Thursday, June 15, 2006

அரியவை ஆறு !

வெங்கட்ரமணி இணைக்க ... இதோ எனக்குப் பிடித்த ஆறு..

1) கல்லூரியின் பரிட்சைகளை முடித்து விட்டு களைத்துப்போய் கோடை காலத்தின் மதிய வெயிலில் உருகிக் கொண்டே வண்டியில் வீட்டுக்குச் செல்லும் போது .. பெரிய காய்ந்த வயலின் நடுவே இருக்கும் அரசமரமும் அதன் கீழ் அகன்ற திண்ணையும்.. இன்றைக்கும் நினைத்தால் ஏங்க வைக்கும் சொர்க்கம்... (அந்த திண்ணையில் யாராவது படுத்திருந்தால்.. நான் விடும் பெருமூச்சின் வெப்பத்திலே அவர் வெந்து விட்டிருப்பார்)

2) கோடையிலே பெய்யும் திடீர்மழை.. ஜன்னல் மழையில் ஆசிரியர்கள் கூட பாடம் நடத்தாமல் ஃப்ரீயாக விடுவது.. பள்ளி விட்டவுடன், நிமிடம் தவறினால் கூட ஏதோ உலகம் அழிந்துவிடுவது போன்ற அவசரத்தில் .. நனைந்து கொண்டே சைக்கிளில் வீட்டுக்கு வருவது.. எதிர் காற்றோடு முகத்தில் அறையும் செல்ல ஊசிகள் தனி சுகம் ...வீடு சேர்ந்ததும், சூடான போண்டாக்களும் காபியும் பின் நண்பர்களுடனான ராஜாராணி விளையாட்டும் .. தோணியில் தண்ணீர் பிடிப்பதும்.. மீளாத சொர்க்கம் போலும்..

3) குளிர்காலத்தின் காலைத் தூக்கம்.. இழுக்க இழுக்க வளரும் போர்வைக்கு ஒரு கண்ணன் கிடைத்தால் தேவலை.. பல் விளக்கிவிட்டு காபி குடிப்பது நல்ல பழக்கம் தான் ..இருந்தாலும்..

4) சனிக்கிழமை அதிகாலைகளில் இந்திராநகரிலிருந்து இரண்டு பைக்குகள் கிளம்பி கனகபுரா ரோட்டையோ, மைசூர் ரோட்டையோ தேய்க்க ஆரம்பிக்கும்.. பெங்களூரில் செகண்டு கியர்க்கு மேல் போக முடியாத அந்த பைக்குகள் கிராமத்துச் சாலைகளில் விதிகளைக் கொஞ்சம் விளையாடுவது தனிசுகம்.. சனிக்கிழமை கூட பள்ளி போல .. லிப்ட் சிறுவர்கள் தாவிக்கொள்ள இலவசமாய்க் கிடைத்த பொதுசேவை வாய்ப்பு ஒரு ஸ்பெஷல் சுகம்..

5) நண்பர்களிடம் வெட்டி அரட்டை.. பில்கேட்ஸ் கடன் கேட்டாரே செக் அனுப்பிட்டயா என அரம்பித்து 100% அக்மார்க் வெட்டியாய் முடியும் அரட்டைகள்

6) ரயில் நிலையம் ... கோவை செல்லும் போது வெள்ளிக்கிழமைகளின் சாயங்காலத்தில் .. சரவணபவன் காஃபியோடு காத்திருக்கும் சென்னை செண்ட்ரல் .. இதைப் பற்றி ஒரு தனிபதிவே எழுதலாம் :)


இணைக்க விரும்புவது
===============
1)Unmai
2)வெற்றி
3)SK
4)கப்பி பய
5)மணியன்
6)ஸ்ருசல்

22 comments:

பொன்ஸ்~~Poorna said...

சுத்தமா சுருக்கிட்டீங்க.. யாரைக் கூப்பிடப் போறீங்க?

//இழுக்க இழுக்க வளரும் போர்வைக்கு ஒரு கண்ணன் கிடைத்தால் தேவலை.. //

இது நல்லாருக்கு :)

Suka said...

ஓ.. மறந்துட்டேன் ..சாரி.. பட்டியல் தயார் செய்துடறேன் ..

சுகா

Suka said...

பட்டியல் ரெடி .. எல்லாரையும் அழைத்தாச்சு ..பார்க்கலாம் எப்படிப் போகுதுன்னு..

பிடிக்காதவை ஆறுன்னு எழுதி ஆறு தடவை எங்க VP பேர எழுதனும்ன்னு நினைக்கிறேன்.. அவர்னாலத் தான் சின்னதா முடிக்க வேண்டியதா போயிடுச்சு :(

SK said...

அழைப்புக்கு நன்றி, சுகா!
விரைவில் வருகிறேன்!

Venkataramani said...

//எதிர் காற்றோடு முகத்தில் அறையும் செல்ல ஊசிகள
இழுக்க இழுக்க வளரும் போர்வை//
என்ன இது.. நீங்க சாதாரணமா எழுதறதே கவிதை மாதிரி வருது!

என்ன இப்படி சுருக்கிட்டீங்க.. யாழிசைச்செல்வன் ஆரம்பித்தபோது ஆறு தலைப்புகளில் ஆறு விஷயங்களைப்பற்றி எழுதி இருந்தார். நானும் பொன்ஸூம் கொஞ்சம் சுருக்கினோம். நீங்க சுருக்கியிருக்கறதை பார்த்தா யாழ் தாத்தா நொந்து நூலாயிடுவாரு ;-) அவரை உங்க VPயோட சண்டை போடச்சொல்லுங்க.

Suka said...

கவிதை மாதிரி இருக்கா... :) (வலைப்)பூவோட சேர்ந்த நார் நான்..

ஆஹா... ரமணி உண்மை தான் ..
யாழ் தாத்தாவுக்கு அவர் படத்தை வரஞ்சு கொடுத்து சமாதானப் படுத்தறதா திட்டம் :)

Unmai said...

நன்றி சுகா :), விரைவில் எழுதுகிறேன்..

வெற்றி said...

அய்யோ...சுகா!
நான் தமிழ்மணத்தில் இணைந்து இதுவரை ஓர் பதிவு கூட பதியவில்லை. இதுவரை தமிழ்மணத்தில் வரும் பதிவுகளைப் படித்து இரசிப்பதும், படித்ததில் பிடித்தவைக்கு பின்னூட்டம் இட்டு ஊக்கிவிப்பதும் தான் செய்துகொண்டிருக்கிறேன். அப்படிப்பட்ட என்னை இழுத்திருக்கிறீர்கள். நன்றி. நீங்கள் இழுத்ததற்காக விரைவில் பட்டியல் போடுகிறேன்.

நன்றி.

அன்புடன்
வெற்றி

Suka said...

உண்மை, எஸ்கே, வெற்றி

அழைப்பை ஏற்றதுக்கு நன்றி :)

வெற்றி,

உங்களை மறுமொழிகளில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.. இனி நிறைய பதிவுகளும் எழுத ஆரம்பியுங்கள் :)

மணியன் said...

அழகான கவிதைநடையில் பிடித்த ஆறு எழுதி அசத்திவிட்டிர்கள். சுருக்கமானாலும் சுருக்க (உடனடியாக) எழுதிவிட்டீர்கள்.:)
அழைப்பிற்கு நன்றி.

கப்பி பய said...

அழைப்புக்கு நன்றி சுகா...
உங்களுக்கு ஒரு VP மாதிரி எனக்கும் இங்க ஒருத்தன் இருக்கான் :(
கூடிய விரைவில் எழுதறேன்...

Suka said...

நன்றி மணியன்..

Suka said...

நன்றி கப்பிபய..

உங்களுக்கும் அதே பிரச்சினையா... சிபி கிட்டதான் எதாவது வழிகேக்கணும் :)

மணியன் said...

எனது கடமையை இன்று முடித்தேன் :))

Thekkikattan said...

சுகா,

...பெரிய காய்ந்த வயலின் நடுவே இருக்கும் அரசமரமும் அதன் கீழ் அகன்ற திண்ணையும்.. இன்றைக்கும் நினைத்தால் ஏங்க வைக்கும் சொர்க்கம்...

நாங்கள் அவ்வாறு ஒரு இடத்தை உருவாக்கி கொண்டுள்ளோம் :-) ஏற்கெனவே மூன்று 35 வருட அரசமரங்கள் ரெடி, திண்ணைதான் இப்பொழுது உருவாகி வருகிறது...

இங்கு நீங்கள் அது போன்ற ஒன்றை ஏற்கெனவே அனுபவித்து எழுதியுள்ளீர்கள்... மிகவும் அருமை

தெகா.

Suka said...

நன்றி மணியன்.. :)

Suka said...

தெகா !,

வாங்க.

//
நாங்கள் அவ்வாறு ஒரு இடத்தை உருவாக்கி கொண்டுள்ளோம் :-) ஏற்கெனவே மூன்று 35 வருட அரசமரங்கள் ரெடி, திண்ணைதான் இப்பொழுது உருவாகி வருகிறது...
//

எங்கே உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.. ஆர்வமாக உள்ளது இதைப்பற்றித் தெரிந்து கொள்ள..

திண்ணைத் தூக்கம் தனி சுகம் அது பிடிக்காதவர்கள் உண்டா.. வீட்டிலிருக்கையில் மதிய நேரம் நான் தூங்கும் போது எங்கள் வீட்டுப் பூனை என் மேல் ஏறிக் கொண்டு தூங்கும் :)

கார்த்திகேயன் said...

ஓகோ இந்த ஆறு விளையாட்டு உங்க வேலைதானா? அது சரி...

சரி இங்க வாங்க...

http://tamilpoo.blogspot.com/2006/06/6-6.html

அன்புடன்,
கார்த்திகேயன்

வெற்றி said...

சுகா,
உங்களின் அழைப்பை ஏற்று இன்று ஆறுப்பதிவு போட்டுவிட்டேன்.

நன்றி.

Suka said...

நன்றி வெற்றி .. அருமௌயான பதிவு

வாழ்த்துக்கள்
சுகா

நரியா said...

சுகா,
எதார்த்தமான விருப்பங்கள், எளிமையான நடையில் அருமையாக எழுதியுள்ளீர்கள்.

வாழ்த்துக்கள்!

நன்றி!

Suka said...

நன்றி நரியா !