நாங்கள் ஒரு நூறு பேராவது இருப்போம்..
அனைத்தையும் பார்க்கிறோம்.
ஆதரவு என்று யாருக்கும் தருவதில்லை
இருந்தாலும் இவர்கள் விடுவதாயில்லை
எங்கள் காது செவிடாகக் கத்துகின்றனர்
கட்சிகள் மாறுகின்றன
காட்சிகளும் மாறுகின்றன
இன்று எம்மிடம் இருப்பவர்
நாளை எதிரிடம் போகின்றார்
அங்கிருப்பவர் இளித்துக் கொண்டே
இங்கே வருகிறார்
நாங்கள் கண்டுகொள்வதில்லை
அவர்களும் எங்களை மதிப்பதில்லை
உண்மையில் நாமில்லையெனில்
பாவம் இவருக்கு சட்டசபையில் இருக்கை ஏது
இது நிதர்சனமென தெரிந்தும் ஏனோ
எம்மைத் துச்சமாக மதிக்கிறார்.
நகைச்சுவை.. ஏளனம்..எதிர்ப்பு..
கோபங்கள்..கூச்சல்கள்
வாழ்த்துக்கள் வசைமொழிகள்
அடிதடிகள் அத்துமீறல்கள்
ஏதும் செய்வதில்லை எங்களை
சில காயங்கள் எங்களுக்கும் உண்டு
யாரும் கண்டுகொள்வதில்லை
நாங்கள் மரம்.
அவர்கள் பேசியதைக் கேட்டோம்
பின் அதையே மாற்றிப் பேசியதையும் கேட்டோம்
அதை எதிர்த்துப் பேசியவரையும் கேட்டோம்
எதிர்த்தவர் திடீரென ஒத்துப் போவதையும் கேட்டோம்
எங்கள் கேள்வி ஞானம் கண்டு
வள்ளுவரே பூரிப்பார்
கட்சி பேதமெமக்கில்லை
தட்டுவோர் தட்டினால்
சத்தமெழுப்பி ஆரவாரிப்பதைத் தவிர
வேறொன்றும் யாமறியோம்
அட.. நாம் நடுநிலைவாதிகள் அல்லவா!
அதனால் தான் கரைவேட்டிகள் அமர
படும் அங்கங்கள்
எங்களை இன்னும் அசிங்கப்படுத்துகின்றன.
-சட்டசபை பெஞ்சுகள்
51 comments:
நல்லா இருக்கு... :)
வாங்க 'தமிழ்மணத்தின் செல்லப்பிள்ளை' பொன்ஸ்..
அடைமொழி எதும் கொடுக்கலைன்ன வேற ... எல்லா சங்க ஆட்களும் தனியா அறிக்கை விட்டே கொன்னுறப் போறாங்க.. :)
too much நக்கல். :O)
"எங்கள் கேள்வி ஞானம் கண்டு
வள்ளுவரே பூரிப்பார்" - இது தான் highlight.
- tamil
நான் போட்ட ரெண்டு வார்த்தை கமெண்டுக்கு, இத்தன பெரிய அடை மொழியா?? "அடை" மொழியாத்தான் இருக்கு!!!
நன்றி டமில் :)
சுகா,
தமிழகத்தின் சம கால அரசியல் கூத்துக்களை மிகவும் அருமையாகவும் சுவையாகவும் கவியாக்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
நன்றி.
அன்புடன்,
வெற்றி
காலம் மாறினும்
காட்சிகள் மாறினும்
கட்சிகள் மாறினும்
களம் மாறாத
காட்டுமரங்கள்!
நன்று நும் கவிதை!
பொன்ஸ், அடுத்த தேர்தல்ல நிக்குறீங்க தானே..அதுக்குத் தான் சரி இருக்கட்டுமேன்னு..
நன்றி வெற்றி :)
நன்றி எஸ்கே.
வன்மையாக கண்டிக்கிறேன். டமில் அல்ல தமிழ். :o)
தமிழ்,
நீங்க தானே தமிழ இங்லீஸ்ல எழுதுனது. இப்ப கண்டிக்கிறீங்களே..அதுவும் வன்மையா..
சரி சரி.. ரெம்ப தேர்தல் பதிவுகளையும் சட்டசபையையும் கவனிக்கறீங்க போலிருக்கு ...பார்த்து.. வீட்டுல டேபில கீது தட்டி உடச்சு அம்மாகிட்ட அடிவாங்கிடாதீங்க.
:-)
சரி சரி வாபஸ். எந்த மொழிக்குப் போனாலும் 'தமிழ்' தமிழாகவே இருக்கும் என நினைத்தேன். இப்படி சென்னை 'டமிழ்' ஆகி விட்டதல்லவா? I thought I was the only one browsing from office. Looks like a there is a whole lot of ppl over there….. Gud to have company.
:-D
வாங்க குமரன்..
வாங்க இலவசக்கொத்தனார்.. உங்க பேரைக் கேட்டா எல்லா கட்சியும் குழம்பிடும்ன்னு நினைக்கிறேன்.. நாம இலவசமா 'கொத்தனார்' தர்றதா அறிவிக்கவே இல்லையேன்னு..
தமிழ்,
ஆபிஸ் வேலை இல்லாத சமயங்களில் சிறிது இணையத்துக்கும் ஈயப்படும்.
என்ன பண்ண.. லாங் வீக்கெண்ட்க்கு அப்புறம் ..இப்பிடித்தான்..
அதனால் தான் கரைவேட்டிகள் அமர
படும் அங்கங்கள்
எங்களை இன்னும் அசிங்கப்படுத்துகின்றன.
super line ...
soooperr..
//யாமரியோம்
//
itha mattum konjam maathunga thalaiva...
santharpa soozhnilaigalaal tamilla type pannamudiyala...mannikkkavum..
நன்றி கப்பி பயல் :) & அனானி..
நன்றி இளைஞன்..
கப்பி பய (ஏன் இப்பிடி ஒரு பேரு :)
பிழையை திருத்தீட்டேன் . சுட்டியதற்கு நன்றி.
ம்.. இது சட்டசபை பெஞ்ச்சுகளுக்கு மட்டுமா என்ன..? ;)
அனானி :-)
கொஞ்சம் கூர்மைதான் நீங்க.
//Anonymous said...
ம்.. இது சட்டசபை பெஞ்ச்சுகளுக்கு மட்டுமா என்ன..? ;)//
இல்ல அந்த பெஞ்ச செஞ்சவங்களுக்கும் தான்:-) சரியா சுகா?
நல்ல கவிதை!
//ஆபிஸ் வேலை இல்லாத சமயங்களில் சிறிது இணையத்துக்கும் ஈயப்படும்//
இணைய வேலை இல்லாதெபோது சிறிது
ஆபீஸ் வேலைக்கும் ஈயப்படும்.
போச்சுடா! அடை மொழி வேற குடுத்துட்டீங்களா?
உடனே "அடை" செய்வது எப்படின்னு பதிவு போடப் போறாங்க!
//நாம இலவசமா 'கொத்தனார்' தர்றதா அறிவிக்கவே இல்லையேன்னு.. //
:-)
//அடைமொழி எதும் கொடுக்கலைன்ன வேற ... எல்லா சங்க ஆட்களும் தனியா அறிக்கை விட்டே கொன்னுறப் போறாங்க//
கொடுத்ததுக்காவே அறிக்கை விடுவாங்க பாருங்க! இவங்க இல்லாட்டியும் பார்த்திபன், கட்டதுரைன்னு யாராச்சும் செய்வாங்க!
நன்மனம்,
சூப்பர். நீங்க பாயிண்ட பிடிச்சிட்டீங்க :)
வாழ்த்துக்கள்,
சுகா
சிபி,
இந்த ப்ரோட்டொகால் தெரியலையே..
ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா பதில் எழுதனும் ஒகே..
ஒவ்வொரு மறுமொழிக்கும் தனி தனி மறுமொழி எழுதனுமா என்ன !!??
ரெம்ப நன்றி.
சிபி,
//
உடனே "அடை" செய்வது எப்படின்னு பதிவு போடப் போறாங்க!
//
அமரிக்காவுல அடை செய்ய சொல்லித் தந்தா புண்ணியமா போகும்
//கொடுத்ததுக்காவே அறிக்கை விடுவாங்க பாருங்க! இவங்க இல்லாட்டியும் பார்த்திபன், கட்டதுரைன்னு யாராச்சும் செய்வாங்க! //
கட்டதுரை, பார்த்திபன் இவங்களுக்கு இந்த இடம் தெரியாது.. வந்ததே இல்ல..அதனால தப்பிச்சேன். வந்தா அதுக்கு நீங்க தான் காரணம இருப்பீங்க :)
//
இணைய வேலை இல்லாதெபோது சிறிது
ஆபீஸ் வேலைக்கும் ஈயப்படும்.
//
ஹும்... இங்க அடிச்சு விளையாடும்போதே நினைச்சேன்
:)
//கட்டதுரை, பார்த்திபன் இவங்களுக்கு இந்த இடம் தெரியாது.. வந்ததே இல்ல..//
கட்டதுரை, பார்த்திபன் போன்ற புல்லுருவிகளுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் உங்களுக்கு சரி சமமாய் எதிர்த்து நிற்க எங்கள் சங்கத்தில் வீரர் எவரும் இல்லையே என எள்ளி நகையாடினீர்களே! அதற்கு பதிலடி தர இதோ இது நாள்வரை உறங்கியிருந்த எங்கள் சங்கத்துச் சிங்கம் சுகா இன்று விழித்துக் கொண்டது, இனி நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள் என்று உங்களை நான் எச்சரிக்க விரும்புகிறேன்.
மேலும் எங்கள் சங்கத்து மகளிரணியின் மாசற்ற மாணிக்கம், ஆற்றலரிசி பொன்ஸ் இதுபற்றி விரிவான அறிக்கையை எங்கள் சங்கப் பலகையில் தெரிவிப்பார் என்றும் கூறிக் கொள்கிறேன்.
சிபி..
இது ஓவரா இல்ல... :) சிபிச் சக்கரவர்த்தி அவர் தசையைத் தான் அறிஞ்சு கொடுத்தார்ன்னு கேள்விப்பட்டிருக்கேன்...
அறிக்கை கிறிக்கை வந்துச்சுனா பலசையெல்லாம் படிச்சு பிரிப்பேர் பண்ணனுமே .. சரி ஆனது ஆகட்டும் ..
இப்பத் தான் functional spec க்கு எல்லாரும் பின்னூட்டமிடுங்கன்னு சொல்லி மெய்ல் அனுப்ப இருந்தேன்.. நல்லவேளை சுதாரிச்சுட்டேன் :)
இன்னாபா! யாராச்சும் கூப்பிட்டுக்கினீங்களா?
ஓ.. வாங்க பார்த்திபன் ..
எங்கயோ ஆரம்பிச்சு இங்க வந்து நிக்குது .. நீங்களே படிச்சு பாருங்க
சபாஷ் சுகா.. தமிழ்மணத்தில் நான் படித்த கவிதைகளில் மிகவும் அற்புதமான ஒன்று. எதாவது பத்திரிகைக்கு அனுப்பிப்பாருங்களேன்.
அட... நீங்க இந்தா பக்கத்துல சான் ஓசேயில தான் இருக்கீகளா? நானும் இங்கேதான் ஆபிஸ்ல இருக்கேன்.
நன்றி வெங்கட்ரமணி..
இணைய வழியாக பத்திரிக்கைகளுக்கு படைப்புகளை அனுப்ப முடியுமா என்ன?
வலைப்பூக்கள் தரம் மேம்பட நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.
அட.. அந்த க்யூப்ல உக்கார்ந்துட்டிருக்கறது நீங்க தானா.. :)
எப்பவுமே பிசியா வேலை செஞ்சிட்டிருக்கீங்களேன்னு இவ்வளவு நாள் பேசவே இல்லை :)
அப்படி போடுங்க.. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா நீங்க அந்த தெருவா நானும் அதேதெருதான், நீங்க அந்த கம்பெனியா. நானும் அதேதான்னு முடியப்போகுது. உங்கள ஜிமெயில் சேட்ல பிடிக்கமுடியுதான்னு பாக்கறேன்.
//அந்த க்யூப்ல உக்கார்ந்துட்டிருக்கறது நீங்க தானா.. :)//
என்னப்பா? என்னாச்சு? ரெண்டு பேரும் பக்கத்துல பக்கத்துல தானா? அந்நியனைப் பார்த்தீங்களா? என்ன கெட்டப்ல இருக்காரு??
//மேலும் எங்கள் சங்கத்து மகளிரணியின் மாசற்ற மாணிக்கம், ஆற்றலரிசி பொன்ஸ் இதுபற்றி விரிவான அறிக்கையை எங்கள் சங்கப் பலகையில் தெரிவிப்பார் என்றும் கூறிக் கொள்கிறேன்.
//
சிபி, இதை என்கிட்ட சொல்லாம விட்டுட்டீங்களே?!!! மகளிர் அணில சொன்னாத்தானே அறிக்க(கை) முடியும்?!!
பொன்ஸ்..
நீங்க வேற.. அந்நியன இத்தனை நாள் கண்டுக்காம விட்டதுனால "மகாப்ளாகுசாபம்" ன்னு ஒரு தண்டனை கொடுத்துட்டார்..
நான் எழுதுன ப்ளாகெல்லம் மறுபடியும் நானே படிக்கனுமாம் :(
அந்த சங்கப்பலகை வேற ரெம்ப இத்துப் போயிருக்கு.. பார்த்து எழுதுங்க.
யார் அங்கே!!! தண்டனையை மாற்றவும்!!
"மகாப்ளாகுசாபம்" - அதற்குப் பதில், 'தமிழ் நடிகர்களின் சாஃப்ட்வேர் கம்பெனி'யின் தொடர்ச்சியை எழுதவும் :0)
தமிழ்
நடிகர்கள் எல்லாரும் களப்பணியாற்ற தமிழ் நாடு போயிருக்காங்க ..
தேர்தல் சூட்டுல வெந்து போயி..நொந்து போயி..வர்ற திங்கக் கிழமை ட்யூட்டில ஜாய்ன் பண்ணறாங்க ..
அப்பறம் என்ன நடக்குதுண்ணு சொல்லறேன்.
வரும்போது ரெண்டு மூனு மூத்த அரசியல்வாதிகளையும் கூட கம்பெனில சேர்த்தக் கூட்டீட்டு வர்றாங்க..
த.ந.சா.க என்ன ஆகப்போகுதோ தெரியலை..
தண்டனையை உடனே ஒத்துக் கொண்டதால் தங்களுக்கு 1000 தங்க காசுகள் (கஜானாவில் இருந்த்தால்!!!)
கொண்ட பொன்முடி 'Fedex புறாவிடு தூது' மூலமாக வழங்கப்படும்.
- தமிழ்
தண்டனைக்கே பரிசா..
ஹும்.. பொறுத்திருந்து பாருங்க .. இது எனக்கு தண்டனையா ..இல்ல உங்களுக்கான்னு.. :)
எல்லாத்துலயும் எதாவது ஒரு அரசியல் உள்குத்து (அப்பா..இந்த வார்த்தைய நானும் பயன்படுத்தீட்டேன்) இருக்குதல்ல ..
//(அப்பா..இந்த வார்த்தைய நானும் பயன்படுத்தீட்டேன்)//
ஒரு சீனியர் வலைப் பதிவர் என்ற நிலைக்கு முன்னேறியிருக்கிறீர்.
ஹ ஹா .. தன்யனானேன் சிபி.
சுகா,
நல்ல கவிதை!. மரங்கள் என்று படித்த போது, பஞ்சாயத்து செய்யும் இடம் என்று நினைத்தேன். பிறகு தான் பெஞ்சுகள் என புரிந்தது.
வித்தியாசமான கவிதை! வாழ்த்துக்கள்!!
ஆமாம். சட்ட சபையில் வெறும் 100 பெஞ்சுகள் தானா??
நன்றி!
Post a Comment