முதல் பதிவும், இரண்டாம் பதிவும் இங்கே...
பார்த்திபனைப் பார்த்ததும் சிவாஜி"ஓ.. பார்த்திபன் நீங்க இங்கதான் இருக்கீங்களா.. உங்களைக் கேக்கணும்ன்னு நினைச்சேன்... உங்க ஆஃபிஸ் முன்னால மட்டூம் ஏன் தமிழ்ல 'உள்ளே வெளியே' ன்னு போர்டு வெச்சிருக்கீங்க..?"
பார்த்திபன் " தமிழ வளர்க்கத்தான் சார்" என்று நெளிய
வடிவேலு கடுப்பாகி " வளர்த்துட்டாலும் .." என்று அழுத்துக் கொண்டார்
" பை த பை .. பார்த்திபன், நம்ம அவுட்டிங்க்கு கேம்ஸ் ப்ரிபேர் பண்ண சொல்லியிருந்தனே..என்ன ஆச்சு" என்ற சிவாஜியை இடைமறித்து வடிவேலு அவசர அவசரமாக
" சார்.. இதுவா சார் இப்ப முக்கியம் ..கிரிட்டிகள் இஸ்யூஸ் தானே டிஸ்கஸ் பண்ணீட்டு இருந்தீங்க..ஐ ஹேவ் எ வெரி வெரி கிரிட்டிகள் இஸ்யு நௌ.. கேளுங்க சார் பிளீஸ்" என மிரட்டலில் ஆரம்பித்து கிட்டத்தட்ட அழுகையில் முடித்தார்.
"மிஸ்டர் வடிவேல், ப்ளிஸ் பீ பேஷண்ட். " என்று சிவாஜி கடிக்கும் போது வடிவேலுவைப் பார்த்து நக்கலாகச் சிரித்தார் பார்த்தீபன். பின்னர் சிவாஜி பக்கம் திரும்பி
" எஸ் ஸார்.. எல்லா விளையாட்டும் ரெடி.. கில்லி, மங்காத்தா ன்னு செமையா பிரிபேர் பண்ணியிருக்கேன்" என்றதும்
சிவாஜி " என்ன பார்த்தீபன் .. எல்லாரும் விளையாடரற மாதிரி எதாவது ரெடி பண்ணுங்க. லாஸ்ட் டைம் ராமராஜன் கிட்ட குடுத்தா அவர் மாடு எருமை சம்பந்தமாவே சொல்லீட்டு இருந்தார்ன்னு இந்த தடவை உங்க கிட்ட குடுத்தா இப்பிடி சொதப்பரீங்களே..ப்ளிஸ் டீஸண்ட்டா எதாவது ரெடி பண்ணுங்க"
பார்த்தீபன் " எஸ் ஸார்".
சிவாஜி "ஒ கே.. இப்ப சொல்லுங்க வடிவேலு. வாட்ஸ் த இஸ்யூ"
வடிவேலு பார்த்தீபனைக் காட்டி "இவரோட இம்சை தாங்க முடியல சார்" அன்னைக்கு என்ன நடந்துதுன்னா என மீண்டும் கொசுவர்த்தியைச் சுழற்றுகிறார்..
பிளாஸ் பேக்கில் , லேப் வாசலில் வடிவேலு " இந்த வேலைய பாக்குறதுக்கு அரண்மனைக்கு பெயிண்ட் அடிக்கவே போயிருக்கலாம் போல.." என்று முணுமூணுத்தபடியே ஒரு ப்ரிண்ட் அவுட்டை ஒட்டிக் கொண்டிருந்தார்.
அந்த வழியே வந்த பார்த்தீபன் அதில் எழுதி இருந்ததை உரக்கப் படித்தார் " டோண்ட் டிஸ்டர்ப் த லேப் ஸிஸ்டம்ஸ் ஹியர்"
படித்துவிட்டு "சார் என்ன இது..? " எனக் கேட்க வடிவேலு அவ்ர் ஸ்டைலில் அழுத்தம் திருத்தமாக படித்துக் கான்பித்தார்.
பார்த்தீபன் " இத இங்க தானே ஒட்டி இருக்கீங்க .. இந்தியாவிலயா ஒட்டிருக்கீங்க.. எதுக்கு 'ஹியர்' ..தேவையில்லாம " என்றதும்
" ஆமாமில்ல.." என சொல்லி நாக்கை கடித்துக்கொண்டு "ஆமாம்..ஆமாம்" என சொன்னபடி ஓடிப்போய் புதிய பிரிண்ட் அவுட்டுடன் வந்து " இப்ப ஓ கே தான.." என்றதும்
" அது என்ன லேப் ஸிஸ்டம்ஸ் ? அப்ப அடுத்தவங்க ஸிஸ்டம் லாம் டிஸ்டர்ப் பண்ணலாமா..? நீதான் செந்திலை வச்சு கவுண்ட்ஸ் அண்ணன் சிஸ்டத்தை டிஸ்டர்ப் பண்ணுனயா..?" என பார்த்தீபன் மாட்டியதும்
"வேணாம்பா ..வேணாம்பா.. அவரு செந்திலுக்கு பதிலா எதுக்கெடுத்தாலும் என்னை உதைக்க ஆரம்பிச்சுடுவாருப்பா.. உனக்கென்ன அந்த வார்த்தைய எடுக்கணும் அவ்வளவு தானே.. ஒரே நிமிசம்.." என்று பறந்தவர் "டோண்ட் டிஸ்டர்ப் ஸிஸ்டம்ஸ் " என பிரிண்ட் அவுட் எடுத்து வந்து
"இப்பத் தான் ரத்ன சுருக்கமா அழகா இருக்கு இல்லே.." என்று அதை ஒட்டியதும் நழுவ முயன்றவர்
" இல்ல.. " என்ற பார்த்திபபின் ஒற்றைச் சொல்லால் தடுக்கியபடி திரும்பினார் வடிவேலு..
" லேபுக்குள்ளே ஸிஸ்டம்ஸ் இல்லாம என்ன மெகாசீரியல் ஸூட்டிங்கா நடக்கும்...எதுக்கு இந்த ஸிஸ்டம்ஸ் " என பார்த்திபன் கேட்க
பிரிண்ட் அவுட்டில் ஸிஸ்டம்ஸ் என்பதை மட்டும் கிழித்து மீதியை ஒட்டியபடி "இப்ப திருப்தி தானே .. கெளம்பறது.." என கடுப்பானார் வடிவேலு.
அப்போது அந்த வழியே போன ப்ரொகிராம் மேனஜர் வினுச்சக்கரவர்த்தியின் தலையை படாரென பார்த்திபன் தட்ட..கடுப்பாகி அவர் திரும்பி பார்த்திபனை முறைக்க..
"அப்பாடி.. மாட்டிகிட்டான் பாரு' என மனதில் நினைத்தபடி அந்தபிரிண்டவுட்டை ஒருகையில் பிடித்தபடி திரும்பி வேடிக்கை பார்த்தார்.
பார்த்திபன் குழந்தை போல பவ்யமான குரலில்" சாரி சார்.. அட்மின் வடிவேலு தான் 'டோண்ட் டிஸ்டர்ப்' ன்னு அவர் வாசல்ல மட்டும் எழுதிப்போட்டிருக்கறார்.. அதனாலத் தான் மத்தவங்களை டிஸ்டர்ப் பண்ணலாமோன்னு டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன் சார்" என முடிக்க..
" ர்ர்ர்" என பல்லைக் கடித்தபடி பார்த்திபனை நோக்கி வந்து " எல்லாம் இவனால தான்" என அந்த பிரிண்டவுட்டை கிழித்து போட்டபடி வடிவேலு தலையில் நறுக்கென கொட்டு வைத்துவிட்டு கிழம்பினார்.
"ஊஊஊ.." வடிவேலு அழுது முடிப்பதுக்குள் பார்த்திபன் எஸ்கேப்.
பிளாஸ் பேக் முடியும் சமயத்தில் சிவாஜி சிரிப்பதைக் கேட்டு கடுப்பாகி ஒரு லுக் விட்டார்.
சிவாஜி சுதாரித்துக் கொண்டு " பார்த்தீபன் .. என்ன விளையாட்டு இது.. பாருங்க அவர் எவ்வளவு ஃபீல் பண்ணறார்ன்னு" என்ற படி அடுத்த அயிட்டத்திற்குத் தாவினார்.
அடுத்தபாகம் இங்கே
15 comments:
பின்னூட்டம் இல்லைன்னு எழுத விட்டுறாதீங்க... நான் காப்பி எடுத்து வச்சிருக்கேன் (அஃப்கோர்ஸ், காப்பிரைட்டுன்னு உங்க பேர் போட்டுத்தான்) நாலு பேருக்குக் காட்டிச் சிரிக்க.... :D
எப்படீங்க...எப்படீங்க...இதெல்லாம் எப்படீங்க....சூப்பரப்பு!
தமிழ்மணத்தின் நகைச்சுவைத் திலகமுன்னு பட்டம் கொடுத்துறலாமா?
மிகவும் அருமையான நகைச்சுவை. பின்னூட்டம் இடாத பல வாசகர்கள் இருக்கிறார்கள் எனவே தொடர்ந்து எழுதுங்கள்
very nice comedy.. had a hearty laugh
nalla vanthirukku
keep going
பிரதீப், ராகவன், அனுசுயா, கிருக்கன், நிலா..
உங்கள் வருகைக்கு நன்றி.
இத்தோடு முடித்துக் கொள்ளலாம் எனப் பார்த்தேன். நேயர் விருப்பத்திற்கிணங்க :) இன்னும் கொஞ்சம் எழுதுகிறேன்.
நன்றி
சுகா
"லாஸ்ட் டைம் ராமராஜன் கிட்ட குடுத்தா அவர் மாடு எருமை சம்பந்தமாவே சொல்லீட்டு இருந்தார்ன்னு "
ஆண்டவா இதை படிக்க படிக்க சிரிப்பு தாங்கலை. என்னால control செய்யவே முடியலை..
ஒவ்வொரு முறை படிக்கும்போதும்..
சூப்ப்பர்
இப்போதுதான் படித்தீர்களா..நன்றி கீதா.. :)
~சுகா
சூப்பரா வந்திருக்கு சுகா,
வாழ்த்துக்கள்.
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜோசஃப்.
சுகா
அருமை அருமை...
:-))))
இப்போதுதான் இதை படித்தேன் (இரண்டு பாகத்தைய்ம்)அருமையா எழுதியிருக்கிறிர்கள்.. சிரித்து சிரித்து வயிறு புண்னாகியது. மேலும் எழுதவும்.
அரவிந்தன்,
நன்றி..
கொஞ்சம் லேட்டா ஒரு ஒன்றறை வருசத்துக்கப்புறம் படிச்சிருக்கீங்க :) அதெல்லாம் ஆரம்பகால தத்துபித்து பதிவுகள் .. இனியாவது கொஞ்சம் நல்லதா எழுதலாம்ன்னு இதையெல்லாம் விட்டுட்டேனே :)
சுகா
சுகா,
இப்பத்தான் பார்த்தேன் உங்களோட இரண்டாவது பின்னூட்டம். விபரமறிந்தேன். விலகி இருக்க வேண்டியதாகிப் போயிவிட்டதென்று கூறியுருந்தீர்கள். இதற்கெல்லாம் அஞ்சினா கதைக்கு ஆகுமா?
இது பழைய பதிவு போல இருக்கு. புதுசு எங்க :-) மூனு பாகமா இருக்கு படிக்க படிக்க உங்களுக்கு செய்தி வரும்.
இப்ப வர்டா...
தெகா,
இது ரெம்ப பழசு தான். ஏன் இத தமிழ்மணம் இப்ப காமிக்குதுன்னு புரியல.. ஆனா முதல் பக்கத்துக்கு போனா புதுசு இருக்கும்..
அஞ்சறதுக்கு எதுவுமில்ல..கொஞ்சம் அலுத்துடுச்சு :) இப்ப ஓகே தான்
சுகா
Post a Comment