Saturday, January 14, 2006

மதிப்பிற்குரிய ஓர் எதிரி..

அமோக வெற்றிகள்
உற்சாகக் கரகோஷங்கள்
சுகம் தானெனிலும்

சூழும் நட்பும்
அதனால்சூடும் நகைப்பும்
இனிமை எனினும்

சுலபமாகத் தீரும்பிரச்சனைகள்
நிம்மதிதான் ஆனாலும்
ஏதோ குறையுண்டெனஉணர்வதேன்

சிரித்த முகங்களும்
சிரிக்க வைக்கும் வார்த்தைகளும்
சிறிதே சலிப்பதேன்..

தனிமையில்
இனிமை நினைவுகள்
வழக்கமானதே..ஒரு குறையோ

குளிர்த் தென்றல் இதமென்றால்
கோடை வெயிலும்
வழியும் வியர்வையும்
நிழல் தேடும் விழிகளும்
இலையுதிர்த்த மரங்கள் எதிர்ப்பட நோகும் மனமும்
இவைதானே
என்னைஇயக்குவது..
இயக்கற் பலன் அருமையெனில்
இயக்குவதும் அருமையின் அருமைதானே..

கோபமென்றொன்று
அது தள்ளும் அட்ரினலின்
நாவினடியினில் புளிப்புச் சுவை
மறந்தே விட்டேனோ

நீண்ட வாதங்களும்
நட்பின் முகமூடி தொலைத்த பட்டவர்த்தனைகளும்
ஆவேசக் குமுறல்களும்
அலட்சிய வார்த்தைகளும்
அந்நொடியில் வலித்தாலும்
அதுவும் ஒரு சுவைதானே

திரும்பத் திரும்பத் தோன்றும் காட்சிகளும்
தூக்கம் தொலைக்கும் நினைவுகளும்
நினைக்கக் கலங்கும் கண்களும்
இமைக்க மறக்கும் இமைகளும்
துடித்துச் சிவக்கும் முகமும்
பதில் தரப் பொருமும் உள்ளமும்
புயலாய் வெளிவரும் பெருமூச்சும்
லட்சியங்களை கருத்தறிக்கும் மூளையும்
இதனால் நான் படும் பாடும்
தனியொரு சுகம் தானே..

இச்சுகம் புதிதல்ல..இருப்பினும்
இதைமீண்டும் அனுபவிக்கத் தேவை
மதிப்பிற்குரிய ஓர் எதிரி

சுகா

3 comments:

நிலா said...

பொருட்சுவை உண்டு; சொற்சுவை பரவாயில்லை
தொடர்ந்து முயலுங்கள்

முன்பு உங்கள் புகைப்படத்தைப் பார்த்த நினைவு. இப்போது காணவில்லையே? நான் நடிகர்கள் தேடிக்கொண்டிருப்பதால் ஒரே ஃபோட்டோ வேட்டை:-)

Suka said...

பேசாமல் கட்டுரையே எழுதுங்கள்.. கவிதை முயற்சி எதற்கு என்கிறீர்களா :) நானும் ஒரு பல முறை எண்ணுவதுண்டு..வார்த்தைச் சிக்கனத்திற்காகவே இந்த முயற்சி..

புகைப்படம் பழைய பதிவுகளில் ஒன்றில் புதைந்துள்ளது. பல முகமூடிகள் அணிவதுண்டு. பலர் முன்பு இயல்பாக நடிப்பதுண்டு. அவர்கள் அதை அறிவதில்லை. தொழில் முறை நடிப்பிற்கும் எனக்கும் கிட்டத்தட்ட கவிதை அளவு தூரம்..:)

சுகா

நிலா said...

நாமெல்லாம் அமெச்சூர்தானே? சும்மா ஃபன்னுக்காக முயற்சி செய்து பார்க்கலாமே?