Thursday, May 25, 2006

ஒரு ரோஜாச்செடி வாங்க வேண்டும் :)


இதற்காக நான் இந்தக் கடைக்கு வந்துள்ளேன். இது ஒரு அழகான வித்தியாசமான கடை. முற்றிலும் கண்ணாடிச் சுவர்களாலானது. அதனால் சுற்றி நடப்பவை எல்லாம் தெளிவாகவே தெரிகிறது.

இந்த வழியாகச் சாலையில் செல்லும் போது பார்த்திருக்கிறேன், ஆனால் இவ்வளவு சீக்கிரமாக நானும் இங்கே நுழைவேன் என்று எண்ணவில்லை.

இது சற்று வித்தியாசமான கடை என்று சொன்னேனல்லவா. ஏனெனில்...

வழியெங்கும் இரண்டு பக்கங்களிலும் ரோஜாச்செடிகள் நிறைந்திருக்கும். நீங்கள் அதிலிருந்து பிடித்த ஒன்றைத் எடுத்துக் கொள்ளலாம். கடை எப்போதும் திறந்திருக்கும். அதனால் நீங்கள் உங்களுக்கு பிடித்ததை சாவகாசமாகத் தேடலாம்... எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உங்களுக்கிருப்பது ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே. தேர்ந்தெடுத்தபின் நீங்கள் வெளியேற வேண்டியது தான். இன்னொரு முக்கியமான நிபந்தனை, வந்த வழியில் திரும்பி வரமுடியாது. ஆம்.. இது ஒரு ஒருவழிப்பாதை.

வாயிலில் நுழைந்தவுடனேயே இன்று கூட்டம் அதிகமாக இருப்பதாக நினைத்தேன். அனால் அது நாம் ஏற வேண்டிய பேருந்து மட்டும் வருவதற்கு எப்போதும் தாமதமாவது போல் தோன்றுவது போன்ற தோற்றப்பிழையென உணர்ந்தேன்.

உயர்ந்த கூரையும் , கண்ணைக் கூசாத ஆனால் பிரகாசமான ஒளியும் இந்த இடத்தை ரம்மியாமாகக் காட்டுகின்றது. இதுவும் சிலருக்குப் பிடிக்கவில்லை போல; புலம்பல்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அவர்களின் தேவைகள் பெரியதோ என எண்ணத் தோன்றுகிறது. சரி நமது வேலையைக் கவனிப்போம்.

நுழைந்தவுடன் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தேன். ஏதோ உற்சாகத்தில் சுற்றிலும் இருந்த ஆரவாரத்தில், புதிய சூழ்நிலையின் தோற்றக் கவர்ச்சியில், சில செடிகளைக் கவனிக்காமலேயே நடந்துவிட்டிருந்தேன். முடிவு தெரியாத தோட்டமிருக்க கவலையென்ன என அலட்சியமாக நினைத்தேன். இருந்தாலும் நடையின் வேகம் சற்றே குறைந்தது.

பக்கத்தில் சில செடிகளின் பூக்கள் வெகு அழகாக இருந்தன, சில நல்ல மணம் வீசின.. சில மிக வித்தியாசமாய் இருந்தன.. ஆச்சர்யப்பட்டுக் கொண்டே என்னைக் கவர்ந்த சில செடிகளின் அருகில் சிறிது தாமதித்தேன். அதுவும் சுகமாகத்தான் இருந்தது.

தூரத்திலும் சில செடிகள் வெகு அழகாகத் தெரிந்தன. ஆனால் அவற்றிற்கான பாதை தெளிவாகத் தெரியவில்லை. நான் நடந்து கொண்டிருக்கும் பாதையில் பிரியும் சில கிளைப்பாதைகள் என்னை அங்கே கொண்டு சேர்க்கலாம்... சேர்க்காமலும் போகலாம். கிளைப்பாதைகளில் காலடித்தடங்கள் அவ்வளவாக இல்லை.

சரி.. இதில் போகலாமா என யோசித்துக் கொண்டே, மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என கவனித்தேன்.

ஹும்.. ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விஷயத்தில் வித்தியாசமாகவே இருப்பதாகத் தோன்றியது.

சிலர் தனியாக வந்து தேடிக்கொண்டிருந்தனர். சிலர் பலருடன் வந்து கூடி விவாதித்துத் தேடிக் கொண்டிருந்தனர்.

சிலர் என்ன தேடவேண்டும் என்று தெரியாமல் தேடுவதைப் போல இருந்தது. சிலரோ மிகத் தெளிவான குறிக்கோளில் உறுதியாகத் தேடிக்கொண்டிருந்தனர்.

சிலர் மிகக் குறைவான கால அவகாசம் இருப்பதைப் போல வேகமாக அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். சிலர் ஏதோ கட்டாயம் போல ஒவ்வொரு செடியையும் வேண்டா வெறுப்பாகப் பார்த்து முகம் சுளித்துக் கொண்டிருந்தனர்.

சிலர் ரோஜாச்செடியின் பெயரை எழுதிவைத்து அதிலே எதோ ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர். சிலர் ஏதோ அளவுகளைக் குறித்தவண்ணம் இருந்தனர்.

சிலர் என்னைப் போல் மற்றவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களின் காரணம் வேறாகவும் இருக்கலாம்.

சிலர் யார் யாரிடமோ ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தனர். சிலர் அறிவுரைகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தனர்.

சிலர் ஒரமாக ஒதுங்கி, அவசரப் பட்டுக் கடந்து வந்த ரோஜாச்செடியை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் அங்கேயே பலகாலமாக எங்கித் தவித்துக் கொண்டிருப்பதைப் போல் தோன்றியது.

சிலர் உற்சாகமாக மகிழ்ச்சியுடன் தேடிக் கோண்டிருந்தனர். சிலர் களைத்துப் போயிருந்தனர்.

சிலர் கையில்செடியுடன் சந்தோசமாக வெளியேறும் வழியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் கடக்கும் சில செடிகளைப் பார்க்கும் ஏக்கப் பார்வையும் லேசாகத் தெரிந்தது.

சிலர் வழக்கமான வழிகளைத் தவிர்த்து மற்றவழிகளில் நடந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து வெளிப்படையாகச் சிலர் பரிதாபித்தும், சிலர் பரிகாசித்தும் கொண்டிருந்தனர்.

இந்தக் கடையின் இன்னொரு சிறப்பம்சம் இதன் முடிவே தெரியாததுதான். கடந்து வந்த பாதையின் தூரமும் , பார்க்கப்பட்ட செடிகளின் அலுப்பும் , கடையின் முடிவு அருகிலிருக்கிறது என்ற புரளிகளின் பயமும் சிலரின் பயணத்தை விரைவாக முடித்து வைக்கிறது.

நான் தனியாகவே வந்திருந்தேன். சிலர் இலவசமாகக் கொடுத்த அறிவுரையைத் தவிர்த்து தனியே எனக்குப் பிடித்த ஒரு கிளைப் பாதையில் செல்ல முடிவெடுத்தேன்.

என் பின்னே படப்படும் பரிதாபங்களும் பரிகாசங்களும் சிலவேலைகளில் முதுகில் உறைக்கத்தான் செய்கின்றன. என் முயற்சி வெற்றியா தோல்வியா என இவர்கள் உணரப்போவதுமில்லை ஆனால் இவர்களின் அறிவுரை எப்போதும் இலவசம்.

மாற்றுப்பாதை எளிதானதல்ல.. வழியில் குத்திய முட்கள் சில , ஏனோ முன்பு பார்த்த.. பாதித்த செடிகளை நினைவு படுத்தின. தனிவழியின் பயங்கள் பழக்கப்பட்ட வழிகளின் சலசலப்பை விட சுகமாகவே இருக்கிறது.

ஆச்சர்யப்படும் வகையில், யாரும் பார்த்திராத சில காட்டு ரோஜாக்கள் இங்கே மலர்ந்திருக்கின்றன. புதிய முகம் கண்டு வரவேற்று அவை எஸ்டர்களை கொஞ்சம் அதிகமாகவே வீசுவது போலிருக்கிறது.. ம்.. எனது ரோஜாச்செடி அருகில் தான் எங்கோ இருக்கிறது.

19 comments:

Anonymous said...

hmm.. sonnabid u've written the blog. will read it and write my comments tomorrow :)

Suka said...

ஹ .. அனானி ஆனாலும் உங்க ரவுஸ் தாங்கல :)

Anonymous said...

hey, naanum kavidhaingara baerla eludhuvaen. but indha blog nan padika, comments adika konjam time vaenum. adhaan ok!

Anonymous said...

hey, naanum kavidhaingara baerla eludhuvaen. but indha blog nan padika, comments adika konjam time vaenum. adhaan ok!

மணியன் said...

உங்கள் தேடலின் முடிவில் வசந்தம் மலரட்டும்.:)

Suka said...

மணியன் ,

ரோஜாச் செடியைத் தேடினால் நீங்கள் வேறு பூவைத்த்ருகிறீர்களே.. :) அந்தப் படத்திலிருப்பது சங்கு புஷ்பமா (கிளிட்டோரியா டெர்னேஷியா) என்ன ?

Suka said...

கவிதைங்கற பேர்லயா .. இப்பிடியெல்லாம் சுத்தி வளைச்சு கஷ்ட்டப்படாதீங்க..

உரைநடை அலைன்மென்ட கொஞ்சம் மாத்தினாலே போதாது..? நானெல்லாம் அப்பிடித்தான் நெனச்சிட்டிருக்கேன் :)

Anonymous said...

அடப்பாவமே! நாட்டிலே இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க!! :0)

Unknown said...

கவிதை நடையில் கதையா.

நல்லாருக்கு சுகா

Suka said...

எவ்வளவு பேருன்னு தெரியல ..ஆனா சிடிஜன் அஜித் ஸ்டைல்ல சொல்லனும்ன்னா 'நான் தனி ஆளில்லை' :P)

நம்மநாடு மட்டுமில்ல பல நாட்டிலிருந்தும் கெளம்பிருக்காங்க :)

Suka said...

எவ்வளவு பேருன்னு தெரியல ..ஆனா சிடிஜன் அஜித் ஸ்டைல்ல சொல்லனும்ன்னா 'நான் தனி ஆளில்லை' :P)

நம்மநாடு மட்டுமில்ல பல நாட்டிலிருந்தும் கெளம்பிருக்காங்க :)

Suka said...

நன்றி செல்வன்..

:)

Anonymous said...

oh! adhaan US saarba neenga kilambi irukeengalo?

Anonymous said...

ரொம்ப நல்லாருக்கு. தேடிய ரோஜாசெடி கிடைத்ததா? "தனிவழியின் பயங்கள் பழக்கப்பட்ட வழிகளின் சலசலப்பை விட சுகமாகவே இருக்கிறது". - முற்றிலும் உண்மை. ஆனால், "தெரியாத சாமியை விட தெரிந்த பிசாசே பரவாயில்லை" என்று எங்கோ படித்ததாகவும் நியாபகம். :o)

Suka said...

தேங்க்ஸ்.. இன்னமும் இல்லை..

எல்லாருமே ஒரே அனானியா .. இல்ல வேறவேற ஆளா.. குழப்பமா இருக்கே.. அதுக்காகவாவது எதாவது ஒரு பெயரை எழுதிடுங்க :)

அப்புறம்.. உங்க பழமொழிபெயர்ப்பு அருமை..

கீழ இருக்கற மாதிரியான ஒரு நாலஞ்சு பழமொழிகளத் தூக்கினாலே நல்லாகிடும்ன்னு நினைக்கிறேன்.

"ஊரோடு ஒத்துவாழ்"
"known evil is better than unknow god"
"while in rome be a roman"
"man proposes god disposes"

ஹும் இன்னமும் நிறைய இருக்கு .. நியாபகம் வரலை.

Anonymous said...

anonymous gal, anonymous elaam naan thaan. Peryar: Tamil nu vechukalaamaa?

ulagathula freeya kidaikurathu rendae rendu thaan - advice, comments.

yeah! 'Birds of the same feather flock together' nu solluvaanga. adhae maadhiri 'Opposite signs thaan attract'num solluvaanga... romba yosicha, kasta dhaan

meendum adutha pathipil sandhipoam!!! Have a nice long weekend.

-tamil

Suka said...

ஹும்... ஒருவழி பண்ணறதுன்னு முடிவுபண்ணீட்டீங்க.. :)

//ulagathula freeya kidaikurathu rendae rendu thaan - advice, comments. //

நீங்க தமிழ்நாடு தேர்தல் அறிக்கையப் பார்த்திருந்தீங்கன்னா ..இன்னமும் என்னவெல்லாம் இலவசமா கிடைக்கும்ன்னு தெரிஞ்சிருக்கும் :)

Have a nice weekend.

Anonymous said...

தேர்தல் அறிக்கை - yeah! comedynaa enaku pidikum thaan. But thodarakadhaiyaa irundhaalum weekly, atleast monthly yaavadhu varanum. Ippadi 5 varushathuku oncelaam vandhaa adhuvaraikulaam wait panna mudiyuma? Hmm...

Suka said...

அஞ்சு வருசத்துக்கு ஒருமுறை வந்தாலும் , குறைஞ்சது ஒரு மாசமாவது தொடர்ந்து காமெடி பண்ணறாங்களே.. ஹும் ஆனா இந்த முறை அடுத்த காமெடி சீசன் கொஞ்சம் சீக்கிரமா வர்றதுக்கும் கூட வாய்ப்பிருக்கு..

ஆனா இப்ப சட்டசபைக் காமெடி சீசன் தான் ஆரம்பிச்சுடுச்சே.. பாவம் சட்டசபை பெஞ்சுகள் :)