Sunday, April 02, 2006

குழந்தைக் கவிஞர்...??

குழந்தைக் கவிஞர்...??
எனக்கு உறுதியாகத் தெரியவில்லை..இந்தப் பாடலை எழுதியவர் வள்ளியப்பா அவர்களா என்று. ஆனால் அவராக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

என் இரண்டாம் வகுப்புப் பாடநூலில் வந்த பாடல்... ஆசிரியர் ஆட்டம் பாட்டத்தோடு சொல்லிக் கொடுக்க இன்றும் மழையைக் கண்டால் இந்தப் பாடல் மனதிற்கு வராமல் போகாது.. சில வரிகள் நினைவினில் இல்லை.. யாரேனும் நியாபகப்படுத்தினால் மகிழ்ச்சி.


வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா

இடியிடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்

மின்னலொரு நாட்டியம்
மேடை வான மண்டபம்

தூறலொரு தோரணம்
தூய மழை காரணம்

எட்டு திக்கும் காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே

தெருவெங்கும் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே

தவளை கூட பாடுமே
தண்ணீரிலே ஆடுமே

..... வேடிக்கை
ஆண்டு தோறும் வாடிக்கை

இந்தப் பாடலைக் நினைக்கும் போது ஏதோ ஒரு கிராமத்து ஓட்டுவீட்டின் திண்ணையில் அமர்ந்து வீதியில் பெய்யும் மழையை ரசிக்கும் குழந்தை போலுணர்வதைத் தவிர்க்க முடியவில்லை.

நகரத்து மழை பற்றிய என் கவிதை முயற்சிக்கு வித்திட்டதும் இந்த பள்ளிப்பாடலின் நினைவுகளே..

29 comments:

ஜீவா (Jeeva Venkataraman) said...

நல்ல பாடல் சுகா. சமீப திரைப்படபாடல் ஒன்று - மழையே மழையே நீரின் திரையே.... என்று - கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
்ச்சுசுட்டி இங்கே:
http://www.musicindiaonline.com/p/x/Crvg4iWSW9.As1NMvHdW/

Anonymous said...

test

நாமக்கல் சிபி said...

அட! இந்தப் பாடல் நாம் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது தமிழ் பாடத்தில் இருந்தது! நல்ல பாடல்தான்!

Suka said...

சிபி,

இரண்டாம் வகுப்பிலா மூன்றாம் வகுப்பிலா... !?!

சரி ..என்ன பழையதைப் பார்த்துட்டிருக்கீங்க ;)

நாமக்கல் சிபி said...

எனக்கு மூன்றாம் வகுப்பில் படித்ததாகத்தான் ஞாபகம்.

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.....

//சரி ..என்ன பழையதைப் பார்த்துட்டிருக்கீங்க //

அட மறுமொழுப் பட்டியல்ல இருந்தது. என் உடன் டிப்ளமோ படித்த நண்பர் ஒருவருக்கு நாங்கள் கு.க என்று பெயர் வைத்திருந்தோம்.

(கு.க என்றால் குழந்தைக் கவிஞர், வேறு ஏதாவது எடுத்துக் கொள்ளக்கூடாது)

Suka said...

ம்... ஆமாம் ..மூன்றாம் வகுப்புதான்..

அந்த சிவப்பு சட்டையைக் கழட்டி புகைவண்டிய நிறுத்துன சிறுவன் கதையும் முன்றாவது தானா !?

எனக்கென்னமோ பிராக்கெட்ல எதாவது எழுதினாலே வெவகாரமாத் தான் இருக்கும்ன்னு தோனும் :)

நாமக்கல் சிபி said...

//அந்த சிவப்பு சட்டையைக் கழட்டி புகைவண்டிய நிறுத்துன சிறுவன் கதையும் முன்றாவது தானா !?
//

இல்லை! அது நான்காம் வகுப்பில் என்று நினைக்கிறேன்.

நாகன் என்ற நபர் சிகப்புச் சட்டையைக் கழற்றியபடி தண்டவாளத்தில் சென்று ரயிலை நிறுத்துவது.

மூன்றாம் வகுப்பில் "வீரச்சிறுமி கலியாணி" என்ற ஒரு பாடம் உண்டு. தண்ணீரில் விழுந்த சிறுவனின் தலை முடியைப் பிடித்து இழுத்து காப்பாற்றும் சிறுமியின் படம் இருக்கும்.

நாமக்கல் சிபி said...

//எனக்கென்னமோ பிராக்கெட்ல எதாவது எழுதினாலே வெவகாரமாத் தான் இருக்கும்ன்னு தோனும் :) //

நமக்கும் அப்படியே! :-)

Suka said...

ஆஹா.. சிபி..கலக்கரீங்க..

நான் சரியா படிக்கலை :( அப்ப இருந்தே சாய்ஸ்ல விட ஆரம்பிச்சுட்டேன் போல...

அனேகமா புத்தர் கதை ஒன்னை ரெண்டாவதுல படிச்ச நியாபகம் ..இதாவது தேறுமா?

நாமக்கல் சிபி said...

//அனேகமா புத்தர் கதை ஒன்னை ரெண்டாவதுல படிச்ச நியாபகம் //

இருக்கலாம். இரண்டாம் வகுப்பு பற்றி எனக்கு அவ்வளவாய் நினைவில் இல்லை.

ஒன்றாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் அட்டைப்படம் படுத்திருக்கும் புலிதானே!

அப்புத்தகத்தில்

"யானை யானை அழகர் யானை
அழகரும் சொக்கரும் ஏறும் யானை
கட்டிக் கரும்பை முறிக்கும் யானை
காவேரித் தண்ணீரை கலக்கும் யானை
.....
குட்டி யானைக்கு கொம்பு முளைச்சிதாம்
பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சிதாம்"

"காட்டுப் பாக்கம் தாத்தாவுக்கு
காடு போலத் தாடியாம்
மாடி மேலே நிற்கும்போதும்
தாடி மண்ணில் புரளுமாம்
......................"


அ - இது ஓர் அத்திப்பழம்
ஆ - எம்பவன் ஆசைப்பட்டான்
இ - என்பவன் இதோ என்றான்
ஈ - என்பவன் ஈ என்றான்
உ - என்பவன் உரி என்றான்
ஊ என்பவன் ஊது என்றான்
எ என்பவன் எனக்கு என்றான்
ஏ என்பவன் ஏது என்றான்
ஐ என்பவன் ஐயா என்றான்
ஒ என்பவன் ஒன்று என்றான்
ஓ என்பவன் ஓடி விட்டான்
ஔ என்பவன் கௌவிக் கொண்டான்


தம்பி பாடல்

போன்ற பாடல்கள் இடம்பெற்றிருக்கும்.

நாமக்கல் சிபி said...

மூன்றாம் வகுப்பிலேயெ மதுரையைப் பற்றிய பாடமும் உண்டு!

நாமக்கல் சிபி said...

இதே போல ஒரு பாடல் நான்காம் வகுப்பிலும் உண்டு.

"ஆற்று வெள்ளம் நாளைவரத் தேற்றுதே குறி
மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே...."

என்ற பாடல் அருமையாக இருக்கும்.
நான் வெறும் மனப்பாடப்பாடலாக அல்லாமல் ரசித்து விரும்பிய பாடல்களில் அதுவும் ஒன்று.

Suka said...

//"காட்டுப் பாக்கம் தாத்தாவுக்கு
காடு போலத் தாடியாம்
மாடி மேலே நிற்கும்போதும்
தாடி மண்ணில் புரளுமாம்
......................"//

இது மட்டும் தான் நியாபகமிருக்கிறது :(

தாத்தாவின் தாடி படம் கூட நியாபகம் இருக்கிறது.

ஹா.. அந்த எலி பானையில் புகுந்து சாப்பிட்டு குண்டாகி வெளியே வராமல் போன பாட்டு/கதை நியாபகம் வருது.

நீங்க சொன்ன வீரச்சிறுமிகதையும் நியாபகம் வந்து விட்டது..

ஒன்னாம் வகுப்பில மாக்குட்டி பென்சில்ல எழுதுனதெல்லாம் மறந்துபோச்சு :(

சிபி,
பரஞ்சோதி பதிவுல இந்தப் பாட்டை ஏத்திவிடுங்க ..அங்க செம கலெக்ஷன் இருக்கு.

பரஞ்சோதி said...

நண்பரே!

உங்க பதிவின் மூலமாக நிறைய பாடல்கள் கிடைத்திருக்கிறதே :)

நானும் பள்ளியில் சிறுவன் சிவப்பு சட்டையை காட்டி ரயில் வண்டியை நிறுத்துவதை படித்திருக்கிறேன், அது மாதிரியே நேரு மாமா பொந்தில் விழுந்த பந்தை எடுக்க தண்ணீரை ஊற்றி எடுக்கும் கதை.

அதை எல்லாம் படித்து, நானும் அது மாதிரி என் வயசு பசங்க முடியாது என்ற நிலையில் சில காரியங்கள் செய்து நல்ல பெயரும், சில சமயம் அடியும் வாங்கியிருக்கிறேன்.

Suka said...

அட.. வாங்க பரஞ்சோதி.

உங்க பெயர்க்கு அலர்ட்டர் எதாவது வெச்சிருக்கீங்களா என்ன.. பெயரைச் சொன்னவுடன் டக்குனு வந்திருக்கீங்க :)

//அது மாதிரியே நேரு மாமா பொந்தில் விழுந்த பந்தை எடுக்க தண்ணீரை ஊற்றி எடுக்கும் கதை.//

ஆஹா.. நானும் படித்திருக்கேன்..

நாங்க வெளையாடுற பந்து எல்லாம்.. கார்த்திகேயா மில் (நரேன் கார்த்திகேயனுடையது) காம்ப்பௌண்ட்லயல்ல விழுந்துச்சு .. அதனால கயித்துல கூடையக் கட்டி ..
கால ரெண்டு பேர் பிடிச்சுக்க..
காம்ப்பௌண்ட்க்கு அந்தப்பக்கம் தலகீழாத்தொங்கி..
கூடைய குறிபார்த்து வீசி ..
பந்த எடுக்கறதுக்குள்ள ...
உஸ்ஸ்ஸ்..அப்பா...கிரிக்கெட் ரெம்ப கஸ்ட்டமான விளையாடு தான் போங்க :)

பொன்ஸ்~~Poorna said...

//"காட்டுப் பாக்கம் தாத்தாவுக்கு
காடு போலத் தாடியாம்
மாடி மேலே நிற்கும்போதும்
தாடி மண்ணில் புரளுமாம்
//
சூப்பர் சிபி, இது என்னோட ரொம்ப பிடிச்ச பாட்டு.. முழுப் பாட்டும் கிடைக்குமா?

குமரன் (Kumaran) said...

:-)

நாமக்கல் சிபி said...

//சூப்பர் சிபி, //


பாராட்டுக்கு நன்றி!


//இது என்னோட ரொம்ப பிடிச்ச பாட்டு.. //
எனக்கும்தான்.

//முழுப் பாட்டும் கிடைக்குமா?
//
முயற்சி செய்கிறேன்.

நாமக்கல் சிபி said...

பொன்ஸ், இதோ நீங்கள் கேட்ட பாடல்.
(ம்க்கும் ஏதோ நேயர் விருப்பம் காம்பியர் மாதிரி, எதுக்கு இந்த பில்டப்பு)

காட்டுப் பாக்கம் தாத்தாவுக்கு
காடு போலத் தாடியாம்
மாடி மேலே நிற்கும் போதும்
தாடி மண்ணில் புரளுமாம்

ஆந்தை இரண்டு, கோழி, மைனா
அண்டங்காக்கை குருவிகள்
பாந்தமாகத் தாடிக்குள்ளே
பதுங்கிக் கொண்டிருந்தன

உச்சி மீது நின்ற தாத்தா
உடல் குலுங்கத் தும்மினார்
அச்சு அச்சு என்ற போது
அவை அனைத்தும் பறந்தன.

-----------------------------
பாடல் கிடைத்த சுட்டி:
http://contivity.blogspot.com/2005/07/blog-post_27.html

நாகு said...

சிபி, அதே புலிபடம், பழசை அசைபோட வைச்சீட்டீங்களே! அந்த காட்டுப்பாக்கம் தாத்தாவுக்கு பாட்டு என்றைக்குமே அந்தப் பழைய நினைவை ஏற்ப்படுத்தும். எங்க டீச்சர் அந்த தாத்தாவோட தாடியை, போர்டிலே பெரிசா சாக்குபீசால வரைஞ்சு, குருவி....படமெல்லாம் போட்டு....ம்ம்ம்....... ஆங்.... அந்த விஜயா டீச்சர், ஓணாண் குச்சு வச்சு பாடம் சொல்லி கொடுத்தது....ஒவ்வொன்னா நியாபகத்து வருது.

Suka said...

நாகு ..

இங்க நிறையா பேருக்கு கொசுவர்த்தி சுத்தீட்டிருக்கு.. வாங்க வாங்க..

Suka said...

நன்றி சிபி..

இந்தப்பாட்டு பரஞ்சோதிக்கு ஒரு பார்சல் ப்ளீஸ்..

கைப்புள்ள said...

ஆஹா! உங்களுக்கும் ப்ளாஷ்பேக்னா ரொம்ப புடிக்கும் போலிருக்கே? முன்ன தூர்தர்ஷன்...இப்ப பழ.வள்ளியப்பாவா? ஆனா எப்படியோ மறக்க முடியாத நினைவுகளாத் தான் கொண்டு வரீங்க மனத்திரைக்கு. பழ.வள்ளியப்பா பேரைப் பாத்ததும்...காட்டுப்பாக்கம் தாத்தா பாட்டைப் பின்னூட்டமாப் போடலாம்னு நெனச்சேன்...அதுக்குள்ள சிபி போட்டுட்டாரு.
:)-

Keep flashing back. அது நல்லாயிருக்கு.

S. அருள் குமார் said...

ஆமாம் சுகா. இது அழ. வள்ளியப்பா எழுதிய பாடல்தான். கொஞ்ச நேரம் பள்ளிக்கூட நாட்களுக்கு போய்வந்துவிட்டேன், உங்கள் பதிவையும் மறுமொழிகளையும் பார்த்து!

Suka said...

வாங்க கைப்புள்ள..

தாடி தாத்தா பாட்டுக்குத்தான் எவ்வளவு ரசிகர்கள் ..

பழைய நியாபகங்கள் நம்மள சின்னப்புள்ளயாவே மாத்திடுமே.. யாருக்குத்தான் பிடிக்காது..

இன்னும் ஒன்னு எழுதீட்டிருக்கேன்.. அதுவும் இதே மாதிரிதான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்..

Suka said...

வாங்க அருள்..

உண்மைல... இப்ப இந்தப்பாட்டெல்லாம் பாடத்துல இருக்கான்னு தெரியல .. ரெண்டாவதுல இருந்தே ஜாவா சீ ன்னு ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுடுவாங்க..

எப்படியோ நாம தப்பிச்சோம் ;)

பரஞ்சோதி said...

நன்றி நண்பர்களே!

இங்கே கிடைத்த பாடல்களை சிறுவர் பாடல்கள் பகுதிக்கு கொண்டு செல்கிறேன்.

மேலும் பாடல்கள் கிடைத்தால் எனக்கு அனுப்பி வையுங்கள்.

paransothi@gmail.com

நன்றியுடன்
பரஞ்சோதி

Suka said...

வாங்க பரஞ்சோதி..

உங்க பாடல் தொகுப்பு குழந்தைகளுக்காக மட்டுமல்ல.. மலரும் நினைவுகளால் எங்கள் அனைவரையும் பள்ளிக்கு அனுப்பிவிடுகிறது :)

வாழ்த்துக்கள்

Suka said...

நண்பர் விருபா இந்த பாடலை எழுதியவர் முனைவர் பொன். செல்வகணபதி அவர்கள் என்ற தகவலை தெரியப்படுத்தினார்.

மேலும் அதிக தகவலுக்கு :
http://viruba.blogspot.com/2007/10/blog-post.html

மிக்க நன்றி விருபா.