Friday, July 21, 2006

தெளிவு

இன்னும் புரியவில்லை
ஒருவேளை புரிந்தும் கூட இருக்கலாம்
ஆனால் புரியாதது போல் தோன்றலாம்
புரிந்ததே புரியாமல் போய்விட்டதா
புரியவேண்டியதைப் பற்றிய ஏக்கம் தான் காரணமோ..
இல்லை .. உண்மையிலேயே புரிந்து கொள்ளத்தான் முடியவில்லையா..
புரியவேண்டியதே இருந்தாலும்
புரியவேண்டியதன் எதிர்பார்ப்புத்தான் ஒருவேளை
இப்படிப் புரியத் தூண்டுமோ என்ற எச்சரிக்கை
ஒருவேளை புரியாமலிருக்கச் செய்கிறதோ..
புரிந்ததா புரியவில்லையா எனப் புரியவில்லையென்பது மட்டும்
தெளிவு..

21 comments:

பொன்ஸ்~~Poorna said...

சுத்தம்!!! :))

வெற்றி said...

சுகா,
என்ன சொல்ல வருகிறீர்கள்?
நான் ஒரு ரியூப் Light. நீங்கள் இப்படி பாலச்சந்தர் படங்களில் வருவது மாதிரி புதிர் போட்டுச் சொன்னால் எனக்குப் புரியாது. ஏதோ எனக்கும் புரியக்கூடிய மாதிரி என்ன சொல்ல வருகிறீர்கள் எனச் சொன்னால் உதவியாக இருக்கும்.

"தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
தெரியாமல் போனாலோ வேதாந்தம் "

கவியரசர் சொன்னதையா சொல்ல வருகிறீர்கள்?

Suka said...

வெற்றி,

பட்டிமன்றங்களில் அறிவொளி அவர்கள் பேசுவதைப் பார்த்திருக்கிறீர்களா.. இது அதன் பாதிப்பு :) பெரிய விஷயமெதுமில்லை. நேரவிரயமெனில் மன்னிக்கவும்.. வெள்ளிக்கிழமை தானே.. :)

சுகா

Suka said...

பொன்ஸ்,

புரிதலுக்கு நன்றி :)

Nakkiran said...

நன்றாக புரிந்தது...உங்களுக்கு பொழுது போகவில்லையென்பது... :-)

நன்மனம் said...

//நேரவிரயமெனில் மன்னிக்கவும்.. வெள்ளிக்கிழமை தானே.. :) //

ஆகா பதிவ ரெண்டு தடவ படிச்சு, உ.கு.... வெ.கு.... கண்டு பிடிக்க முடியாம..... பின்னூட்டத்துலயாவது தெளிவா குழம்பலாம்னு பாத்தா.....

இப்படி போட்டு தாக்கிட்டீங்களே!!!!!

இத மாதிரி நீங்க மட்டும் தானா இல்ல ஒரு "குரூப்பா" திரியரீங்களா :-)

முன்னாடியே சொல்லிட்டா நல்லா இருக்கும் :-)

Suka said...

நக்கீரன்,

நீங்க சொல்றதும் உண்மைதான்.. ஆனா ஒருவிதத்துல இது என் சுயநிலைவிளக்கம் :)

நன்மனம்,

(விக்ஸ் ஏக்ஸன் 500 விளம்பர பாணில படிக்கவும் )

நபர் 1: எதாவது படிச்சா அதுல உள்குத்து இருக்குன்னு தோணுதா..

நன்மனம் : ஆமா..

நபர் 1: யார் எதுக்காவது திட்டினாலும் அதுக்கு சாதி/இடஒதுக்கீடு/தமிழ் அர்ச்சனை/ பிரச்சனை காரணமாயிருகலாம்ன்னு தோணுதா..

நன்மனம் : ஆமாம்ப்பா

நமர் 1: எதாவது பேசுனா முத்திரை குத்திடுவாங்கன்னு பயமா இருக்கா..

நன்மனம் : அட..ஆமாம்பா ஆமாம்

நமர் 1: அப்ப உங்களுக்கு உள்குத்துமேனியா வந்துடுச்சு ..இணையப் பக்கமே வராம ரெண்டு நாள் ரெஸ்ட் எடுக்காம இருங்க :)

விளையாட்டுக்குத் தான் .. கோவிச்சுக்காதீங்க :)

பொன்ஸ்~~Poorna said...

//நன்மனம் : அட..ஆமாம்பா ஆமாம்

நமர் 1: அப்ப உங்களுக்கு உள்குத்துமேனியா வந்துடுச்சு ..இணையப் பக்கமே வராம ரெண்டு நாள் ரெஸ்ட் எடுக்காம இருங்க :)//

::))))))))))))))))

இதைத் தனிப் பதிவாவே போட்டிருக்கலாமே?!!

கோவி.கண்ணன் said...

குழம்பிய குட்டிடையில் தேடிய மீனா ?

ஒன்றும் புரியவில்லை என்பதை தெளிவாக எழுதியிருந்தால் ஒரு வேளை புரிந்திருக்கும் !

நன்மனம் said...

//உள்குத்துமேனியா//

அட நீங்க வேற.... இந்த மேனியா இல்லனா இந்த பக்கமே வராதீங்கனு சொல்றாங்க.... நீங்க என்னடானா....

அது சரி.... இந்த மேனியா இருக்கறவங்களுக்கு "நபர்" திரிஞ்சு "நமர்" ஆகிடுமா இல்ல எல்லாருக்கும் அப்படி தானா :-)

Suka said...

நன்மனம்..

'எழுத்துப்பிழை' வேலைய நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா...

வெள்ளிக்கிழமை சாயங்காலத்துல ஒருசில எழுத்துப்பிழைகள் சகஜம் :)

எனக்கு உள்குத்துஃபோபியா தான் ...
ஒருவேளை இப்பிடி நெனச்சுக்குவாங்களோ.. அப்பிடி நெனச்சுக்குவாங்களோன்னு :P

குத்துச்சண்டைல எஞ்சாய் பண்ணுங்க .. காது பத்திரம் :)

Suka said...

கண்ணன்..

ஒருவரில சுருக்கம சொல்லறமாதிரி இருந்தா நாங்க யுனிவர்சிட்டி எச்ஸாம்லாம் பாஸ் பண்ணிருக்கறதே கொஞ்சம் சிரமம் தான் :)

Suka said...

பொன்ஸ்.. நாலுகண்ணோட சிரிச்சதுக்கு நன்றீ.. இந்த பதிவே வேஸ்ட் போல .. இதுக்கு ஒரு தனிப்பதிவா.. நன்மனம் .. ஆள் வெச்சு குத்திடுவார்.. :)

கைப்புள்ள said...

உங்களை மாதிரியே எனக்கும் ஒன்னும் புரியலைன்னாலும், திரு.அறிவொளி அவர்களை நினைவு படுத்தியதற்காக ஒரு நன்றி. இது மாதிரி நெறைய சொல்லுவார். ஒன்னுமே ஞாபகம் இல்லைன்னாலும் அவர் பேசுவதை கேட்ட போது உண்டான மகிழ்ச்சி இன்னும் நினைவில் உள்ளது.

Suka said...

நன்றி கைப்ஸ்..

இதோ எனக்கு நியாபகம் இருக்கறதுல ஒண்ணு.. :)

அறிவொளி: "தப்பு தப்பா இல்லைன்னா அதுவே பெரிய்ய தப்பாகிடும்"

நடுவர் : "ஆரம்பிச்சிட்டீங்களா.. இத புரியர தமிழ்ல சொல்லுங்க "

அறிவொளி : "இப்ப ..ப்ரஸர் குக்கர்ல .. ரப்பர் எல்லாம் போட்டு கெட்டியா மூடி வைக்கிறோம் இல்லையா.."

நடுவர் : ஆமாம்..

அறிவொளி : இப்ப அதுல ஆவி லீக் ஆச்சுனா.. அது தப்பு தானே..

நடுவர் : ஆமாம்..

அறிவொளி : அதுலயே சேப்டி வால்வ் வச்சிருப்பாங்கள்ள.. அது எதுக்கு ..அபாய கட்டத்துல ஆவி லீக்
ஆகத்தானே... அதாவது அங்க தெரிஞ்சே ஒரு தப்ப வச்சிருக்காங்க...

இப்ப அந்த தப்ப சரி செய்யறேன் பேர்வழின்னு அத நிரந்தரமாஅடைச்சுட்டீங்கன்னா.. சேப்டி வால்வ் வேலை செய்யலைன்னா...

குக்கரே வெடிச்சு பெரிய தப்பாகிடும்..

அதுதான் "தப்பு தப்பா இல்லைன்னா அதுவே பெரிய தப்பாகிடும்"

அரங்கு : கரகோஷம்


===

சுகா

கைப்புள்ள said...

//வால்வ் வேலை செய்யலைன்னா...

குக்கரே வெடிச்சு பெரிய தப்பாகிடும்..

அதுதான் "தப்பு தப்பா இல்லைன்னா அதுவே பெரிய தப்பாகிடும்"

அரங்கு : கரகோஷம்//

சூப்பருங்க. உங்களுக்கு அபார நியாபக சக்தி தான். இன்றைய நாளை மகிழ்ச்சிகரமாகத் துவங்க உதவியமைக்கு இன்னுமொரு டாங்ஸுங்கோ.
:)

Suka said...

:) Happy weekend (இனிய வாரக் கடைசி.. ன்னா எதோ திட்டற மாதிரியல்ல இருக்கு)

நன்மனம் said...

சுகா!

என்ன சாப்டீங்க இன்னிக்கு. பயங்கர "பார்ம்"ல இருக்கீங்க.

//சூப்பருங்க. உங்களுக்கு அபார நியாபக சக்தி தான். இன்றைய நாளை மகிழ்ச்சிகரமாகத் துவங்க உதவியமைக்கு இன்னுமொரு டாங்ஸுங்கோ//

வழி மொழிகிறேன். நன்றி.

:-)

Syam said...

புரியர மாதிரி இருந்தாலும் புரிய மாட்டேங்குது..ஆனா அத பிரஷர் குக்கர் வெச்சு புரியவெச்சுடீங்க...:-)

Suka said...

நன்றி நன்மனம்.. வெள்ளிக்கிழமை உற்சாகம் தான் எல்லாம்.. :) இப்ப எல்லாம் போயே போச்சு..

Suka said...

நன்றி ஸ்யாம் .. :)