸ்டைலில் கேட்க கமல் அசடு வழிந்தார்.

"கமல்.. ஐ நோ யூ ஆர் அ வெரி டேலண்ட்டட் ப்ரொகிராமர்.. உங்க கிட்ட என்ன ப்ராப்ளம்னா.. ஒவ்வொரு பிராஜக்ட்லயும் புது லாங்வேஜ் தான் ட்ரை பண்ணுவேன்னு அடம் புடிச்சு அப்பிடியே பண்ணியிருக்கீங்க.. இங்க ஸ்கெட்யூல் ஸ்லிப் ஆகி லாஸ் ஆகிட்டிருக்கே... அதப் புரிஞ்சுக்குங்க" என ஸீரியஸாகிறார்.

கமல் "ஸார்.. ஐ அண்டர்ஸ்டேண்ட்... வெப் பேஜ் டிசைனிங்க அசம்ப்ளி லாங்குவேஜ்ல டெவளப் பண்ண ஆரம்பிச்சது எனக்கே கொஞ்சம் ஓவராத் தான் படுது.. ஐ வில் கரக்ட் இட்.."

சிவாஜி " ஒகே.. நெக்ஸ்ட்.. டாக்குமெண்டேசன் ப்ராக்ரஸ்.." என்று சொல்லிக் கொண்டே டாக்குமெண்டேஸன் லீட் மணிரத்ணத்தைத் தேடுகிறார்.

மணிரத்ணத்தைப் பார்த்து சிவாஜி " மணி , உங்க டாக்குமெண்டைப் பார்த்தேன்.. என்ன இப்பிடி கைட் பண்ணி இருக்கீங்க.. இதப் பாருங்க.." என ஒரு பிரிண்ட் அவுட்டைக் கொடுக்கிறார்.

அதில்
" நுழை..
கீழே போ..
அமுக்கு
"என மூன்றே வரிகள் இருந்தன..

சிவாஜி தொடர்ந்து " நம்ம பிராடக்ட்டோட கம்ப்ளீட் டாக்குமெண்டேசனே இவ்வளவு தானா.. இதுக்கு உங்களுக்கு த்ரீ மந்த்ஸ் டைம் , த்ரீ டீம் மெம்பர்ஸ் வேற.... நீங்க உங்க படத்துக்கு டயலாக் எழுதற நியாபகத்திலயே இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.. பிளீஸ் டேக் கேர் ஆஃப் ஆல் தீஸ்" என நீளமாக பேசி முடிக்க

"எஸ்" என மணிரத்ணம் சொல்லியதும் .. " ஹூம்.. " என பெருமூச்சு விட்டார் சிவாஜி.

"மிஸ்டர் விஜயகாந்த், சொல்லுங்க உங்க டெஸ்டிங் டீம் ஸ்டேட்டஸை" என சிவாஜி கேட்டது தான் தாமதம். விஜயகாந்த் இருக்கையிலிருந்து எழுந்து சென்று ப்ரொஜக்டர் முன்னால் போய் நின்று எந்த டாக்குமெண்டையும் பார்க்காமல் முழங்க ஆரம்பித்தார்.

" நம்ம பிராடக்ல மொத்தம் 10 மாட்யூல்
அதுல வொர்க் ஆகுற நெலமைல இருக்குறது வெறும் 2 மாட்யூல்ஸ் தான்
அதுல ஒண்ணு நீங்க பார்த்தீங்களே அந்த டாக்குமெண்டேசன் ..

சராசரியா ஒரு மாட்யூல்ல 2500 லைன்ஸ் ஆஃப் கோட்
அதுல 2450 லைன்ஸ் கமெண்ட் மட்டும்
மீதி 50 லைன் கோடிங்ல இன்னைக்கு தேதில இருக்கற ப்ரயாரிட்டி ஒன் டிஃபக்ட் மட்டுமே 124

ஒரு டெஸ்ட் இஞ்சினியர் டிஃபக்ட் ஃபைல் பண்ணரதுக்கு செலவிடற டைம் மட்டும் ஒருநாளைக்கு 7 மணி நேரம்..
டிஃபக்ட் பைல் பண்ணரதயே ஆட்டொமேட் பண்ணினா நாம சேமிக்கற நேரம் ஒரு நாளைக்கு ஒரு இஞ்சினியருக்கு 7 மணி நேரம்"

என அடுக்கிக் கொண்டே போனவரை இடைமறித்தார் சிவாஜி. " போதும் .. விஜய்காந்த் போதும்...ரெம்ப தேங்க்ஸ் .. எப்பவுமே ஒரு வார்த்தை பேச வேண்டிய இடத்துல நூறு வார்த்தை பேசரது நீங்க மட்டும் தான்.. ஒய் டோண்ட் யூ ஹெல்ப் மணிரத்னம் இன் டாக்குமெண்டேஸன்.."

"ஐ வில் ட்ரை ஸார்" விஜயகாந்த்.


சிவாஜி டெவளப்பர் இளைய தளபதி விஜயின் பக்கம் திரும்பி " மிஸ்டர் விஜய்.... பார்த்தீங்களா எவ்வளவு டிஃபக்ட்ஸ்ன்னு ..வாட் ஹெப்பண்ட்"

டெவளப்மெண்ட் இஞ்சினியர் விஜய் பூவே உனக்காக கிளைமேக்ஸ் நியாபகத்திலயே "ஸார்... சிலபேருக்கு டிஃபக்ட்ங்கறது ரோஜாப் பூ மாதிரி... ஃபிக்ஸ் பண்ணீட்டா.. திரும்பி வராது....ஆனா சில பேருக்கு அதுவே ரோஜாச்செடி மாதிரி... ஒன்னை ஃபிக்ஸ் பண்ணினா... இன்னொன்னு புதுசா முளைக்கும்... இன்ஃபேக்ட்... சில சமயம் ஒரு பூவைப் பறிச்சா..அதனால ஒம்பது பூக்களும் கூட பூக்கும்... என் மாட்யூல் இரண்டாவது ரகம்" என முடிக்க.

சிவாஜி " இன்னைக்கு எல்லாரும் டயலாக் மூடுலய இருக்கீங்கபோல..ஆனா உருப்படியா எதும் இல்ல... மிஸ்டர் ரஜினி , யூ மே வாண்ட்டு அட்வைஸ் சம்திங் டூ விஜய் டூ ஃபிக்ஸ் ஹிஸ் ரோஜா...ஸாரி.. டிஃபக்ட்ஸ்"

ரஜினி " ப்ரொகிராமர்னா... அறிவு வேணும் அதிகபிரசங்கித்தனம் இருக்கக் கூடாது...
கூகுல் இருக்கனும் வேற எதுவுமிருக்கக் கூடாது...
சொந்தமா பணம் சம்பாதித்து பெங்களூருல வீடு வாங்க நினைக்கிற டெக்கியும்..
சொந்தமா ப்ரொகிராம் எழுதி சாஃப்ட்வேர் டெவளப் பண்ண நினைக்கிற ப்ரொகிராமரும் உருப்பட்டதே இல்ல"

ஏண்டா கேட்டொமென நினைத்து அடுத்த அயிட்டத்திற்கு தாவினார்.

" நீட் டு கம் அப் வித் அ லோகோ அண்ட் ஸ்லோகன் ஃபார் த ராக்கெட் லாஞ்சிங் சாஃப்ட்வேர்....ஸோ டீம் எனி சஜஸன்ஸ்" என சிவாஜி கேட்டதும்

ராமராஜன் " ஸார்.. எங்க ஊரு பசுமாடு பேச்சியோட படம் போடலாம் ஸார் ரெம்ப ராஸியாயிருக்கும்" என்றதும்

சத்யராஜ் நக்கலாக.. " ஆஹா.. நாமென்ன சித்தூர் பால்கோவாவா விக்கப்போறோம்.. என்ன ராமராஜன் அமரிக்கா வந்தாலும் அம்மாபேட்டை நியாபகத்துலயே இருக்கீங்க... "

விஜய் ' ஹார்ட் ஸிம்பல லோகோவா போட்டு .. இந்த ராக்கெட் காதலவிட உயர்வான இடத்துக்கும் போகும்ன்னு போட்டா நல்லா இருக்குமில்ல.."

"காதல்..ரோஜா இதெல்லம் உட்டு வெளிய வாங்க பிளீஸ்.."சிவாஜி

எதுவும் உருப்படியாக அமையாததால் சிவாஜி மீட்டிங்கை முடிக்க அனைவரும் அறையை விட்டு வெளியேறினர்.


அடுத்த பாகம் இங்கே

14 comments:

பிரதீப் said...

சூப்பர் சுஹா
எனக்கு அப்படியே ஒரு படம் பாக்குற மாதிரி இருக்கு.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி "சரஸ்வதியின் செல்வன்" னு ஒரு சோ நாடகம் டிடியில வந்தது. அந்த மாதிரி ஏதாச்சும் எடுக்கிறதுக்கு நீங்க முயற்சி பண்ணலாம்
வாழ்த்துகள்

நிலா said...

//எதுவும் உருப்படியாக அமையாததால் சிவாஜி மீட்டிங்கை முடிக்க அனைவரும் அறையை விட்டு வெளியேறினர்.//

உண்மை, சுகா.

லாஸ்ட் ரெண்டு எபிஸோடும் ரொம்ப நல்லா இருந்ததனால இதை ஆவலா படித்தேன். ஏமாற்றம். மணி ரத்னம் தவிர மற்றெதுவும் சரியா வரலை. ஸாரி.

அடுத்த எபிஸோட் நல்லா வரும்னு நம்பறேன்

Suka said...

நன்றி... பிரதீப்...நாடகத்துல நடிக்க ஆள் தேட ஆரம்பிக்கிறேன்.. :)


அபிராமம்.. என்ன இது சந்தடி சாக்குல குழந்தைன்னு சொல்லீட்டீங்க !

வருகைக்கு நன்றி

சுகா

Suka said...

நன்றி நிலா..

ஸாரி..நேத்து என் மாட்யூல்ல நிறைய டிஃப்க்ட்ஸ் வந்துடுச்சு ..ஸோ ப்ளாக் ஃபுள்ளா அதப் பத்தியே எழுதீட்டேன்.. :)

மணிரத்னம் ஸைலண்ட்டா இருந்து உங்களுக்கு பிடிக்க வச்சுட்டாரா.. :)

சுகா

G.Ragavan said...

// சூப்பர் சுஹா
எனக்கு அப்படியே ஒரு படம் பாக்குற மாதிரி இருக்கு.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி "சரஸ்வதியின் செல்வன்" னு ஒரு சோ நாடகம் டிடியில வந்தது. அந்த மாதிரி ஏதாச்சும் எடுக்கிறதுக்கு நீங்க முயற்சி //

பிரதீப் நீங்க அந்த நாடகத்தை நினைவு படுத்தீட்டீங்க. சின்னப் புள்ளைல பாத்தது. சோவோட நாடகங்கள் எல்லாம் வீசீடில வருது. ஆனா சரஸ்வதியின் செல்வனும் ஜனதா நகர் காலனியும் வரமாட்டேங்குது. இது ரெண்டும் வந்தா கண்டிப்பா வெலையப் பாக்காம வாங்கீருவேன்.

அப்படியே கலக்கலா கொண்டு போகும் சுகாவிற்கு நன்றி.

Suka said...

நன்றி ராகவன் ..

சுகா

aathirai said...

எப்பவுமே ஒரு வார்த்தை பேச வேண்டிய இடத்துல நூறு வார்த்தை பேசரது நீங்க மட்டும் தான்.. ஒய் டோண்ட் யூ ஹெல்ப் மணிரத்னம் இன் டாக்குமெண்டேஸன்.."

super

Karthik Jayanth said...

:-)). 1 question. what about Ajit,surya, vikram, and vijay where r they.are they supporting from offshore? or planning for late entry. then i was wondering y in this project there are no heroines. vetti project ahidapohuthu :-(

Suka said...

நன்றி.. ஆதிரை & கார்த்திக்

என்ன கார்த்திக் .. விஜய் ..டிஃபக்டைப் பத்தி ரெம்ப உருகி உருகி டயலாக் அடுக்கும் போது நீங்க தியேட்டர்ல இல்லியா?

அஜித் விக்ரம்ல்லாம் இன்னமும் கொஞ்சநாள்ள வந்துடுவாங்க..

உங்களுக்கே தெரியும் .. ஹீரோயின்ஸ் வந்தா காமெடி ட்ரேக் மாதிரி கொஞ்சம் ட்ராஜடி ஆகிடும்..மெகா சீரியல் தான் அப்புறம்...டீவிய பாத்து அழுறவங்க கம்ப்யூட்டறப் பார்த்தும் அழுவாங்க..

இருந்தாலும்.. நம்ம கதையோட இண்ட்ரோலயே ஒரு ஹீரோயின்ல தான ஆரம்பமாச்சு .. அட அவங்களும் சதி லீலாவதில ஹீரோயின் தான..

எனிவே ..நீங்க கேட்டுட்டீங்க .. வடிவுக்கரசி ..காந்திமதி ன்னு யாரயாவது நுழக்க ட்ரைப் பண்ணறேன்..ஓகேவா ..திருப்திதானே :)

சுகா

Karthik Jayanth said...

விஜய் dialog பெசும் போது தம்மு அட்டிக்க போய்டென்(என்ங பன்ச் dialog ra பேர்ல கொன்னுட்டா :-))). அப்புரம் real project la than heroine இல்லம dry ya இருக்கு. atleast உங கதை la யவது ஒரு நல்லா heroine போடுஙா sir.

got a scene for sneha.. ப்ரொஜெcட் ரொம்ப critical stage la இருக்கு அப்ப sneha வந்து autograph பாட்டு பாடி. deadline la finish பன்னுர மரி ஒரு scene வைகலம்

sorry for spelling mistake's in tamil.i couldn't find right key here.

Suka said...

அடடா.. ரெம்பவே கஷ்டப்படுறீங்க போல..தமிழுக்கும் தான்..

சிநேகா பாட்டு வேணுமா :)))உட்டா..அடுத்த எபிசோட் நீங்களே எழுதிடுவீங்க போல..

நேயர் விருப்பம்.. சரி கண்டிப்பா அடுத்த தடவை எதாவது எழுத ட்ரை பண்ணறேன்..
நான் சொதப்பினா நீங்க தான் நிலா கிட்ட திட்டு வாங்கணும்..ஓகேவா :)

சுகா

Anonymous said...

நீங்க ராமராஜன் பற்றி சொல்லும்போதெல்லாம் ஏனோ சிரிப்பு பயங்கரமா வருது..

:))) control செய்ய முடியலை :))

Suka said...

எனக்கும் ராமராஜனைப் பற்றி எழுத பிடிக்கும். நன்றி கீதா.. :)

~சுகா

தகடூர் கோபி(Gopi) said...

//சொந்தமா பணம் சம்பாதித்து பெங்களூருல வீடு வாங்க நினைக்கிற டெக்கியும்..
சொந்தமா ப்ரொகிராம் எழுதி சாஃப்ட்வேர் டெவளப் பண்ண நினைக்கிற ப்ரொகிராமரும் உருப்பட்டதே இல்ல//

கலக்கல்....